இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Sunday, June 22, 2014

உங்களின் முயற்சி மிகவும் பாராட்ட பட வேண்டும் ,வாழ்த்துகள் .

யார் இந்த அருணாசலம் முருகானந்தம் ! 
அட இவரு IITல படிக்கவில்லை ! 
அமெரிக்க போய் ஸ்டாண்ட்போர்ட் உனிவேர்சிட்டி மார்க்கெட்டிங் படிக்கவில்லை !
இயற்கை எரிவாய்வுக்கு ஆசை படவில்லை, கோர்ட்க்கு போகவில்லை ! 
பரம்பரை சொத்து போல, பிரதமர் பதவிக்கு ஆசை கொள்ளவில்லை ! 
அட பாருங்க, அந்த தத்துவா, இந்த தத்துவா பேசவில்லை !
தாத்தா தயவில் வாழும் பேரனும் இல்லை ! 
அட காலேஜ் கூட போகவில்லை !
ஆனா பாருங்க மனுஷன் டைம்ஸ் இதழில் உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்க்களில் அவரும் இடம் பெற்று இருக்கிறார் ! 
ஒரு மனுசனை உழைப்பு எந்த அளவு உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று அவர் ஒரு சிறந்த உதாரணம் ! 
கோயம்பத்தூர் பக்கத்துல இருக்கற ஒரு ஊராக பகுதியில் பிறந்து, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மனிதன், இந்தியா கொண்டாவில்லை என்றாலும் உலகம் கொண்டாட காரணம் ! 
1. நாமளுக்கு கோடி கோடியாக பணம் சம்பாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லைங்க, கோயம்புத்தூர்ல ஒரு இன்ஜினியரிங் கம்பெனில ஒரு laborயாக வாழ்க்கையை தொடங்கிய மனிதம், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர் ! அது அவருக்கு ராசி நம்பர் இல்லைங்க, காரணம் வறுமை!
2. மனுஷன் , ஏன் எங்க அப்பா சொத்து சேர்த்து வைக்கவில்லை, ஏன் படிக்கலைன்னு யோசிக்கமா, பெண்கள் பிரச்சனை, பெண்கள் பிரச்சனை என்று brand செய்யப்பட்ட "‪#‎மாதவிடாய்‬" ("‪#‎menstruation‬") இயற்கை பிரச்சனையை தான் மாணவி எதிர்கொள்ளும் போது அவர்கள் 
பயன்படுத்தப் பழைய துணித் துண்டுகளைச் சேகரிப்பதை பார்த்த மனுஷன், இதில் மிகப்பெரிய தவறு, சுகாதாரம் சார்ந்த பிரச்னை இருப்தாக நினைத்தார். 
3. இதற்கு ஏன் மாற்று இருக்க கூடாது என்று நினைத்த முருகானந்தம், அதற்குள் ஒளிந்து இருக்கும் உலக வர்த்தகம் மற்றும் அதன் விலை சார்ந்த விசயங்களை உள்வாங்கிய போது அதில் இருக்கும் மார்க்கெட் பற்றி யோசிக்கவில்லை, ஆதனால் காசு இல்லாத நாம கிராமப்புற பெண்கள் எந்த அளவுக்கு கஷ்டபடுவாங்க அப்படின்னு யோசிச்சார் ! நாப்கின் செய்வதற்கான மூலபொருள் விலை ரூபாய் 2 என்றால் அதை 40 மடங்கு அதிகமாக மார்க்கெட் செய்யபடுகிறது யதார்த்த்த்தில் ! கொஞ்சம் யோசிச்சு பார்த்தார் எல்லோராலும் வாங்க முடியுமா என்று ! 
4. பழைய துணித் துண்டுகளுக்கு பதிலாக, அதற்கு மாற்றாக அவர் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்த "நாப்கின்களை" கோடி கோடியாக இன்வெஸ்ட் பண்ணி டெஸ்ட் பண்ண வாய்ப்பு இல்லாத முருகானந்தம், தான் மனைவி, தங்கள் குடுப்பம் சார்ந்த பெண்க்கள் இடம் உதவி கேட்கும் போது அவரை பைத்தியம் என்று நினைத்தார்கள் ! அவர் அறையில் பெண்கள் சார்ந்த பொருள் இருந்த போது அவங்க அம்மா பைத்தியம் என்றே முடிவு செய்துவிட்டார்கள் ! வீட்டை விட்டு வெளியே தள்ளப்பட்ட சூழ்நிலை, மனிதன் அசரவில்லை ! 
5. மெடிக்கல் காலேஜ் பெண்களிடம் உதவி கேக்கலாம் என்றால், மிகுத்த போராட்டத்துக்கு பிறகு அவர்கள் உதவ முன்வந்தார்கள், மனுஷன் ஒரு stageல விலகுகளின் ரத்த்த்தை வைத்து ஒரு bladder மூலம் தனக்கு தானே "‪#‎நாப்கின்‬" மாட்டி சோதனை செய்த சாதனை மனிதன்! இந்த உழைப்பு, இந்த வெறி அவருக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்த்து ! 
6. அவர் பட்ட கஷ்டத்துக்கு ஒரு பிரேக் through கிடைத்த்து, 
‪#‎மரச்சக்கை‬ ஒரு மாற்று பொருளாக கண்டுபிடித்தவர், அவர் நினைத்த்தை போலவே, அது ஒரு அற்புதமான மாற்றாக அமைத்த்து/// நாப்கின் செய்ய தேவையான இந்திரங்களை குறைந்த செலவில் கண்டுபிடித்து அதை இப்போது ஜெயஸ்ரீ industries என்ற பெயரில் இலவசமாக, கிராமப்புற பெண்களுக்கு கொடுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கும் ஒப்படற மனிதர் ! அவர் தயாரிக்கும் நாப்கிங்களின் அடக்கவிலை ஒரு நாப்கின் ஒரு ரூபாய் !
அருணாசலம் முருகானந்தம் இந்த மனிதனை வளைத்து போட்டு காசு பண்ண நினைக்கும் corporate சக்திகள் அதிகம், ஆனா பாருங்க என் உழைப்பு விற்பனைக்கு இல்லை என்று சொல்லிவிட்டு, மகளிர் தன்னுதவிக் குழுக்களுக்கு வழங்கி வருகிறார்.
இப்போது 21 வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல கிராமங்களும் எந்த வணிக நோக்கமும் இல்லாமல் அடிப்படை 
IIT மெட்ராஸ் இவருக்கு சிறந்த சுமூக கண்டுபிடிப்புக்கான விருதை கொடுத்த்து ! இன்னும் பல விருதுகள் ! 
https://www.youtube.com/watch?v=V4_MeS6SOwk இந்த விடியோவை மறக்காமல் பார்க்கவும் ! யதார்த்தை மொத்தமா குத்தகைக்கு எடுத்த மனிதராக நான் பார்கிறேன் ! 
பணம் வாங்கி கொண்டு விளையாடும் வீர்கள், அரசியல் லாபி மூலம் பத்மாஸ்ரீ, பத்மாவிபூஷன் விருதுகளை வாங்கும் இந்த இந்தியா திருநாட்டில் எங்க ஊரு மனுஷன் செய்த இந்த சாதனைக்கு விருது தர சொல்லி கையேந்தவில்லை, அந்த விருதுக்கு மனசாட்சி இருந்தால் அதுவே தானாக வரும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன் ! 
அற்புதமான மனிதர்கள் பிறப்பது இல்லை, நம்முடன் நம்மை சுற்றி வாழ்த்து கொன்று இருக்கிறார்கள் ! 
அருணாசலம் முருகானந்தம் அவர்களை பாராட்ட நினைக்கும் அன்பர்கள் இந்த நம்பர்ல தொடர்பு கொள்ளலாம் : 9442224069 ( தமிழ் தினசரி ஒன்றில் வந்தது ! "நம்ம நாட்டுல அதிகபட்சமா 20 சதவீத பெண்கள்தான் நாப்கின் பயன்படுத்துறாங்கனு சொல்லுது ஒரு புள்ளி விபரம். இப்போ நாகரீக வளர்ச்சியில குறைவா  இருக்கிற வடமாநிலங்களிலும் என் மிஷின் போய் சேர்ந்திருக்கு. காஷ்மீரில் இருக்கும் பழங்குடியின பெண்கள் சுகாதாரத்துக்கும் இந்த மிஷின் கைகுடுக்குது. பக்கத்து கிராமப் பெண்களை
மனசுல வச்சு எடுத்த இந்த முயற்சி இன்னிக்கு பல இந்திய சகோதரிகளின் சுகாதாரவிதியை  மாத்தியிருக்கு.இதைவிட ஒரு கண்டுபிடிப்புக்கு  என்ன மரியாதை வேணும்?" என்று சந்தோஷ வார்த்தைகளில் தொடங்கும் முருகானந்தம் இந்த இடத்தை அடைவதற்கு தாண்டி வந்தது பல கட்டங்கள்.

                   கைத்தறி தொழிலில் பிசியாக இருந்த முருகானந்தத்தின் அப்பா உயிரை விதிஎடுத்துக்கொள்ள வறுமை அவரது குடும்பத்தை எடுத்துக்கொண்டது. கான்வென்ட் ஸ்கூல் ஸ்டுடன்ட்  கார்பரேஷன் பள்ளி மாணவரானார். அம்மா இட்லி சுட்டு வியாபாரம் செய்து குடும்பத்தைக்கவனித்துக்   கொண்டாலும் பத்தாம் வகுப்பிற்கு மேல் அனுமதிக்கவில்லை
வறுமை.

                 பேக்டரிஒர்க் ஷாப்  என வேலைக்குப் போக ஆரம்பித்த போது  இயந்திரங்கள் பழக்கமாயிருக்கின்றன. சில வருடங்களில் திருமணம் ஆக அதற்கடுத்துதான் மாற்றத்திற்கான ஒரு விதை விழுந்திருக்கின்றது.

           "ஒருநாள் டி.வியில நாப்கின் விளம்பரம் வந்தப்போ 'இதெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது. அதுக்கு ஆகுற செலவுல ஒரு நாள் சாப்பாட்டு செலவையே முடிச்சிடலாம் நமக்கு துணிதான் கதின்னு'என் மனைவி சொன்னப்போ எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.

                     பொண்ணுக பீரியட்ஸ் அப்போ சுகாதாரமில்லாத துணிகளைப் பயன்படுத்தும் போது பல பிரச்சனைகள் ஏற்படுங்கிறதை   மருத்துவ நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கேன். கோவை மாதிரிபெரு நகரத்துல இருக்கிற படிச்சிருக்கிற என் மனைவிக்கே இப்படி ஒரு பிரச்னை இருக்குனா கிராமத்துல இருக்கிற பெண்களை யோசிச்சப்போ ரொம்ப பரிதாபமாயிருச்சு.

                     இதுக்கு ஏதாவது பண்ணனும்னு யோசிச்சு மெடிக்கல் ஷாப்ல ஒரு நாப்கின் வாங்கிப் பார்த்து இது ஒரு காட்டன் அடைக்கப்பட்ட பாக்கெட்டுன்னு நெனச்சிக்கிட்டுஅதே மாதிரி தயாரிச்சு என் மனைவி, பக்கத்திலுள்ள தோழிகள்னு கொடுத்தேன் எல்லாரும் 'இது வேஸ்ட்னு' சொன்னாங்க. ஆனா காரணம் சொல்லல.

                    பிறகு ஒரு நாப்கினை எடுத்து திரவத்தை  விட்டப்போ அது   திரவத்தை எடுத்துக்கிச்சு ஆனா தக்க வைக்க முடியல உடனே அமெரிக்காவுல உள்ள நாப்கின் கம்பெனியில இருந்து மூலப்பொருளை வரவழைச்சேன். அதை ஆய்வுக்குட்படுத்தினப்போ அது காட்டனில்லை 'பைன் வுட்பைபர்ங்கறது' தெரிஞ்சது. இது திரவத்தை உறிஞ்சுரதோட தேக்கியும் வச்சுக்கிடுது. " என்றவர் மூலப்பொருளின் ரகசியத்தை அறிந்த பின் மிஷினையும் வாங்கி விடலாம் என்று நினைத்து விலைகேட்டவருக்கு தலை  கிர்ர்ர்ர்....  நாலரைக் கோடி ரூபாய்.
                      படுத்தவர் இரண்டு நாள் கழித்து எழுந்து அந்த மெக்கானிசத்தை புத்தகங்கள்,பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டு தானே அந்த இயந்திரத்தை சின்ன அளவுல 60,000 ரூபாய்   செலவுல 2005 ஆம் ஆண்டுகண்டுபிடித்துள்ளார் . எட்டு மணி நேரத்தில் 1000 நாப்கின்கள்தயாரிக்கும்திறன் கொண்டது இந்த இயந்திரம்.

                   "சொந்தமா தொழில் செஞ்சு உயரனும்னு பல பெண்கள் நெனைக்கிறாங்க. அவங்களுக்குத்தான் என் மிஷினை விற்பனை செய்றேன். நாப்கின் தயாரிக்கிற பயிற்சியையும் நானே வழங்குகிறேன். இந்தியா முழுக்க 18 மாநிலங்களில் 300 மிஷின்களை வித்திருக்கேன். பல பொருட்களின் விலையேற்றம் காரணமா மிஷினோட விலை 85 ஆயிரம் ஆகியிருக்கு" என்றவரிடம்இயந்திரத்தின் தரத்தைப் பார்த்து அதன் காப்புரிமையை உள்,வெளிநாட்டு நிறுவங்கள் பலவிலைபேசியிருக்கின்றன.  ஆனால் முருகானந்தமோமுழுக்க முழுக்க பெண்கள் சார்ந்த முன்னேற்றத்திற்க்கே இதை  அர்ப்பணித்திருக்கிறார்.

                    "சமுதாய மேம்பாட்டிற்கான  சிறந்த கண்டுபிடிப்பு" என்ற வரிசையில் சென்னையிலுள்ளIIT முருகானந்தத்திற்கு  முதல் பரிசை வழங்கியுள்ளது. ஏராளமான விருதுகளைப் பெற்ற இந்தக் கண்டுபிடிப்பு சமீபத்தில் குடியரசுத் தலைவரின் தேசிய விருதையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சிங்கார செயற்கை நீரூற்று!


Singara Water Fountain!

David Villa to retire after 2014 Wo...

சலசலக்கும் நீரோடையின் சத்தமும் அருவி நீரின் குளிர்ச்சியும் யாருக்குத்தான் பிடிக்காது? அழகான அந்த அருவியின் நீரோட்டத்தையும் அமைதி  கலந்த அதன் சத்தத்தையும் எப்போதாவது மட்டுமே ரசிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. எப்போதும் ரசிக்க முடிந்தால்? செயற்கை நீரூற்று அமைத்து,  அழகு பார்க்கலாமே...

வீட்டுக்குள்ளேயே அழகுக்காகவும் வாஸ்து நம்பிக்கைக்காகவும் செயற்கை நீரூற்று வைக்கிற வழக்கம் பரவலாகி வருகிறது. தண்ணீர் கொட்டும் ஓசை  வீட்டுக்கு நல்லது என்றொரு நம்பிக்கை. வீட்டையே அழகாக்கக் கூடியது இந்த நீரூற்று என்பது நிஜம். செய்யவும் விற்கவும் கற்றுக் கொண்டால்,  லாபம் கொழிக்கும் என்பது முக்கியச் செய்தி!

சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ, விதம் விதமான நீரூற்றுகள் செய்வதில் நிபுணி. அவரது வீட்டினுள் நுழைந்தால் முதலில் வரவேற்பது சலசலக்கும்  தண்ணீர் சத்தம்தான். பூஜையறைக்குப் பக்கத்தில், வரவேற்பறையில், சுவரில்... இப்படி எங்கெங்கு திரும்பினும் நீரூற்றுதான்! செயற்கை நீரூற்று  செய்வதைத் தொழிலாகத் தொடங்க நினைக்கிறவர்களுக்கு வழிகளைக் காட்டுகிறார் அவர்.

இது இப்படித்தான்...

• மூலப்பொருட்கள்

ஒயிட் சிமென்ட், செராமிக் பொம்மைகள், பிளாஸ்டிக் பறவைகள், பூக்கள், செடிகள், கொடிகள், புல் வகையறா, பிளாஸ்டிக் டப் (வட்டம், செவ்வகம் எனக்  கிடைக்கிற வடிவங்களில் எல்லாம்), பசை, அக்ரிலிக் மற்றும் எனாமல் பெயின்ட், ஃபவுன்டன் மோட்டார்.

• எங்கே வாங்கலாம்? முதலீடு?

ஒயிட் சிமென்ட், பெயின்ட் இரண்டும் ஹார்டுவேர் கடைகளிலும், மோட்டாரை அக்வேரியத்திலும், மற்ற பொருட்களை ஃபேன்சி ஸ்டோர்களிலும்  வாங்கலாம். ஒரு நீரூற்று செய்ய 800 முதல் 1,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.

 என்னென்ன மாடல்?
தெப்பக்குளம், கோயில் கோபுரம், ஸ்பைரல் வடிவம், மலை, பூங்கா, சுவரில் மாட்டக்கூடிய 3டி மாடல் என கற்பனைக்கெட்டும் எந்த  மாடலும்சாத்தியம்.

• எதில் கவனம் தேவை?

ஒயிட் சிமென்ட்டை சரியான பக்குவத்தில் பிசைய வேண்டும். பதம் சற்று மாறினாலும், செய்து முடித்த நீரூற்று உடைந்து போகவோ, விரிசல்  விட்டுக் கொள்ளவோ கூடும். பிறகு அதை ஒட்ட வைப்பதோ, சீர் செய்வதோ சாத்தியமின்றிப் போகும். மொத்த வேலையும் வீணாகும்.

 வருமானம்?

சிம்பிளான மாடல் நீரூற்றையே குறைந்தது 1,500 முதல் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம். அளவு, வடிவம், அதில் பொருத்துகிற அலங்கார  பொம்மைகள், விளக்குகள் போன்றவற்றைப் பொறுத்து விலை அதிகரிக்கும். ஒரு நீரூற்றை முழுமையாக முடிக்க 2 முதல் 3 நாள் ஆகும். செய்து  முடித்ததும், அது முழுக்க காய்ந்த பிறகுதான் பெயின்ட் அடிக்க வேண்டும். நவராத்திரி, புத்தாண்டு, பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும்.  திருமணம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட எந்த விசேஷத்துக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்பதால் மற்ற நாட்களிலும் தொய்வில்லாத விற்பனை  சாத்தியம்.

• பயிற்சி?

2 நாள் பயிற்சி. தேவையான பொருட்களுடன் ஒரு மாடல் நீரூற்று செய்யக் கற்றுக்கொள்ளக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாய்  (95001 38796)

thanks:

Thursday, June 19, 2014

வருமானம் தரும் தேவையில்லா பொருட்கள்... மாற்றி யோசித்ததால் கிடைத்த நிம்மதிவீடுகளில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் அவைகளின் பயன்பாடு முடிந்தவுடன் அவை குப்பைத்தொட்டிக்குத்தான் போகின்றன. அத்தகைய பயன்பாடில்லாத பொருட்களுக்கு மீண்டும் உயிர் தருகிறார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் கிழிந்த துணிகள்,  பயணச் சீட்டுகள்,  நூல் கண்டு அட்டைகள், பென்சில், ரப்பர் போன்றவற்றை கொண்டு உருவாக்கப்படும் பொருட்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின்றன என்பதுதான் இங்கே விஷயமே.
கலை ஆர்வம் அதிகமானது!
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகே உள்ள அமரபூண்டியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்த போது, ''என் பெற்றோர்களுக்கு என்னையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள். பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றுதான் எங்களை படிக்க வைத்தார்கள்.  நான் பள்ளி மேல் படிப்புக்காக தொழில்பயிற்சி பாடப் பிரிவை தேர்வு செய்தேன். என்னுடன் பள்ளியில் முதல் பாடப் பிரிவில் படிக்கும் நண்பர்களுக்கு பாட திட்டத்தில் வரைபடம் வரையும் செயல்பாடு அதிகமாக இருக்கும். அவர்களுக்கு நானே விரும்பி படங்களை வரைந்து கொடுப்பேன். இப்படிதான் என்னுடைய கலை ஆர்வமானது.

மாத்தி யோசித்தேன்!
என்னுடைய பள்ளி படிப்பை முடித்துவிட்டு, கோயம்புத்தூரில் இருக்கும் ஜீவன் என்பவரிடம் பெயிண்டிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவரிடமே ஐந்து ஆண்டுகள் கலை குறித்த தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டேன். பிறகு கலைத்தொழில் ஆசிரியர் பயிற்சியையும் முடித்து சான்றிதழையும் பெற்றுவிட்டேன். இதன் பிறகே நாமும் சம்பாதித்து சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் எனக்குள் உதயமானது.  ஆரம்பத்தில் எல்லோரையும் போல நானும் பிறந்த நாள் பரிசு,  நினைவுச் சின்னம் வரைதல் என்று  சம்பாதித்தேன். நாம் இப்போது செய்யும் தொழிலையே ஏன் மாத்தி யோசித்து முயற்சி செய்யக் கூடாது என்று யோசித்தேன்.
அப்போதுதான் வீட்டு உபயோக பொருட்களில் வீணாகாக கிடப்பதை வைத்து ஏன நாம் வித்தியாசமான பொருட்களை உருவாக்கக் கூடாது என்கிற சிந்தனை எனக்குள் எழுந்தது.  அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் வீட்டு உபயோக பொருட்களில்  பயன்படுத்தாத பொருட்கள் போன்றவற்றை முதலில் சேகரித்தேன். அதை வைத்து எனக்கு தெரிந்த டிசைன்களை உருவாக்கினேன்.  என்னுடைய கலை ஆர்வத்தால் நான் தயாரிக்கும் பொருட்கள அனைத்தும் அழகாக உருவெடுத்தது. அந்த அழகுதான் எனக்கு நல்ல வருமானத்தையும் பெற்றுத் தந்தது.  வீடு வீடாக போய், பழைய பொருட்கள் வாங்குவது தெரிந்து ஏரளமானவர்கள் எங்களிடம் அவர்களே வந்து பழைய பொருட்களை கொடுத்துவிட்டு செல்கிறார்கள்.

நல்ல வருமானம்! 
சாதரணமான ஒரு கலை பொருளை தாயாரிக்க 50-75 ரூபாய் வரை செலவானாலும் 200 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இதே மாதிரி போட்டோ பெயிண்டிங், சார்ட் கலரிங்ன்னு ஒவ்வொரு கலை பொருளுக்கு அதுக்கு தகுந்த மாதிரி விலை வைத்து விற்பனை செய்யலாம். என்னுடைய இந்த கலை உழைப்பால் சம்பாதித்து நல்ல நிலைமையில் இருக்கிறேன்.
 
வித்தியாசமான கலை பொருட்கள்!
கூழாங்கற்கள்,  பேருந்து டிக்கெட்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி மயில் உருவங்கள், பெரியார், பாரதியார் போன்ற உருவ படங்களை தயாரித்து விற்பனை செய்தேன்.  இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலர் காதலியின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொட்டுக்களை கொடுத்து அவர்களின் உருவப் படங்களை வரைந்து தரச் சொல்வார்கள். இப்படியாக மாதம் எனக்கு 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் கிடைத்து விடும்.  இதுபோக மூன்று பள்ளிகளுக்கு வரைபட ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.  இதனாலும் எனக்கு மாதம் 4,000 ரூபாய் கிடைக்கும்.  நான் தயாரிக்கும் பொருட்கள் எல்லாமே ஒரே மாதிரி விற்பனை ஆவதில்லை என்றாலும் சீசன் நேரங்களில் நல்ல வருமானத்தை பார்க்கலாம்.  சென்ற வருடம் நான் வரைந்த எம்மதமும் சம்மதம் என்கிற வரைபடம் தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றிருக்கிறது.
என்னுடைய கலையை இப்போது பள்ளிக் குழந்தைகளுக்கு பாடமாக சொல்லிக் கொடுத்து வருகிறேன். முன்பு அவர்கள் தேவையில்லை என்று தூக்கி எறிந்த பொருட்களை வைத்து இன்று கலை பொருட்களை அவர்களாகவே தயாரிப்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்றார் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டோம் என்கிற திருப்தியோடு!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites