இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பேப்பர் தொழில். Show all posts
Showing posts with label பேப்பர் தொழில். Show all posts

Wednesday, September 17, 2014

டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு!




இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை குறைவு.
பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்களில் டிஷ்யூ பேப்பருக்குத் தனி இடமுண்டு. கை துடைக்க, முகம் துடைக்க என பல வகைகளில் இந்த டிஷ்யூ பேப்பர் பயன்படுகிறது. கைக்குட்டை பயன்படுத்துவதைவிட டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது எளிது என்பதால் இன்றைக்கு பலரும் தங்கள் பைகளில் டிஷ்யூ பேப்பரை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தவிர, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கையும் குறைவு. எனவே, ஈடுபாட்டுடன் இந்தத் தொழிலை செய்தால் வருமானம் நிச்சயம்.
உற்பத்தி செய்வது ஒருபக்கம் என்றால், மார்க்கெட்டிங்கில் காட்டும் வேகம்தான் இந்தத் தொழிலில் ஒருவரை நிலைநிறுத்தும். இன்றைக்கு சின்ன ஹோட்டல்களில்கூட டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்துவதால், மார்க்கெட்டிங்குக்கு நிறைய அலையவேண்டி இருக்காது. சின்னச் சின்ன ஹோட்டல்கள் மொத்த வியாபாரிகளிடமிருந்தே டிஷ்யூ பேப்பர்களை வாங்குவதால், நாம் அவர்களைக் குறிவைக்கலாம். தவிர, கடைக்காரர்களின் பெயர்களை ப்ரின்ட் செய்துகொடுப்பதன் மூலமும் கவர முடியும்.
இப்போதுவரை நமது தமிழக, கேரள சந்தையை வடமாநில உற்பத்தியாளர்களே கையில் வைத்துள்ளனர். திறமையான தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உள்ளூர் சந்தையைக் கைப்பற்ற உகந்தத் தொழில் இது.
திட்ட அறிக்கை! ()
இடம் : வாடகை
இயந்திரம் : 16 லட்சம்
நமது பங்கு 5%   : 80ஆயிரம்
மானியம் 25% : 4 லட்சம்  
வங்கிக் கடன் 70% : 11.20 லட்சம்
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாநில அரசின் 'நீட்ஸ்’ திட்டம் அல்லது பொது மானியத் திட்டம் என ஏதாவது ஒன்றில் இயந்திரம் வாங்கும் தொகைக்கு மானியம் பெற வாய்ப்பு உண்டு.
இந்தத் தொழிலுக்கு நடைமுறை மூலதனமாக ஒரு மாதத்துக்கு ரூ.2.50 லட்சம் தேவைப்படும். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.
திட்ட அனுமானங்கள்!
மூலப்பொருள் செலவு:
தினசரி ஒரு ஷிப்டுக்கு 100 கிலோ வரைக்கும் பேப்பேர் ரோல்(18 GSM) தேவைப்படும். இதன்படி கணக்கிட்டால், மாதத்துக்கு இரண்டரை முதல் மூன்று டன் வரை பேப்பர் ரோல் தேவைப்படும். 1 கிலோ பேப்பேர் ரோல்  விலை  ரூ.60 முதல் கிடைக்கும். ப்ளைன் டிஷ்யூ பேப்பர் என்றால் கழிவு இருக்காது. ப்ரின்டிங் செய்து தருவது என்றால் சிறிதளவு கழிவு இருக்கும். ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டால் பேப்பர் ரோல் செலவு  (100X60X25 =  1,50,000)
விற்பனை வரவு!
பேப்பர் ரோல் உற்பத்திக்குப்பிறகு பாக்கெட் என்கிற கணக்கில் கணக்கிடப்படும். இதன்படி 1 கிலோ பேப்பர் ரோலில் உற்பத்திக்குப்பின் 12 பாக்கெட்டுகள் டிஷ்யூ பேப்பர் கிடைக்கும். ஒரு பாக்கெட் 10 ரூபாய் வரை விற்கலாம். தினசரி 100 கிலோ உற்பத்தி என்றால், ஒருநாளில் 1,200 பாக்கெட்டுகள் கிடைக்கும். அதாவது, ஒருநாளின் விற்பனை வரவு ரூ.12,000.  இதன் அடிப்படையில் மாதத்துக்கு 25 வேலைநாட்கள் என்று கணக்கிட்டால் ஒரு மாத விற்பனை வரவு (12,000X25 = 3,00,000)
செலவுகள்!
உற்பத்தி செய்யப்பட்டபின் 210 பாக்கெட்டுகளாக ஓர் அட்டைப் பெட்டியில் அடைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டியதுதான். இதற்கான செலவு ஓர் அட்டைப் பெட்டிக்கு ரூ.40 செலவாகும். இதன்படி ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு ரூ.5,680.
ப்ரின்டிங் செய்துகொடுப்பது என்றால், இரண்டு கலர் இங்க் தேவை. ஒரு கலர் 10 கிலோ ரூ.1,600. நமது ஆர்டர்களைப் பொறுத்து இதைப் பயன்படுத்தலாம். சாதாரணமாக ஏழு, எட்டு மாதங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். இதன்படி கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கு ஆகும் இங்க் செலவு ரூ.457.      
நவீன வாழ்க்கைக்குத் தேவைப்படும் இந்த டிஷ்யூ பேப்பர் உற்பத்தியானது தன்னார்வம் கொண்ட புதிய தொழில்முனைவோர்களுக்கு நிச்சயம் கைதரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
- நீரை.மகேந்திரன்,
படங்கள்: தி.விஜய்.
(திட்டவிவரங்கள் உதவி: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் (MSME Development Institute), சென்னை.
மாதம் 30 ஆயிரம் வருமானம்!
''நான் ஏற்கெனவே ஒரு டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் யூனிட்டில் மார்க்கெட்டிங் வேலைகளை செய்து வந்தேன். இந்தத் தொழிலுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பார்த்து, நாமே இந்தத் தொழிலை ஏன் செய்யக்கூடாது என்று நினைத்து ஆரம்பித்தேன். என்னை ஊக்குவிக்கிற மாதிரி வங்கிக் கடனும் கிடைத்தது. என் நண்பர்களும் என்னை ஊக்குவித்தனர்.  
தெளிவான மார்க்கெட்டிங் திறமை இருந்தால் இந்தத் தொழிலில் வருமானம் பார்த்துவிடலாம்.  ப்ராண்டு அல்லது ஹோட்டல் பெயர்களை ப்ரின்ட் செய்துகொடுக்கும் சில்லறை விற்பனை வாய்ப்புகள் தவிர, மொத்த விற்பனையாளர்களுக்கும் சப்ளை செய்யமுடியும். தற்போது இரண்டு இயந்திரங்கள் மூலம் டிஷ்யூ பேப்பர்களைத் தயாரிக்கிறேன். தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது.
அடுத்ததாக, இன்னொரு இயந்திரம் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். திறமையான தொழிலாளர்கள், மார்க்கெட்டிங் இரண்டும் இருந்தால் லாபம் நிச்சயம். உள்ளூர் மார்க்கெட் தவிர, கேரளாவுக்கும் அதிக அளவு சப்ளை செய்கிறேன். அனைத்து செலவுகளும் போக, மாதம் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது.''

Wednesday, June 18, 2014

முகமூடியில் ஒளிந்திருக்கும் வருமானம்

Income is hidden in the mask!



தனக்குப் பிடித்த இன்னொருவராகத் தன்னைக் கற்பனை செய்து கொள்வதும், அப்படியொரு கற்பனை உலகில் சஞ்சரிப்பதும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தனது ஆஸ்தான  நட்சத்திரம் அல்லது விளையாட்டு வீரரின் மீதான அபிமானத்தின் காரணமாக, தன்னையும் அவராகவே நினைத்துக் கொண்டு, தனது நடை, உடை, பாவனைகளில் கூட அவரையே பின்பற்ற நினைப்பதும் இதன் காரணமாகத்தான்.

இன்னொருவராக மாற முடியாது எனத் தெரியாத குழந்தைகளின் உலகத்தில் அப்படி மாறி விட்டது போன்ற சின்ன சந்தோஷத்தைக் கொடுப்பவை  முகமூடிகள்.  தனக்குப் பிடித்த நபராகவோ, கதாபாத்திரமாகவோ மாற, ஒரு சின்ன முகமூடி போதும் என்கிற குழந்தைகளின் கற்பனையில்தான் எத்தனை அழகு...

குழந்தைகளின் உள்ளம் கவரும் விதம் விதமான முகமூடிகள் செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த கவிதா. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் குறைவிருக்காது. குழந்தைகளிடம் எப்போதும் வரவேற்பில் இருக்கும் முகமூடித் தயாரிப்பை நல்லதொரு வர்த்தக வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழி காட்டுகிறார் கவிதா.

இது இப்படித்தான்...


மூலப்பொருட்கள்

பலூன், வண்ணக் காகிதங்கள், படம் வரைகிற  அட்டை (சார்ட் பேப்பர்), எலாஸ்டிக் கயிறு, பசை, கத்தரிக்கோல், துளையிடும் கருவி, பழைய செய்தித்தாள்கள், போஸ்டர் கலர்...

 எங்கே வாங்கலாம்? முதலீடு?

வண்ணக் காகிதங்கள், அட்டை, பசை, கத்தரிக்கோல், எலாஸ்டிக் கயிறு உள்ளிட்டவற்றை எழுது பொருட்கள் விற்பனைக் கடைகளில் வாங்கலாம். பலூன்கள் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். 100 முகமூடிகள் செய்ய 2 ஆயிரம் முதலீடு போதுமானது.

எத்தனை வகைகள்? என்னென்ன உருவங்கள்?


வண்ணக் காகிதங்களை மட்டும் வைத்துச் செய்கிற வகை, பலூன் உபயோகித்துச் செய்கிற வகை, அட்டை வைத்துச் செய்வது, வெறும் கண்களுக்கானது என 4 வகைகள் செய்யலாம். குழந்தைகளுக்கான பொருள் என்பதால் அவர்களைக் கவரும் எல்லா உருவங்களுக்குமே வரவேற்பு இருக்கும். உதாரணத்துக்கு டாம் மற்றும் ஜெர்ரி, சோட்டா பீம், பென் 10 உள்ளிட்ட கார்ட்டூன் உருவங்கள், வேடன், கோமாளி, சாமி உருவங்கள், தலைவர்கள் என எதை வேண்டுமானாலும் செய்யலாம். இவை அல்லாது, புதிதாக ஏதேனும் ஒரு உருவம் வேண்டுமென்றாலும் சாத்தியம்.
 
ஒரு நாளைக்கு எத்தனை செய்யலாம்?

பலூனில் செய்கிற முகமூடிக்கு 2 நாள் தேவை. ஒரு நாள் பலூனின் மேல் காகிதங்களை ஒட்டி, முகமூடி வடிவத்துக்குக் கொண்டு வரவும், அடுத்த நாள் வெட்டி, ஒட்டி, நிறம் பூசுகிற வேலைகளைப் பார்க்கவும் தேவைப்படும். இதில் ஒரு நாளைக்கு 8 வரை செய்யலாம். அட்டையில் செய்வதை ஒரே நாளில் முடிக்கலாம். இதில் 10 முதல் 15 வரை செய்யலாம்.

விற்பனை வாய்ப்பு? வருமானம்?


பிறந்த நாள் விழாக்களுக்கு மொத்தமாக வாங்குவார்கள். வழக்கமாக கடைகளில் கிடைக்கிற உருவங்கள் தவிர்த்து, அந்தந்த காலத்துக்கேற்ற உருவங்களைச் செய்து விற்பதன் மூலம் வியாபாரத்தைப் பெருக்கலாம். கண்காட்சிகள் நடக்கும் இடங்களில் விற்கலாம். அழகிப் போட்டிகள், ஆடையணிக் காட்சி (ஃபேஷன் ஷோ) அரங்குகளிலும் தேவையிருக்கும். வெறும் கண்களுக்கான முகமூடியை 25 ரூபாய்க்கும், முகம் முழுவதற்குமானதை 35 முதல் 40 ரூபாய்க்கும் கொடுக்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்.

பயிற்சி?

பலூன் மற்றும் அட்டையில் 5 வகையான முகமூடிகளை ஒரே நாள் பயிற்சியில் கற்றுக் கொள்ள  கட்டணம் 750 ரூபாய். (தொடர்புக்கு :  90031 62726)

Wednesday, January 1, 2014

பேப்பர் கவர் தயாரிப்பில் அசத்தும் தோழிகள்


வீட்டில் காகிதம் கிடந்தால் குப்பை தொட்டியில் போடுவதற்கு பதில் கொஞ்சம் யோசித்தால் போதும்; சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு. பணமாக்கவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் ஊட்டி தோழிகள் காஞ்சனா, ஜெனீபர் ஆகியோர். மிக குறைந்த வருமானம் கொடுத்த தொப்பி தைக்கும் தொழிலை விட்டு பழைய பேப்பரை வாங்கி காகித பை தயாரிக்க ஆரம்பித்தவர்களுக்கு தற்போது மாதம் தோறும் நிலையமான வருமானத்திற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது.
ஊட்டி ஹில்பங்க் அருள் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெனிபர், ராஜா என்பவரின் மனைவி காஞ்சனா. இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தொப்பி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது ஒரு தொப்பி தயாரித்து கொடுத்தால் (தைப்பது) ரூ.1 வீதம் வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு கம்பெனிக்குள் சென்றால் மாலை 6 மணிக்குத்தான் வீட்டிற்கு வர முடியுமாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் மிஷினை விட்டு வெளியே வரமுடியாது. ஒரு நாளுக்கு 100 தொப்பிகள் வரை தைத்து வந்துள்ளனர். இதன் மூலம் ஒரு நாள் முழுவதும் உழைத்தால் ரூ.100 மட்டுமே வருமானம் கிடைத்து வந்துள்ளது.
தொப்பி தயாரிக்கும் வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே பேப்பர் கவர்களை தயாரிக்கும் தொழிலில் கடந்த 8 ஆண்டுக்கு முன் ஜெனீபர் ஈடுபட துவங்கினார். பின் இவருடன் காஞ்சனாவும் பேப்பர் கவர் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டம் சற்று கடுமையாகவே பேப்பர் கவர்களுக்கு கிராக்கி அதிகமானது
தற்போது தினமும் 100 கவர்களை கொண்ட 20 கட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கவர்களின் அளவுக்கு ஏற்றார் போல் விலையும் மாறுபடுகிறது. சிறிய புத்தகங்கள் முதல் பெரிய நாளிதழ்களை கொண்டு கவர்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இருவரும் ரூ.20 ஆயிரம் சம்பாதித்து வருகின்றனர். இதற்கென பெரிய அளவிலான மூல தனம் ஒன்றும் கிடையாது. பழைய பேப்பர் கடைகள், வீடுகளில் வாங்கும் பேப்பர்கள் மற்றும் புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்கி வீட்டிலேயே உட்கார்ந்து இந்த கவர்களை செய்கின்றனர்.
சாதாரண பழைய பேப்பர் என்று நினைக்காமல் அதனை முறையாக பயன்படுத்தி மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் சம்பாதித்து வரும் ஜெனிபர் மற்றும் காஞ்சனாவை பார்த்து பல பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தவர்களிடம் வேலைக்கு சென்று கஷ்டப்படுவதைவிட சுய தொழில் செய்தால் கை நிறைய சம்பாதிப்பது மட்டுமின்றி குடும்பத்தையும் பராமரிக்க முடிகிறது என ஜெனிபர் மற்றும் காஞ்சனா ஆகியோர் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் கூறுகையில், தொப்பி தயாரிக்கும் வேலை சற்று கடினமானது. ஆனால் ஊதியம் மிகவும் குறைவு. லீவு எடுக்க முடியாது. குழந்தைகளை கவனிக்க முடியாது. மன உளைச்சலுடனே இருக்க வேண்டியிருந்தது. பேப்பர் கவர் தயாரிக்க ஆரம்பித்தவுடன் நாங்கள் அதிகம் சம்பாதிக்கிறோம். வீட்டு வேலை மட்டுமின்றி குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ள முடிகிறது. நாங்கள் துவக்கத்தில் கடைகளுக்கு சென்று கவர்கள் வேண்டுமா என கேட்கும் போது சற்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. தற்போது எங்களை பார்த்து கவர்களை சீக்கிரம் கொண்டு வாங்க என கடைக்காரர்கள் அன்பாக மிரட்டுகின்றனர். பழக்கடைகள், சில்லரை கடைகளில் எங்கள் கவர்களுக்கு அதிக மவுசு. தற்போது நாங்கள் தயாரிக்கும் கவர்களுக்கு கிராக்கி அதிகம். எனினும் அதிகளவு தயாரித்து கொடுக்க முடியவில்லை என்றாலும் நாள் தோறும் சுமார் 20 முதல் 25 கட்டுக்கள் தயாரித்து கொடுத்து விடுகிறோம். கை நிறைய சம்பாதிக்கிறோம். சந்தோஷமாக உள்ளது என்றார்.
துவக்கத்தில் கடைகளுக்கு சென்று கவர்கள் வேண்டுமா என கேட்கும் போது சற்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. தற்போது எங்களை பார்த்து கவர்களை சீக்கிரம் கொண்டு வாங்க என கடைக்காரர்கள் அன்பாக மிரட்டுகின்றனர்.

அதிக லாபம் தரும் பேப்பர் பை தயாரிப்பு தொழில்!



ஏ.கருணாகரன் : சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காரணமாக பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பேப்பர் கவர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் பேப் பேக்ஸ் எனும் நிறுவனம் நடத்தி வரும் தனராஜ். அவர் கூறியதாவது: பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன்.

பொள்ளாச்சி அடுத்த கேரள பகுதிகளில், பாலிதீன் கவர்களுக்கு பதில், பேப்பர் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையால், பேப்பர் கவர் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. என் அப்பா பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை துவங்கினார். அதன் பிறகு நானும் பேப்பர் கவர் தயாரிக்க துவங்கினேன். பொள்ளாச்சியில் இது போல 13 நிறுவனங்கள் உள்ளன. கோவையில்கூட இந்தளவு இல்லை. பொள்ளாச்சியில் இயங்கும் பெரும்பாலான பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளாவை சந்தை இடமாக கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நான் கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களை குறி வைத்து உற்பத்தியை துவக்கினேன். பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்று வருகிறேன். படிப்படியாக உற்பத்தி அதிகரித்துள்ளது.

பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் பிற மாவட்டங்களில் குறைவாக உள்ளது. புதிய தொழில் முனைவோர் பேப்பர் கவர் உற்பத்தியை துவக்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். படிப்படியாக இத்தொழிலை மேம்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பெண்களும் இத்தொழிலில் ஈடுபடலாம்.
செலவு, வருவாய்

ஒரு நாளில் 200 கிலோ பேப்பர் வீதம் மாதத்தில் 25 நாளில் 5 டன் பேப்பரில் கவர்கள் தயாரிக்கலாம். ஒரு கிலோ பேப்பர் ரூ.29 வீதம் 5 டன்னுக்கு ரூ.1.45 லட்சம், வாடகை ரூ.2500, மின்கட்டணம் ரூ.1000, 3 தொழிலாளர்கள் சம்பளம் ரூ.15 ஆயிரம். இதர செலவுகள் ரூ.5 ஆயிரம் என மாதத்துக்கு ரூ.1.68 லட்சம். கவர்கள் 100 எண்ணிக்கை வீதம் சராசரி விலை: 6 செமீ அகலம், 10 செமீ நீளமுள்ளவை ரூ.30, 7ஜ்12 ரூ.36, 9ஜ்13ரூ.46, 10ஜ்16ரூ.65, 12ஜ்19 ரூ.85, 14ஜ்18ரூ.100, 14ஜ்22ரூ.115, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33 ஆகியவை ரூ.150, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37 ஆகியவை ரூ.230, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39 ரூ.250, 31ஜ்44ரூ.480, 36ஜ்48 ரூ.570க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை விலையோடு, உற்பத்தி செலவை ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 10 சதவீத லாபம் அல்லது மாதம் சராசரியாக ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். கடைகளில் நேரில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்தால் கூடுதல் விலைக்கு விற்கலாம். லாபமும் அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.
கட்டமைப்பு : 20 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட ஷெட். இதை 3 பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் இயந்திரம், மற்ற பகுதிகளில் அலுவலகம், ஸ்டோர் ரூம் என பயன்படுத்தலாம். வாடகை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். ஒரு எச்பி மின் இணைப்பு (ரூ.2 ஆயிரம்) வேண்டும்.
முதலீடு: பேப்பர் கவர் இயந்திரம் ரூ.2.5 லட்சம், 2 டேபிள் ரூ.8 ஆயிரம், 4 அலுவலக சேர்கள் ரூ.1,000, பசை காய்ச்ச இரும்பு அடுப்பு, அலுமினிய பாத்திரம், பிளாஸ்டிக் வாளி , 2 மக் உள் ளிட்ட இதர பொருட்கள் ரூ.1000.
முதலீட்டுக்கு ரூ.2.82 லட்சம் தேவை. (முதல் மாத உற்பத்தி செலவு ரூ.1.68 லட்சம் தனி)
தேவையான பொருட்கள் : பேப்பர் கவருக்கென பிரவுன் நிற கிராப் பேப்பர் (கிலோ ரூ.29), ரப்பர் பேண்ட் (கிலோ ரூ.350), பசை காய்ச்ச மரவள்ளிக்கிழங்கு மாவு, துத்தம், பிளாஸ்டிக் கட்டு கயிறு.
கிடைக்கும் இடங்கள்: பேப்பர் கவர் இயந்திரங்கள் பொள்ளாச்சி, கோவை நகரங்களிலும், கிராப் பேப்பர் உடுமலை உள்ளிட்ட பேப்பர் மில்களிலும் கிடைக்கிறது.
விற்பனை வாய்ப்பு: மருந்து கடையில் சிறிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. பேக்கரி, பேன்சி ஸ்டோர், டெக்ஸ்டைல், லாண்டரி, டெய்லரிங் ஆகியவற்றில் பெரிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படு கின்றன. இதனால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. கடைகளுக்கு நேரடியாகவோ, பேப்பர் கவர் மொத்த விற்பனை கடைகளுக்கோ வாடிக்கையாக சப்ளை செய்யலாம்.
தயாரிப்பு முறை

பேப்பர் ரோல் 13.5 செமீ, 15.5, 19.5, 21.5, 25.5, 29.5, 37.5, 45.5, 53.5, 63.5, 73.5 செமீ என பல்வேறு அகலங்களில் கிடைக்கிறது. அதன் மூலம் 10 செமீ நீளம், 6 செமீ அகல கவர் முதல் 7ஜ்12, 9ஜ்13, 10ஜ்16, 12ஜ்19, 14ஜ்18, 14ஜ்22, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39, 31ஜ்44, 36ஜ்48 ஆகிய அளவுள்ள கவர்கள் தயாரிக்கலாம்.
வெவ்வேறு அளவு கவர்களை தயாரிக்க அதற்குரிய பிளேட், பேப்பர் ரோலை இயந்திரத்தில் பொருத்த வேண்டும். கவரின் மத்திய பகுதி மற்றும் கீழ் பகுதியை ஒட்ட தேவையான பசையை இயந்திரத்தில் உள்ள டேங்க்கில் நிரப்ப வேண்டும்.
பின்னர் இயந்திரத்தை இயக்கினால் பிளேட்டின் கீழ்பகுதி வழியாக பேப்பர் ஓடும். அதன் மேல் பகுதியில் பேப்பர் மடித்து, கவரின் மத்திய பகுதியில் பசை ஒட்டும். அங்கிருந்து நகரும் பேப்பர் குறிப்பிட்ட அளவில் துண்டிக்கப்பட்டு அடுத்த பகுதிக்கு செல்லும். அங்கு கீழ் பகுதி ஒட்டப்பட்டு கவர் தயாராகும். உற்பத்தியான கவர் 50 எண்ணிக்கை சேர்ந்தவுடன் ஒரு முறை விளக்கு எரியும். கவர்களை 50 அல்லது 100 எண்ணிக்கையில் அடுக்கி ரப்பர் பேண்ட் போட்டால் விற்பனைக்கு தயார். இயந்திரம் துவக்கத்தில் ஓடும்போது பசை சீராக செல்கிறதா, ஒட்டப்படுகிறதா, சரியான அளவுகளில் வெட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஓட்டம் சீரானவுடன் ஒரு இயந்திரம் மூலம் நாள்தோறும் 8 மணி நேரத்தில் 200 கிலோ பேப்பரில் கவர் தயாரிக்கலாம். அளவுகளுக்கேற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும். லாபம் தரும் காகித பை தயாரிப்பு
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம் என்கிறார்
காகிதப் பை வகைகள்

ஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என விதவிதமான வகைகள் உள்ளன.
தேவைப்படும் பொருட்கள்: பழைய அல்லது புதிய பேப்பர்கள். பேப்பரின் வகைகளான டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன்ஷீட், சார்ட் ஆகியவை.
இயந்திரம்: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின்.

உற்பத்தி பொருட்கள்: மெட்டல் வளையம், பசை, கைப்பிடிக்குத் தேவையான கயிறு.

கிடைக்கும் இடங்கள்: பேப்பர்கள் பழைய பேப்பர் கடைகளிலும், கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் சென்னை, பெங்களூர், கோவை, ஐதராபாத் நகரங்களிலும், இதர வகை பேப்பர்கள் மற்றும் பொருள்கள் சிறு மற்றும் பெரு நகர ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

எந்த வகை பேப்பர் ஆனாலும், தயாரிப்பு முறை ஒன்றுதான். முதலில் தயாரிக்கப்படவுள்ள அளவை பேப்பரில் ஸ்கேல் வைத்து அளந்து மார்க் செய்ய வேண்டும். அதை கையால் இயக்கக்கூடிய கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும், கீழ்பகுதியில் மடக்கியும் கொள்ளலாம். அடிப்பாகத்தை வலுப்படுத்த, அட்டை ஒட்ட வேண்டும்.
கைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் 2 துளைகளை போட வேண்டும். துளை போட அந்த மெஷினையே பயன்படுத்த வேண்டும். ஓட்டைகள் கிழியாமல் இருக்க, மெட்டல் வளையத்தை பிரேம் செய்ய வேண்டும். கடைசியாக துளையில் கயிறு கோர்த்து முடிச்சுபோட்டால் பேப்பர் பை தயார்.
விற்பனை வாய்ப்பு

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மற்றும் சுற்றுச் சூழல் அக்கறை ஆகிய காரணங்களால் பெரும்பாலான கடைகளில் காகித பைகளில் பொருள் வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஜவுளி, டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர்பிடிக்கலாம். காகிதப் பைகளில் நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் பைகளுக்கு மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும்.
லாபம்

மீடியம் அளவான 11க்கு 9 செ.மீ. பையில், தாங்கு திறனுக்கேற்ப 200 கிராம் முதல் 6 கிலோ எடையுள்ள பொருள்களை வைக்கலாம். செய்தித்தாள் பைகளில் குறைந்த எடை, பெரிய தோற்றமுள்ள பொருட்களை வைக்கலாம். ஒரு மீடியம் சைஸ் காகிதப் பை தயாரிக்க ரூ.3, டியூப்ளக்ஸ் பை தயாரிக்க ரூ.4, கோல்டன் யெல்லோ ஷீட் பை தயாரிக்க ரூ.3.25, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தயாரிக்க ரூ.3.25 செலவாகிறது. இதில் காகிதப் பை, கோல்டன் ஷீட் பை, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தலா ரூ.5க்கும், டியூப்ளக்ஸ் பைகள் ரூ.7க்கு விற்கிறது.
இதன் மூலம் பைக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை லாபம். இதன் மூலம் மாதம் குறைந்தபட்ச லாபம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும். ஒரு மெஷினில் ஒருவர் கட்டிங் செய்து, மற்றொருவர் கிரீசிங் செய்து, இன்னொருவர் துளையிட்டு கயிறு கோர்த்தால் மாதம் 6 ஆயிரம் பை தயாரிக்கலாம். லாபமும் அதற்கேற்ப அதிகரிக்கும்.
பயிற்சி: பேப்பர் பை தயாரிப்பு தொடர்பான பயிற்சியை வேளாண் பல்கலைக்கழகம், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் பயிற்சியாளர்கள் மூலம் கட்டண முறையில் ஒரு நாள் முதல் ஒரு வாரம் கால அளவில் அளித்து வருகின்றன.
முதலீடு

கட்டமைப்பு: மெஷின் நிறுவ, பணியாற்ற 10க்கு 10 அடி அறை போதும். பைகளை இருப்பு வைக்கவும், அலுவலக பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு அறை தேவை.
நிரந்தர முதலீடு: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் ரூ.25 ஆயிரம்.
உற்பத்தி செலவு

ஒரு மெஷினில் ஒரு நாளில் ஒருவர் 11க்கு 9 செ.மீ அளவிலான 75 பைகளை வெட்டி, கிரீசிங் செய்து, துளையிட்டு, கயிறு கோர்த்து தயார் செய்யலாம். இதற்கு எந்த வகை பை தயாரிக்கிறோமோ அந்த வகை காகிதம் ஒரு கிலோ போதுமானது. அதன்படி மாதத்துக்கு 26 கிலோவில் 2 ஆயிரம் பைகள் தயாரிக்கலாம். சாதாரண காகிதம் 26 கிலோ ரூ.260, டியூப்ளக்ஸ் போர்டு ரூ.1690, கோல்டன் யெல்லோ ஷீட் ரூ.910, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் ரூ.750. பசை 26 கிலோ ரூ.260, கைப்பிடி கயறு 5 மீட்டர் ரூ.130, மெட்டல் வளையம் ரூ.20, பென்சில் 2க்கு ரூ.10. உற்பத்தியாளர் சம்பளம் மாதம் ரூ.5200.
சாதாரண பை தயாரிக்க மாதத்துக்கு மொத்தம் ரூ.5,880, டியூப்ளக்ஸ் போர்டு பைகள் தயாரிக்க ரூ.7990, கோல்டன் யெல்லோ ஷீட் தயாரிக்க ரூ.6530, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் தயாரிக்க ரூ.6370 செலவாகிறது. இதில் கூலியாள் இல்லாமல் நாமே உற்பத்தியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் ரூ.680, அதிகபட்சம் ரூ.1690 உற்பத்தி செலவுக்கு போதும்.
காகிதப் பொருள்கள் செய்முறை பயிற்சி முகாம்

சென்னை, ஜன. 28: காகிதப் பொருள்கள் செய்முறை பயிற்சி முகாமை சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) பிப்ரவரி 27-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடத்துகிறது.பேப்பர் கோப்பைகள், பேப்பர் தட்டுகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை தயாரிப்பது குறித்த பயிற்சிகள் இந்த முகாமில் அளிக்கப்படும்.பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர் என். சிவலிங்கத்தை 9940318891, 9940693588 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.


Thursday, October 3, 2013

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு

நோட்டுப் புத்தகத்தின் தேவை என்ன என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளி, கல்லூரிகள் அலுவலகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. சாகாவரம் பெற்ற இந்தத் தொழிலைப் பற்றிதான் இந்த வாரம் நாம் பார்க்கப் போகிறோம்...
கம்ப்யூட்டர், லேப்டாப் என தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்டாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றும் நோட்டுப் புத்தகங் களில்தான் எழுதி வருகின்றனர். எனவே, எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை நோட்டுப் புத்தகங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்குப் பாடங்கள் அதிகமாக ஆக, நோட்டு களுக்கான தேவையும் எதிர்காலத்தில் இருந்து கொண்டே இருக்கும். பள்ளி, கல்லூரிகளை நேரடியாக அணுகி, ஆர்டர் பெறுவதன் மூலம் நோட்டுக்களை விற்கலாம். அல்லது உரிய டீலர் மூலம் கடைகளில் சப்ளை செய்துவிடலாம். நோட்டு தயாரிப்பின்போது மீதமாகும் கட்டிங் வேஸ்டுகளை மறுசுழற்சி முறையில் இரண்டாம் தர நோட்டுகளைத் தயார் செய்பவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
நிலம் மற்றும் கட்டடம்!
இந்தத் தொழில் தொடங்க 1,000 முதல் 1,500 சதுர அடி வரை இடம் தேவை. இதில், குறைந்தது 750 சதுர அடி அளவில் கட்டடம் இருக்க வேண்டும்.
மூலப் பொருள்!
நோட்டுப் புத்தகம் தயாரிக்கத் தேவைப்படும் பேப்பர் சுருள் வடிவிலும், பெரிய ஷீட் வடிவிலும் கிடைக்கிறது. கிலோ கணக்கில் கிடைக்கும் இந்த மூலப் பொருளின் விலை கல்வி ஆண்டின் ஆரம்ப காலத்தில் அதிகமாகவும், பின்னர் ஆறு மாதம் குறைவாகவும் இருக்கும். பொதுவாக கிலோ 52-55 ரூபாய் வரையில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருட்கள் டி.என்.பி.எல்., எஸ்.பி.பி. போன்ற கம்பெனிகளிடம் கிடைக்கிறது.

இயந்திரம்!  
மூலப் பொருள் தொடங்கி நோட்டுக்களாக மாறுகிற வரை மொத்தம் ஐந்து இயந்திரங்கள் தேவை. ரூலிங் மெஷின், பைண்டிங்க் மெஷின், கட்டிங் மெஷின், பின்னிங் மெஷின் மற்றும் பிரின்டிங் மெஷின் என்கிற இந்த ஐந்து இயந்திரங்களை வாங்க மொத்தம் 14 லட்சம் ரூபாய் வேண்டும். இதில், முதல் நான்கு இயந்திரங்களும் கேரளா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. பிரின்டிங் இயந்திரம் இங்கு கிடைத்தாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது நல்லது. இந்த பிரின்டிங் மெஷினை தேவைப்பட்டால் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். அட்டையில் படங்களையும் எழுத்துக்களையும் பிரின்ட் செய்வதற்காகவே இந்த மெஷின். ஏற்கெனவே பிரின்ட் செய்யப்பட்ட அட்டைகள் சந்தையில் கிடைப்பதால், அதை வாங்கி, நோட்டுடன் பைண்ட் செய்து தந்துவிடலாம். தவிர, இந்த மெஷினின் விலையும் அதிகம். பிரின்டிங் இயந்திரத்துடன் சேர்த்து இந்தத் தொழில் தொடங்குவதற்கு இருபது லட்ச ரூபாய்க்கு மேல் தேவைப்படும்.
தயாரிப்பு முறை!
நோட்டுப் புத்தகங்கள் இரண்டு வகையாகத் தயாரிக்கப்படுகிறது. 40-90 பக்கம் கொண்ட நோட்டு புத்தகம் ஒரு வகை. 192-400 வரையிலான பக்கங்களைக் கொண்ட நோட்டுப் புத்தகம் மற்றொரு வகை. இந்த இரண்டு வகையைப் பொறுத்தே தயாரிப்பு வேலைகள் மாறும்.
ரூலிங் மெஷின்!
இந்த மெஷினில் பேப்பரை வைத்து நமது தேவைக்கேற்ப நோட்டுப் புத்தகத்தில் வரிகளைப் போட பயன்படு கிறது. இந்த மெஷின் முதலில் மார்ஜின் லைனும், பின்னர் தேவையான வரிகளையும் போடுகிறது. இந்த வேலை செய்ய இரண்டு ஆட்கள் தேவைப்படுவார்கள். இப்படி வரிகளுடன் அச்சாகி வரும் பேப்பர்கள் எண்ணப்பட்டு தனியாக வைக்கப்படும். அன்ரூல்டு நோட்புக்கை மட்டுமே தயாரிப்பவர்களுக்கு இந்த மெஷின் தேவையிருக்காது.  

கட்டிங் மெஷின்!
எண்ணப்பட்ட பேப்பர்கள் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப வெட்டப்படுகிறது. சின்ன நோட்டு, பெரிய நோட்டு என்று தேவைப்படும் அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையினைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.
பின்னிங் மெஷின்!
வெட்டப்பட்ட பக்கங்கள் பின்னிங் மெஷின் மூலம் பின் அடிக்கப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவைப்படுவார்கள். பின் அடிக்கப்பட்ட நோட்டுகள் கட்டிங் மெஷின் மூலம் வெட்டுகிறார்கள்.
பைண்டிங் மெஷின்!
இப்படி வெட்டப்பட்டு வருகிற பெரிய நோட்டுகளில் வெளிப்பக்கமாக அட்டை வைத்து 300 செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்பட்ட பசையை (நிuனீ) கொண்டு ஒட்டுகிறார்கள். இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவை. பின்னர் மீண்டும் கட்டிங் மெஷினில் வைத்து பிசிறில்லாமல் சீராக வெட்டி சரி செய்கிறார்கள்.  

பிரின்டிங் மெஷின்!
இந்த மெஷின் மூலம்தான் நோட்டின் அட்டைகள் பிரின்ட் செய்யப்படுகிறது. இந்த மெஷினைக் கொண்டு முகப்பு அட்டையில் வேண்டிய டிசைன் அல்லது படங்களை பிரின்ட் செய்து கொள்ளலாம். இந்த மெஷினை புத்தகங்களை அச்சடிக்கவும், வேறு பல பிரின்டிங் வேலை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மைனஸ் :
இந்தத் தொழிலைப் பொறுத்தவரை மே மாதம் தொடங்கி ஆறு மாதம் வேலை இருக்கும். அடுத்துவரும் சில மாதங்களுக்குப் பெரிதாக வேலை இருக்காது. இதுதான் இந்தத் தொழிலில் இருக்கும் பாதகம். தவிர, தொழில் நன்றாக இருக்கும்போது மூலப் பொருளின் விலை உச்சத்தில் இருக்கும் என்பதும் பாதகமான விஷயமே.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், தயாரித்த நோட்டுக்கள் விற்க முடியாத நிலை நிச்சயம் உருவாகாது. எனவே, புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி குழந்தைகளை ஈர்த்தால் இந்தத் தொழிலில் நிச்சயம் வெற்றிதான்!    
- பானுமதி அருணாசலம், அ.முகமது சுலைமான்.
படங்கள் : ச.இரா. ஸ்ரீதர்

Wednesday, March 13, 2013

மொய் கவரில் ஒளிந்திருக்கிறது உங்களுக்கான வருமானம்!




xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

































கல்யாணமோ, காதுகுத்தோ... பார்த்துப் பார்த்து அன்பளிப்பு வாங்கித் தருவது சிலரது வழக்கம்; ‘‘அதுக்கெல்லாம் பொறுமையும் இல்லை. நேரமும்  இல்லை. ஒரு கவர்ல பணத்தை வச்சுக் கொடுத்துட்டா, தேவையானதை அவங்களே வாங்கிக்கட்டும்’’ என்கிறவர்கள் இன்னொரு ரகம்.

நீங்கள் இரண்டாவது ரகமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்... அன்பளிப்பு கொடுக்கும்போது, உள்ளே இருக்கிற பொருளின் மதிப்பு தெரியாதபடி  அதை அழகாக ‘கிஃப்ட் பேக்’ செய்து ஆடம்பரமாகத்தானே கொடுப்போம். பணமாகக் கொடுக்கும்போது மட்டும், கையில் கிடைத்த ஏதோ ஒரு கவரில்  ஏன் போட்டுத் தர வேண்டும்?

ஒவ்வொரு விசேஷத்துக்கும் பொருத்தமாக, வித்தியாசமான மொய் கவர்கள் இப்போது பிரபலமாக ஆரம்பித்திருக்கின்றன. டிசைனர் மொய் கவர்  தயாரிப்பதில் வருடம் முழுக்க பிசியாக இருக்கிறார்  ‘‘வட இந்தியாவுல இந்தப் பழக்கம் ரொம்ப காலமாவே  இருக்கு. நம்மூருக்கு இது புதுசு. பிறந்த குழந்தைக்கு பணம் கொடுக்கணும்னா, தொட்டில் அல்லது ஃபீடிங் பாட்டில் ஷேப்; குட்டிப் பசங்களுக்குன்னா  கார்ட்டூன், பென்சில் பாக்ஸ், பேனா, ஐஸ்கிரீம், சாக்லெட் ஷேப்; கிரகப்பிரவேசத்துக்குன்னா வீடு வடிவத்துல...

இன்னும் இப்படி உங்க கற்பனைக்கேத்தபடி எந்த ஷேப்லயும் இந்த கவர்களை பண்ணலாம். ஹேண்ட்மேட் பேப்பர், துணி, கலர் கலரான சார்ட் பேப்பர்,  கிஃப்ட் பேப்பர், சாட்டின் ரிப்பன், குந்தன் கல், கண்ணாடி, 3டி லைனர், ஜரிகை, விதம்விதமான பன்ச்சிங் மெஷின், பசை... இப்படி இதை செய்யத்  தேவையான எல்லாப் பொருள்களுமே சுலபமா கிடைக்கும்.

எல்லா மாடல்களுக்கும் அளவு இருக்கும். அதை வச்சு அதைவிடப் பெரிசாகவோ, சின்னதாகவோ பண்ணிக்கலாம். ஒரு நாளைக்கு 15 முதல் 20  கவர்கள் பண்ணலாம். ஸ்டேஷனரி கடைகள், அன்பளிப்புப் பொருள்கள் விற்கிற கடைகள், கல்யாணப் பத்திரிகை, கல்யாணப் பரிசுகள் விற்கிற  கடைகள்ல ஆர்டர் எடுக்கலாம். மாடல் மற்றும் வேலைப்பாடுகளைப் பொறுத்து, ஒரு கவர் 15 ரூபாய்லேருந்து விற்கலாம். அதிகபட்சமா 50 ரூபாய்,  75 ரூபாய்க்குக் கூட கவர்கள் உண்டு. வருஷத்துல எல்லா நாளும் வாய்ப்பு இருக்கிற பிசினஸ் இது’’  மொய் கவரில்  ஒளிந்திருக்கிறது உங்களுக்கான வருமானம்!



Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites