இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label ஊதுவத்திகள் செய்தல். Show all posts
Showing posts with label ஊதுவத்திகள் செய்தல். Show all posts

Tuesday, February 18, 2014

கோடை விடுமுறையில் ஊதுவத்தி தயாரிக்கும் மாணவர்கள்




கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
÷குடும்ப வறுமையின் காரணமாக, பள்ளி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் தங்களது பெற்றோர்களுக்கு உறுதுணையாக அவர்களது பணிகளை மாணவர்கள் கவனித்து வருகின்றனர்.
÷அந்த வகையில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பெற்றோருக்கு ஆதரவாக ஊதுவத்தி தயாரிக்கும் பணியில், திருத்தணியை அடுத்த மேதினிபுரம் கிராமத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
÷குடும்ப நிதிநிலையை உயர்த்த, ஊதுவத்தி தயாரிக்கும் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.
÷தற்போது விவசாயம் மற்றும் எந்தவிதப் பணியும் இல்லாததால் மாற்றுத்தொழிலாக ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த கிராமத்தில் மொத்தம் உள்ள 100 வீடுகளில் 85 சதவீதம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
÷இதேபோல் ஆர்.கே.பேட்டை, ராஜாநகரம், கோணசமுத்திரம், நொச்சிலி, கேசவராஜகுப்பம் உட்பட பல கிராமங்களில் குலத்தொழிலாக செய்து வருகின்றனர்.
÷இது குறித்து திருத்தணியை அடுத்த மேதினிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி கூறியது: "நாங்கள் இந்தத் தொழிலை கடந்த 15 ஆண்டுகளாக செய்து வருகிறோம். கோடைகாலம் என்பதால் விவசாயக் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் பயிர் செய்ய முடியாமல் கட்டட வேலை, 100 நாள் வேலை ஆகியவற்றுக்குச் சென்று மதியம் ஓய்வு நேரத்தில் ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
÷ஊதுவத்தி தயாரிப்பதற்கான 2 வகையான மாவு மற்றும் குச்சிகளை ஏஜன்டுகளே நேரில் வந்து கொடுத்துவிட்டு செல்கின்றனர். பின்னர் வாரத்துக்கு ஒருமுறை வந்து நாங்கள் தயாரித்து வைத்த ஊதுவத்திகளை எடுத்துக் கொண்டு அதற்கான ஊதியத்தை வழங்கிவிட்டு செல்கின்றனர்.
÷ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ஊதுவத்திகள் தயார் செய்கிறோம்.
÷தற்போது பள்ளி விடுமுறை என்பதால் என்னுடன் எனது குழந்தைகளும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தினசரி 5 ஆயிரம் ஊதுவத்திகள் தயாரிக்க முடிகிறது. ஆயிரம் ஊதுவத்தி தயார் செய்து கொடுத்தால் ரூ.25 வழங்குகின்றனர்' என்றார்.

ஊதுவத்தி தயாரிப்பு முறை .

ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும்.
 இதற்கு பெரிய மூலதனம் தெவையில்ல. ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்திகள் தயாரித்து நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஊதுவத்தி தயாரிக்க சுறு மூலதனத்துடன் குடும்பத்திலுள்ள நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம் கிடைக்கும்.


ஊதுவத்தி வகைகள்

ஊதுவத்திகளில் அகர்பத்தி,சந்தனவத்திமட்டிப்பால் வத்தி. மல்லிகைப்பூவத்திதாழம்பூ வத்திரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள் இருக்கின்றன. இவை எல்லா வற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும் பொருள்கள் தான் வேறு.


 1. சந்தன வத்தி.
தேவையான பொருள்கள்

சந்தன பவுடர் -500கிராம்

சாம்பிராணி -500கிரம்

வெட்டிவேர் - 200 கிராம்

கிச்சிலிக் கிழங்குப் பொடி -100 கிராம்

புனுகு -2 கிராம்

கஸாதூரி -2 கிராம்

பன்னீர் -100 மில்லி   இவைகளை அறைக்க பயன்படும் இயந்திரம்

 உலர வைக்கும் இயந்திரம்
உலர வைக்கும் இயந்திரம் 



உலர வைக்கும் இயந்திரம் 

சைஸ் பண்ணும் இடம் 



சைஸ் பண்ணும் இடம் 



உலர வைக்கும் இடம்

வண்ணங்கள் திட்டும் இட

பேக்கிங்  செய்யும் இடம்

ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும்

ஊதுவத்தி வகைகள்

ஊதுவத்திகளில் அகர்பத்தி,சந்தனவத்திமட்டிப்பால் வத்தி. மல்லிகைப்பூவத்திதாழம்பூ வத்திரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள் இருக்கின்றன. இவை எல்லா வற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும் பொருள்கள் தான் வேறு.

அடிப்படையான பொருள்
வழவழப்பான பலகை

ஊதுவத்தி தயாரிக்க முக்கியமாக வழவழப்பான மணை(பலகை) தேவை. சிமார் 60 செ.மீ நீளமும் 30 செ.மீ. அகலமும் உள்ள பலகை மீது வைத்துதான் ஊதுவத்திகள் தயரிக்கப்படுகின்றன.

மூங்கில் குச்சிகள்

சுமார் 15 செ.மீ முதல் 25 செ. மீ நீளம் வரை இருக்கும் மூங்கில் குச்சிகள் தேவை இவைகள் தயாரிப்புப் பொருள்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும். இவை எல்லா வகையான ஊதுவத்தி தயாரிப்புக்கும் அடிப்படைத் தேவையாகும்

செயல் முறை

வெட்டிவேர் கிச்சிலிக் கிழங்குப் பொடி இரண்டையும் நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து நைசாகத் தாயரித்துக்கொள்ளவும். அம்மியில் அல்லது கலுவத்தில் சாம்பிராணியை வைத்து விழுதாக அரையுங்கள். ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு அதனுடன் சந்தனப் பவுடர்வெட்டிவேர்கிச்சிலிக் கிழக்குப் பொடியைச் சேர்த்துப் பன்னீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். கடைசியில் புனுகுகஸ்தூரி இரண்டையும் சேர்த்துப் பிசையவும். விழுது கையில் ஒட்டக் கூடாது. அப்படியே ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

மூங்கில் குச்சிகளை எடுத்துச் சுத்தப்படுத்துங்கள். சுண்டைக்காயளவு மேற்கண்ட கலவையை எடுத்து மணையில் சிறிதளவாகப் பரப்பவும். ஒரு மூங்கில் குச்சியின் அடிப் பாகத்தில் இரண்டு செ.மீ விட்டு தள்ளி மணைமீது வைத்து கலவை குச்சியில் ஒட்டிக் கொள்ளுமாறு மெள்ள உருட்டவும். கலவைப் பொருள் குச்சியின் அடிப்பாகத்தில் இடம் விட்டது போக மீதமுள்ள பகுதி முழுவதும் சமமாகப் பரவி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றினாலும் ஒருநாளில் பழகிவிட்டால் ஊதுவத்தி உருட்டுவதற்கு எளிதாக வரும். பின் கலவை ஒட்டியுள்ள பகுதியை இரண்டு விரல்கள் மற்றும் உள்ளங்கையால் தேய்த்து விடவேண்டும்.

பின் மெல்லிய எண்ணெய்க் காதிகத்தை ந்ழலில் பிரித்துப் போட்டு அதன் மீது பரப்பிவிடுங்கள். இரவு முழுவதும் உலர்ந்த பிறகு எல்லாவற்றையும் சேகரிக்கவும். குச்சியின் அடியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் ஏதேனும் ஒரு நிறச் சாயம் கொண்டு தோய்த்து விடுங்கள். பெரும்பாலும் சிவப்பு மற்றும் பச்சை சாயத்தையே தோய்ப்பர். இது பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அடிப்பகத்தைத் தனியேக் காட்டும்.

வசதியிருந்தால் அட்டைப் பெட்டிகள்அட்டைக் குழாய்கள் தகரக் குழாய்கள் தயாரித்து தேவைக்கேற்பவும் விலைக்கேற்பவும் 1050100 வத்திகளை மெல்லிய எண்னெய்க் காகிதத்தில் சுற்றி அதனுள் போட்டு மூடி விடலாம். இவற்றை எடுத்துச் சென்று கடைகளில் கொடுத்து விற்கச் செய்யலாம். அல்லது நீங்களே நேரிடையாகப் பொதுமக்களிடம் விற்கலாம்.



2. கதம்ப சந்தன வத்தி.

தேவையான பொருட்கள்

சந்தனப் பவுடர் -300 கிராம்

சாம்பிராணி -100 கிராம்

மட்டிப்பால் -75 கிராம்

மைனாலக்கிடிப் பட்டை -150 கிராம்

கிச்சிலிக்கிழங்கு -75 கிராம்

கோரைக் கிழங்கு -75 கிராம்

வெட்டிவேர் -30 கிராம்

விளாமிச்சம்வேர் -30 கிராம்

அன்னசிப் பூ -30 கிராம்

ரோஜாப் பூ -30 கிராம்

இலவங்கப்படை -30 கிராம்

இலவங்கம் -10 கிராம்

கார்போக அரிசி -30 கிராம்

ஜாதிப் பத்திரி -10 கிராம்

கிளியூரல்பட்டை -30 கிராம்

ஏலக்காய் -30 கிராம்

மரிக்கொழுந்து -30 கிராம்

தவனம் -30 கிராம்

ஜாதிக்காய் -இரண்டு

செய்முறை
சந்தனப் பவுடர்சாம்பிராணிமட்டிப்பால் தவிர மற்ற பொருள்களை நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். சாம்பிராணிமட்டிப்பால் இரண்டையும் அம்மி அல்லது கலுவத்தில் நைசாக அரைத்து அவற்றுடன் போடுங்கள். சந்தனப் பவுடரையும் போட்டு பன்னீர் கலந்து விட்டுப் பிசையுங்கள். எல்லாப் பொருள்களும் ஒன்றாகும் படி கலவையைப் பிசைந்ததும் மூடி ஒரு இரவு முழுதும் வைத்திருங்கள். மறுநாள் கலை எடுத்து ஊதுவத்தி தயாரியுங்கள். இந்த ஊதுவத்தி சந்தன மனத்துடன் பலவிதமான மணத்துடன் சேர்ந்து இருக்கும்

மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ளவும்

U.K. Industries
Mr. Abdul Khuddus (Managing Director)
No. 3, Survey No. 55/25, Bellahalli Cross, Yelahanka Hobli
Bengaluru - 560064, Karnataka, India





Wednesday, September 4, 2013

பேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி, சைக்கிள் பிராண்ட்.

  

 அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எனது அப்பா தொடங்கிய நிறுவனம் இது என்றாலும், அப்பாவுக்குப் பிறகுதான் பல திருப்புமுனைகளை நாங்கள் சந்தித்தோம். எங்களுக்குப் பூர்வீகம் கர்நாடகம் என்றாலும் அப்பாவும், அம்மாவும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். என் அப்பா, பெரியகுளத்தில் பள்ளிப்படிப்பையும், மதுரையில் கல்லூரி படிப்பையும் முடித்தார். ஐந்து பேரை டைப்ரைட்டிங் கோர்ஸ் சேர்த்துவிட்டு, அதற்கு கமிஷனாக இவர் அந்த கோர்ஸை இலவசமாகப் படிப்பார்.

யாரும் செய்யாத வேலைகளைச் செய்து சம்பாதிக்க வேண்டும் என்று கூர்க் காப்பி தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்கும் வேலையைச் செய்ய கர்நாடகம் வந்தார். அப்போது மைசூரில் அகர்பத்திக்கு இருந்த மோகத்தைப் பார்த்து அந்த தொழிலில் இறங்கினார். இப்படி ஆரம்பமானதுதான் எங்கள் நிறுவனம்.

எங்களது ஊதுபத்திகளுக்கு வாசனை சேர்ப்பதற்கு பிறர் தயாரித்து கொடுக்கும் வாசனைத் திரவியங்களை வாங்காமல் நாங்களே நேரடியாகத் தயாரிக்கும் திரவியங்களை பயன்படுத்தியதே எங்கள் முதல் திருப்புமுனை. வெளிநாடுகளிலிருந்து வாசனைத் திரவியங்கள் தயாரிப்பது தொடர்பான புத்தகங்கள், பயிற்சிகள் என இப்போதும் இந்த முயற்சிகளை நாங்கள் தொடர்கிறோம்.

எல்லா மொழிகளிலும், எல்லா மக்களுக்கும் எளிதாகப் புரிய வேண்டும் என்பதற்காக சைக்கிளை டிரேட் மார்க்காக வைத்தது எங்கள் இரண்டாவது திருப்புமுனை. நாங்கள் மொத்த விற்பனை செய்தாலும், ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி அப்பா தனியாக ஆர்டர் பிடித்து வருவார். அப்பாவுக்குப் பிறகு நானும், அண்ணனும் அந்த வேலையை இன்றும் செய்து வருகிறோம்.

எங்கள் மூன்றாவது திருப்புமுனை நாங்கள் செய்த பேக்கிங் யுக்தி. பொதுவாக ஊதுபத்தியின் விலையைவிட அதை பேக்கிங் செய்ய அதிகம் செலவாகும். நாங்கள் பேக்கிங்கை சாதாரண டிஷ்யூ பேப்பருக்கு மாற்றி, குறைந்த விலையில் தரமான ஊதுபத்திகளை அளித்தோம்.

இந்த யுக்திகளும் திருப்புமுனைகளும் குடும்பத் தொழிலிலிருந்து எங்களை தொழில் குடும்பமாக மாற்றியது. அப்பா ஏற்படுத்தித் தந்த அடித்தளம் எங்களுக்கு ஆணிவேர் என்றாலும், எங்களது உழைப்பு அந்த செடியில் பூக்களாக மலர்ந்து நிற்கிறது!

  - நீரை.மகேந்திரன்.


Friday, November 9, 2012

ஊதுவத்திகள் செய்தல்


ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும். இதற்கு பெரிய மூலதனம் தெவையில்ல. ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்திகள் தயாரித்து நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஊதுவத்தி தயாரிக்க சுறு மூலதனத்துடன் குடும்பத்திலுள்ள நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம் கிடைக்கும்.


ஊதுவத்தி வகைகள்

ஊதுவத்திகளில் அகர்பத்தி,சந்தனவத்தி, மட்டிப்பால் வத்தி. மல்லிகைப்பூவத்தி, தாழம்பூ வத்தி, ரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள் இருக்கின்றன. இவை எல்லா வற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும் பொருள்கள் தான் வேறு.

அடிப்படையான பொருள்

வழவழப்பான பலகை

ஊதுவத்தி தயாரிக்க முக்கியமாக வழவழப்பான மணை(பலகை) தேவை. சிமார் 60 செ.மீ நீளமும் 30 செ.மீ. அகலமும் உள்ள பலகை மீது வைத்துதான் ஊதுவத்திகள் தயரிக்கப்படுகின்றன.

மூங்கில் குச்சிகள்

சுமார் 15 செ.மீ முதல் 25 செ. மீ நீளம் வரை இருக்கும் மூங்கில் குச்சிகள் தேவை இவைகள் தயாரிப்புப் பொருள்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும். இவை எல்லா வகையான ஊதுவத்தி தயாரிப்புக்கும் அடிப்படைத் தேவையாகும்.


1. சந்தன வத்தி.

தேவையான பொருள்கள்

சந்தன பவுடர் -500கிராம்

சாம்பிராணி -500கிரம்

வெட்டிவேர் - 200 கிராம்

கிச்சிலிக் கிழங்குப் பொடி -100 கிராம்

புனுகு -2 கிராம்

கஸாதூரி -2 கிராம்

பன்னீர் -100 மில்லி

 செயல் முறை

வெட்டிவேர் கிச்சிலிக் கிழங்குப் பொடி இரண்டையும் நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து நைசாகத் தாயரித்துக்கொள்ளவும். அம்மியில் அல்லது கலுவத்தில் சாம்பிராணியை வைத்து விழுதாக அரையுங்கள். ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு அதனுடன் சந்தனப் பவுடர், வெட்டிவேர், கிச்சிலிக் கிழக்குப் பொடியைச் சேர்த்துப் பன்னீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். கடைசியில் புனுகு, கஸ்தூரி இரண்டையும் சேர்த்துப் பிசையவும். விழுது கையில் ஒட்டக் கூடாது. அப்படியே ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

மூங்கில் குச்சிகளை எடுத்துச் சுத்தப்படுத்துங்கள். சுண்டைக்காயளவு மேற்கண்ட கலவையை எடுத்து மணையில் சிறிதளவாகப் பரப்பவும். ஒரு மூங்கில் குச்சியின் அடிப் பாகத்தில் இரண்டு செ.மீ விட்டு தள்ளி மணைமீது வைத்து கலவை குச்சியில் ஒட்டிக் கொள்ளுமாறு மெள்ள உருட்டவும். கலவைப் பொருள் குச்சியின் அடிப்பாகத்தில் இடம் விட்டது போக மீதமுள்ள பகுதி முழுவதும் சமமாகப் பரவி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றினாலும் ஒருநாளில் பழகிவிட்டால் ஊதுவத்தி உருட்டுவதற்கு எளிதாக வரும். பின் கலவை ஒட்டியுள்ள பகுதியை இரண்டு விரல்கள் மற்றும் உள்ளங்கையால் தேய்த்து விடவேண்டும்.

பின் மெல்லிய எண்ணெய்க் காதிகத்தை ந்ழலில் பிரித்துப் போட்டு அதன் மீது பரப்பிவிடுங்கள். இரவு முழுவதும் உலர்ந்த பிறகு எல்லாவற்றையும் சேகரிக்கவும். குச்சியின் அடியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் ஏதேனும் ஒரு நிறச் சாயம் கொண்டு தோய்த்து விடுங்கள். பெரும்பாலும் சிவப்பு மற்றும் பச்சை சாயத்தையே தோய்ப்பர். இது பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அடிப்பகத்தைத் தனியேக் காட்டும்.

வசதியிருந்தால் அட்டைப் பெட்டிகள், அட்டைக் குழாய்கள் தகரக் குழாய்கள் தயாரித்து தேவைக்கேற்பவும் விலைக்கேற்பவும் 10, 50, 100 வத்திகளை மெல்லிய எண்னெய்க் காகிதத்தில் சுற்றி அதனுள் போட்டு மூடி விடலாம். இவற்றை எடுத்துச் சென்று கடைகளில் கொடுத்து விற்கச் செய்யலாம். அல்லது நீங்களே நேரிடையாகப் பொதுமக்களிடம் விற்கலாம்.


2. கதம்ப சந்தன வத்தி.

தேவையான பொருட்கள்

சந்தனப் பவுடர் -300 கிராம்

சாம்பிராணி -100 கிராம்

மட்டிப்பால் -75 கிராம்

மைனாலக்கிடிப் பட்டை -150 கிராம்

கிச்சிலிக்கிழங்கு -75 கிராம்

கோரைக் கிழங்கு -75 கிராம்

வெட்டிவேர் -30 கிராம்

விளாமிச்சம்வேர் -30 கிராம்

அன்னசிப் பூ -30 கிராம்

ரோஜாப் பூ -30 கிராம்

இலவங்கப்படை -30 கிராம்

இலவங்கம் -10 கிராம்

கார்போக அரிசி -30 கிராம்

ஜாதிப் பத்திரி -10 கிராம்

கிளியூரல்பட்டை -30 கிராம்

ஏலக்காய் -30 கிராம்

மரிக்கொழுந்து -30 கிராம்

தவனம் -30 கிராம்

ஜாதிக்காய் -இரண்டு

செய்முறை
சந்தனப் பவுடர், சாம்பிராணி, மட்டிப்பால் தவிர மற்ற பொருள்களை நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். சாம்பிராணி, மட்டிப்பால் இரண்டையும் அம்மி அல்லது கலுவத்தில் நைசாக அரைத்து அவற்றுடன் போடுங்கள். சந்தனப் பவுடரையும் போட்டு பன்னீர் கலந்து விட்டுப் பிசையுங்கள். எல்லாப் பொருள்களும் ஒன்றாகும் படி கலவையைப் பிசைந்ததும் மூடி ஒரு இரவு முழுதும் வைத்திருங்கள். மறுநாள் கலை எடுத்து ஊதுவத்தி தயாரியுங்கள். இந்த ஊதுவத்தி சந்தன மனத்துடன் பலவிதமான மணத்துடன் சேர்ந்து இருக்கும்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites