இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label கீரைகளின் மருத்துவம். Show all posts
Showing posts with label கீரைகளின் மருத்துவம். Show all posts

Wednesday, April 4, 2012

பிரண்டைக் கீரை

(Cissus quadrangularis)
பிரண்டைக் கீரை சமையல் வகைகள்-pirandai.jpg
1) வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.
2) தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.


3) தாவரக்குடும்பம் - :VITACEAE.


4) வகைகள் -:முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, மூங்கில்பிரண்டை அல்லது கோப்பிரண்டை, உருண்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, தீப்பிரண்டை.


5) வளரும் தன்மை -: பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும்உடையது.


6) பயன்தரும் பாகங்கள் -: வேர் தண்டு ஆக்கியவை


7) பயன்கள் -: இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.


பிரண்டை உப்பு -: பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.


பேதி, வாந்தி -: குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.


வாய்ப்புண் - :வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.


வயிற்றுப்புண் -: தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேழை சாப்பிட குணமாகும்.


மூலம் -:நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 24 -48 நாள் இரு வேழை கொடுக்க குணமாகும்.


பிரண்டை பற்பம் - : 300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.


உடல் பருமன் -: பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.


ஆஸ்துமா -: இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.


சூதகவலி - : மூன்று வேழை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.


தாதுநட்டம் -: பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.


செரியாமை -: பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.


நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.
பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேழையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.


காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்கஇந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.



பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.


முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.



பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேழைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.


பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.

1. பிரண்டை இலைத் துவையல்

தேவையான பொருள்கள்

பிரண்டை இலை – 100 கிராம்
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 3 பல்
மிளகு – 5
மிளகாய் வற்றல் – 3
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு, மஞ்சள் – தேவையான அளவு

செய்முறை


  1. இஞ்சி, பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல், மஞ்சள் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு, பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை கொஞ்சம் நெய் சேர்த்து வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்து உள்ளதையும் சேர்த்து அரைத்து, தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  3. பிரண்டை இலைக்குப் பதிலாக பிரண்டை தண்டைப் பயன்படுத்தியும் துவையல் செய்யலாம்.
  4. இந்தத் துவையலை அடிக்கடி சாப்பிட்டால், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குடற்புண், மூல நோய்கள் போன்றவை குணமாகும்.

வெற்றிலை

வெற்றிலை மலேசியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது . இக்கொடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. பயிரிடப்படும் கொடிதான்; இது தானாக எங்கும் விளைவதில்லை; வெற்றிலை வளரும் இடத்தைக் கொடிக்கால் என்று கூறுவர் . பெரும்பாலும் தமிழ் நாட்டில் அது அகத்திச் செடிகளின் மேல் படர விட்டு வளர்க்கப்படுகிறது .இது செடியைச் சுற்றிப் படர்வதால் நாகவல்லி என்றும் பெயர் பெற்றுள்ளது. தென்னந்தோப்புகளில் இதை ஊடுபயிராகவும் விளைவிப்பதுண்டு.




நாகவல்லி சிலை ஒரிசாவின் அனைத்து ஆலயங்களிலும் இடம் பெற்றுள்ளது .முக்கியமாக கோநார்க்கில் அதிகம் உள்ளது.

வெற்றிலை வெறும் இல்லை மட்டுமன்று; மூலிகை மட்டுமன்று. .அது மிகுந்த சமூக மதிப்பு வாய்ந்தது. தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது அந்தக்காலத்தில் மன்னர்கள் தொடர்ந்து வெற்றிலையைத் தாம்பூலமாகப் பயன்படுத்தினர் அந்த வெற்றிலையை மடித்துக் கொடுப்பதற்காக அமைச்சர் மதிப்பில் ஓர் அதிகாரியும் அருகில் இருப்பார் .அவருக்குச் சில சமயம்
அமைச்சரை விட மதிப்பு அதிகம் உண்டு; அவருக்கு பெயரே அடைப்பக்காரர். அரியநாயகம் என புகழ்பெற்ற மதுரை நாயக்கர் முதலில் கிருஷ்ணதேவராயரிடம் அடைப்பக்காரராக இருந்ததாகக் கூறப்படுகிறது .எந்த ஒரு செயலுக்கும் அச்சாரம் போடுவதற்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து விட்டால் போதும்; அதுவே ஒப்பந்தம் ஆன மாதிரிதான். இன்றும் கூட திருமண நிச்சயத்தை வெற்றிலை பாக்கு (தாம்பூலம்) மாற்றிக்கொள்வது என்றுதானே கூறுகிறோம் . நமது சமூக வாழ்வில் அத்தனை மதிப்பு வெற்றிலைக்கு உண்டு .தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெற்றிலை இல்லாமல் எந்த சுப காரியமும் தமிழர் வாழ்வில் இல்லை; வெற்றிலை இல்லாத கடவுள் வழிபாடும் தமிழர் வாழ்வில் இல்லை . ஏன் என்றே தெரியாமல் தொடர்ந்து வழக்கமாக நாம் வெற்றிலையை நமது வாழ்வின் அத்தனை செயல்களிலும் உபயோகித்து வருகிறோம்.

கடவுளை மறுப்போர் கூட இதை ஏன் என்று கேட்கவில்லை .
வெற்றிலை என்பதே பன்மைதான்; வெற்றிலைகள் என்று கூறப்படுவதில்லை. அதை என்றும் ஒன்றாகவும் உபயோகிப்பதில்லை .
.
வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையில் கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு .

வெற்றிலையைக் கொண்டு ஆருடம், சோதிடம்கூடப் பார்ப்பதுண்டு .மாந்திரீகத்திலும் இதற்குத் தனி இடம் உண்டு .

மூலிகையின் பெயர் -: வெற்றிலை.
தாவரப் பெயர் -: PIPER BETEL.
தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.

தாம்பூலம், நாகவல்லி, வேந்தன் என்று வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

வெற்றிலை வெப்பம் தரும்; உமிழ்நீர் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; காமத்தைத் தூண்டும்; நாடி நரம்பை உரமாக்கும்;
நறுமணம் அளிக்கும்.

வெற்றிலைச் சாற்றுடன் பாலையும் கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும். குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் கஸ்தூரி, கோரோசனை ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக் கொடுக்கச் சளி, இருமல், மாந்தம், இழுப்பு குணமாகும். பல மருந்துகளுக்கு வெற்றிலை அனுபானமாகும் .
( உட்செல்லும் மருந்தோடு இதையும் உண்பதால் வீரியம் மிகும்)

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்கச் சிறிது வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.இது ஒரு சிறந்த கருத்தடை மருத்து. வெற்றிலை வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவேதான் இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கும்பகோணம் வெற்றிலையும், இசையும் பெயர் பெற்றவை .
நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும்.

The chief constituent of the leaves is a volatile oil varying in the leaves
from different countries and known as Betel oil. It contains two phenols,
betel-phenol (chavibetol) and chavicol. Cadinene has also been found. The
best oil is a clear yellow colour obtained from the fresh leaves.
Medicinal Action and Uses---The leaves are stimulant antiseptic and
sialogogue; the oil is an active local stimulant used in the treatment of
respiratory catarrhs as a local application or gargle, also as an inhalant
in diphtheria. In India the leaves are used as a counter-irritant to
suppress the secretion of milk in mammary abscesses. The juice of 4 leaves
is equivalent in power to one drop of the oil.

”அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம்
அதி பித்தம் இரண்டாவதூறு நீரே
கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர்
மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி
வருநீர் களைச் சுகித்து
தடையுருப் பித்தமொடு மந்த நோயும் தளர்பாண்டு நோயும்
உண்டாம் தரம் சொன்னோம்.”
--- தேரையர்
இதே கருத்தை வள்ளல் பெருமானும் தமது வசனப்பகுதியில் கூறி இருக்கிறார் .

இரண்டு வெற்றிலையோடு ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி, தேங்காய்த் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு கால் லிட்டர் ஆகக் குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து மூன்று வேளை உணவுக்கு முன்பு அருந்தினால் குணமாவதாகக் கூறப்படுகிறது.

Paan - Urdu/Hindi/Bengali,
Taambuul and Nagavalli - Sanskrit.
Tamalapaku - Telugu
Vidyache pan - Marathi,
Veeleyada yele - Kannada,
Vettila - Malayalam

உணவுக்குப்பின் வெற்றிலையை அளவாக உபயோகிக்க உண்ட உணவு ஜீரணமாகும் .ஜப்பானிய டீ விருந்து முறை போல் வெற்றிலை, பாக்கு,சுண்ணாம்பு இவைகளைச் சேர்த்து அந்தக்காலத்து மனிதர்கள் போடும் விதமே ஒரு தனியான கலையாகும்; இதை மிகவும் ரசித்துச் செய்வர்.
பின்புறம் இருக்கும் நரம்பை நீக்கிவிடவேண்டும்;அதில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.வெற்றிலை, பாக்குடன் சேரும்போது சுண்ணாம்பு உண்ணத்தக்கதாக மாறிவிடுகிறது; உடலுக்குச் சுண்ணாம்பு சத்தும் கிடைத்து விடுகிறது . அந்தக்காலத்து பாட்டிகளுக்கு நாளுக்கு இரண்டு முறை பிரஷ் செய்யும் இந்தக்காலத்து நாகரிக மனிதரை விடப்பற்கள் வலுவாக இருந்தன.



இன்னும் வெற்றிலையின் மகிமை சொல்லச் சொல்ல விரியும்;


கருவேப்பிலை

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி எல்லா வகை உணவிலும் தவறாமல் இடம் பிடிப்பது கருவேப்பிலை ஆகும். இந்த கருவேப்பிலை இந்தியாவில் அதிகமாக விளையக்கூடியது. இது காடுகளிலும், மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராககூடியா ஒரு பெருஞ் செடியின் வகையைச் சார்ந்தது. எனினும் நாம் இதனைப் பொதுவாக சிறுமரம் என்றே கூறலாம்.






இது கருவேப்பிலை என்று அழைக்கப்பட்டாலும் இதன் உண்மையான பெயர் கறிவேப்பிலை தான்.



இது ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன. இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம். மணிச்சத்து, இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன சத்தும் இந்த தழையில் உண்டு.


உயிர்சத்து மிகுதியாக உள்ள இந்த கீரையில் வைட்டமின் A 12.600 அனைத்துவகை அலகு கொண்டதாகும். உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்த த்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. இந்த கீரை மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கவல்லது.


கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறி வேப்பிலை வேப்பம் இலையைப் போக் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது சுறுசுறுப்பாக இருக்கும். இதனாலேயே இதனைக் கறுவேம்பு என்பர். இதை ஒட்டியே வடமொழியில் ‘காலசாகம்’ என்ற பெயர் கருவேப்பிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கால்க்ஸ் என்றால் செம்பு என்னும் பொருள்படக்கூடியது. இந்த மரம் செம்புநிறச் சாயல் உள்ள காரணத்தினால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.


கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு, அவை நாட்டுக்கறிவேப்பிலை, ட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும்.


நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.


பூக்கள் கொத்தாக அமைந்திருக்கம், கறிவேப்பிலைப் பழம் உருண்டை வடிவாக கொண்டது. இந்த பழம் சதைப்பற்றாக இருக்கும். காய் பழுத்து சிவப்பாகி பின்னர் கருப்பு நிறமாக மாறிவிடும். கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு,பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.


கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு உங்களை அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும். புண்கள் விரைவில் ஆற கருவேப்பிலை உதவுகிறது.
வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கருவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப்
போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தி யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்ச
லைத்தடுக்கும்

ஆங்கிலம் - aaku means leaf
தெலுகு Karivepaku
மலையாளம்- Karu/Kari ilai
கன்னட - Kari BEvu .
Kari Patta (Hindi),
Kadhi Patta (Marathi),
Mithho Limdo (Gujarati)
தாவர பெயர் Murraya koenigii leaves


Department of Biochemistry and Molecular Biology, University of Madras, Chennai, Tamil Nadu, India.has
informed following fact The present study was aimed to evaluate the anti-hyperglycemic efficacy of Murraya koenigii in STZ-induced diabetic rats. Oral administration of ethanolic extract of M. koenigii at a dose of 200 mg/kg/ b.w./day for a period of 30 days significantly decreased the levels of blood glucose, glycosylated hemoglobin, urea, uric acid and creatinine in diabetic treated group of animals. Determination of plasma insulin level revealed the insulin stimulatory effect of the extract. The results suggest that M. koenigii possesses statistically significant hypoglycemic potential in STZ-induced diabetic rats. The M. koenigii extract appeared to be more effective than glibenclamide, a known antidiabetic drug.


சக்கரை வியாதிக்கு நல்ல மருந்து இதன் இல்லை சாறு என கண்டறியப்பட்டுள்ளது
இதன் ஈர்க்கு ,இலை பட்டை வேர் முதலியை யாவும் மருத்துவ குணம் உடையவை .
,ஈர்க்கு ,இலை பட்டை வேர் இவைகளை கஷாயம் வைத்து சாப்பிட்டால் பித்தம் ,வாந்தி முதலியவை நீங்கும் இதன் .ஈர்க்கு சுக்கு , சீரகம் ,ஓமம் இவைகளை தலா 24 கிராம் eduththu இரண்டு லிட்டர் சுத்தமான தண்ணீரில் கொட்டி கால் படியாகும் வரை சண்ட காய்ச்சி
பின் சிறிது சக்கரை சேர்த்து கலை மாலை இரண்டு வேலை அருந்த வேண்டும் .


குடல் வாயுவுக்கு கை கண்ட மருந்து. இலையை அரைத்து கலை மாலை கொட்ட பக்கு அளவு முன்று நாளுக்கு சாப்பிட்டால் சீத பேதி குணமாகும் .உள்சூடு குறையும் .
கருவேப்பில்லையை இனி சமையலில் கண்டால் ஒதுக்கி வைக்காதீர்கள் .முதலில் அதை சாப்பிடுங்கள். இது வரை நம்மை சுற்றி நமது அருகே உள்ளே மூலிகைகளை பற்றி அதிகமாக எழுதி வருகிறேன்.


நத்தை சூரி , செங் குமரி , கரு ஊமத்தை என அரிதில் கிடைக்கும் ,மிகத் தேடி
கண்டுபிடிக்கவேண்டிய மூலிகைகள் இறுதியில் வரும் .இப்போது நம்மை சுற்றி உள்ள எளிய ஆனால் சக்தியில் ,மருத்துவ குணத்தில் மிக உயர்ந்த மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்வோம் .இவைகளை பயன் படுத்த ஆரமித்தாலே ஆரோக்கிய உடலுடன் ,உயிரை வளர்க்கும் முறையை அறியலாம். வீட்டுக்கு ஒரு கறிவேப்பில்லை செடி மிக அவசியம் .

வெந்தயக்கீரை

நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை ,வெந்தயத்தை சமையலுக்கு தினமும் பயன்படுத்துகிறோம். இட்லி தோசைக்கு மாவாட்டுகையில் சிறிதளவு வெந்தயத்தை போடுவது வழக்கம். ஆனால் வெந்தயக்கீரையை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. சாதராண மண் தரையில் வெந்தயத்தை தூவினாலே வெகு சீக்கிரத்தில் வளர்ந்துவிடுகிறது. இக்கீரையை பிடுங்கி சயைலுக்கு பயன்படுத்தலாம்.

அளவில் சிறியது என்றாலும் அபரிமிதமான சத்துக்களைக் கொண்டது. இக்கீரை மருத்துவப் பயன்கள் கொண்டது. இக்கீரை பல நோய்களைத் தீர்க்கும். இக்கீரையின் கசப்புத்தன்மையால் அதிகம்பேர் இதை பயன்படுத்துவதில்லை.

இக்கீரையில் வைட்டமின் A.B உயிர்சத்துக்கள் காணப்படுகிறது. நமது உடலில் எலும்புப்பகுதியினை உறுதியாக வைத்திருக்க இக்கீரை பயன்படுகிறது.

இக்கீரையின் பருத்துவப் பயன்கள்

மாதவிடாய் கோளாறா?

வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டுவந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கிவிடும்.

இடுப்பு வலியா ?
இன்று அதிக உழைப்பில்லாதால் ஏகப்பட்ட நோய்களை பெருகின்றன. , அவற்றில் இடுப்புவலியும் ஒன்று, இந்த வலிக்கு ஆளானவர்கள் படாதபாடுபடுகின்றனர் இவர்களுக்கு நிவராணம் வெந்தயக்கீரையை ஆகும். இக்கீரையோடு தேங்காய்ப்பால் நாடடுக்கோழிமுட்டை நிரிழிவுநோய் உள்ளவர்களுக்கு மஞசள் கருவை நீக்கவும் கசகசா சீரகம் மிளகுத்தூள் பூண்டு இவைகளோடு நெய்யையும் சோத்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி பறந்துபோகும்.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிககு

படிப்பில் கவனம் செலுத்தாத, எவ்வளவு படித்தாலும் மறந்துபோகிற, படிப்பென்றால் கசக்கிறது என்கிற குழந்தைகளுக்கு, படிப்பென்றால் மகிழ்ச்சி தரக்கூடிதாக மாற்றுகின்ற தன்மை இக்கீரைக்கு உண்டு. இக்கீரையை பாசிப்பருப்பு மற்றும் வேர்க்கடலை நெய்யுடன் கலந்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டுவந்தால் ஒரிரு மாதங்களில் நன்கு படிப்பார்கள்
  • இருமலை குணப்படுத்தும்.

  • கபம், சளியை அகற்றுகிறது.

  • மந்தமாய் இருப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது.

  • உடலுக்கு வனப்பைக் கொடுக்கிறது.

  • அஜீரணத்தைப் போக்குகிறது.

  • பசியைத்தூண்டிவிடுகிறது.

  • கண் நோய்களைப் போக்குகிறது.

  • கண் பார்வையைத் தெளிவாக்குகிறது.

  • சொறி சிரங்கை நிவர்த்தி செய்கிறது.

  • வயிற்றுக் கோளாறுகளை, வயிற்று உப்புசம், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, போன்ற நோய்களைப் குணப்படுத்துகிறது.

  • வாத சம்பந்தான நோய்களை குணப்படுத்தும்.

  • நிரிழிவு நோயை கட்டுப்படுத்துப்படுகிறது.

  • நரம்புத்தளாச்சியைப் போக்குகிறது.

  • பற்களை உறுதியாக்குகிறது.

  • இரத்ததை சுத்தமாக்குகிறது.

  • வயிற்றில் அடையும் கசடுகளைப் போக்கி வயிற்றை சத்தமாக்கி மலச்சிக்கலலைப் போக்குகிறது.

  • மூலவாயுவை குணமாக்குகிறது.

  • தொத்து நோய்களிலிருந்து காக்கிறது.

  • எலும்புகளைக் உறுதிப்படுத்துகிறது.

  • மூட்டுவலிகளை குணமாக்கிறது.

  • வீக்கம் கட்டி புண்களை அகற்றுகிறது.

  • மார்பு வலியிலிருந்து காக்கிறது.

  • தொண்டைப் புண்ணை ஆற்றுகிறது.

  • தலைசுற்றலை நிறுத்துகிறது.

  • பித்தத்தால் எற்படும் கிறுகிறுப்பை போக்குகிறது.

  • உடல்சூட்டை தணிக்கிறது


  •  

    அரைக்கீரைக்கீரை

    இது தென்னிந்தியாவில் தோட்டங்களில் பயிரிடப்படும் அருமையான கீரையாகும். இலையின் மேல்பாகம் பச்சை நிறத்திலும் கீழ்பாகம் சிவப்பும் நீலமும் கலந்ததுபோல் இருக்கும். இக்கீரை வெப்பத்தை சமன்படுத்தும் குணம் கொண்டது. அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பார்கள். இந்த மாவு பல வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது. அரைக்கீரையைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலம் கண்களுக்கு குளிர்ச்சி தரும் இயல்பு கொண்டது.

    வாயு நீங்க

    இக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், இஞசி, பச்சை மிளகாய், இவைகளைச் சோத்துச் கடைந்து சாதத்துடன் சோத்து தினசரி உண்போர்க்கு வாயுத் தொந்தரவுகள் நீங்கிவிடும்.

    உடல் வலி போக

    சிலருக்கு கெபஞ்சம் வேலை செய்தாலும் உடம்பெல்லாம் வலி எடுக்கும், இவர்கள் அரைக்கீரை மிளகு, பூண்டு, பெருங்காயம், சுக்கு, இவைகளை அரைக்கீரையோட சோத்துச் பொரியல் செய்து தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டுவந்தால் உடல்வலி போகும்.

    சளி இருமல் குணமாக

    கீரையுடன் அதிக அளவில் வெள்ளைப் பூண்டை சோத்துக் கடைந்து தினசரி சாப்பிட்டு வந்தால் சளி இருமல் நீங்கும்.
    வாய் ருசிக்கு

    சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு ருசியே தெரியாது. இப்படிப்பட்டவர்களுக்கு அரைக்கீரையோடு புளியையும் சோத்துச் கடைந்து ஒரு வாரத்திற்கு மதிய வேளையில் சாப்பிட்டுவந்தால் நாளடைவில் ருசி தெரியவரும்.

    பசி எடுக்க

    சிலருக்கு பசியே எடுக்காது. இப்படிப்பட்டவர்கள் அரைக்கீரையோடு சீரகத்தைச் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டுவந்தால் நாளடைவில் பசியெடுக்கும். கடைந்த கீரையை சாப்பாட்டிற்கு முண் சாப்பிடுவது நல்லது.

    பிரசவித்த பெணகள் பலம் பெற

    பிரசவித்த பெண்கள் பலமிழந்து காணப்படுவார்கள். அவர்கள் நெய் விட்டு கீரையை வதக்கியோ கடைந்தோ சாப்பிட்டுவந்தால் தேக்கத்தில் பலம் ஏறும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு பாலும் சுரக்கும.
    வளரும் குழந்தைகளுக்கு

    வளரும் குழந்தைகள் சுறுசுறுப்புடன் புத்திசாலித்தனத்துடன் பயிலவும். உடல் பலத்துடன் வளரவும் அரைக்கீரை அருமருந்தாகப் பயன்படுகிறது. இக்கீரையை சிறிய வெங்காயத்துடன் வதக்கி தினசரி சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

    இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள்:

    • மலச்சிக்கல் தீரும்.
    • குளிர்காய்ச்சல் போகும்
    • ஜலதோஷம் மற்றும் நரம்புதளாச்சி நீங்கும்.
    • ஆண்மைக்குறைவு நீங்கும்.
    • உடல்வலி தீரும்.
    • வாத சம்பந்தப்பட்ட நோய்கள் போகும்.
    • பிடரிவலி மற்றும் நரம்புவலி ஆகியன நீங்கும்.
    • பிரசிவித்த பெண்கள் இழந்த பலத்தை மீட்டுத்தரும்.
    • காய்ச்சல் நீங்கும்.
    • காய்ச்சல், குளிர்க்காய்ச்சல், ஜன்னி, காசம், வாத, பித்த நோய் மற்றும் பல நோய்களை இந்த அரைக்கீரை தீர்க்கும்

    அரைக்கீரை விதையை சிறிதளவு எடுத்துக்கொண்டு இதை நல்லெணெய் விட்டுக்காய்ச்சி சூடு பொறுக்கும் பதத்தில் எடுத்து வடிக்கட்டி தலைக்குத் தடவிவந்தால் முடிகருமையாகவும் செழிப்பாகவும் வளரும் நரையும் போகும்.


    கரிசலாங்கண்ணிக்கீரை

    அற்புதமான மருத்தவ குணம் கொண்ட மிகவும் சத்துள்ள கீரை இது

    கரிசலாங்கண்ணி இதில் இரு வகைகள் உண்டு ஒன்று மஞசள் கரிசலாங்கண்ணி
    கரிசாலங்கண்ணியைத்தான் சமைத்துச் சாப்பிடலாம் இது தான் சமையலுக்கு எற்றது.

    மஞசள்காமாலைபோக

    கரிசலாங்கண்ணிக்கீரையை அரைத்து சாரெடுத்து மோரில் அல்லது பாலில் கலந்த முன்று வேளை கொடுத்தால் போதும் குழந்தைகளின் மஙசள் காமாலை போகும் .

    பெரியவர்கள் ஒரு வாரத்திற்க்கு முன்று வேளையில் முன்று வாரத்திற்க்கு சாப்பிட்டு வந்தால் போதும் உணவு பத்தியம் அவசியம் . உப்பு மிளகாய் கராம் இவைகளை முற்றிலும் தவிர்த்து விடவேண்டும் .

    வாய்தூநாற்றம் போக


    கரிசாலாங்கண்ணி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று அதைக்கொண்டே பல் துலக்கி வந்தால் பல்நோய்கள் குணமாகும் வாய்துர் நாற்றம் போகும் .


    இருமல் விலக


    இலைச்சாறு 150 மி.லி நல்லெண்ணய்150 மி.லி இந்த இரண்டையும் கலந்து கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து கலந்து கடாயில் ஊற்றி வடித்து 2 கிராம் அளவில் காலை மாலை இரு வேளை பருகிவர நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் இருமல் நீங்கும்

    கண்பர்வை சரியாக

    கரிசலாங்கண்ணியை இடித்து 250 மி.லி சாறெடுத்து அதனோடு 250 மி.லி நல்லெணய் சாறோடு கலந்து கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து காயவைத்து எண்ணெய் பதமாக மாறியதும் து இறக்கி வைக்கவேண்டும்.

    சற்றுநேரம் கழித்து ஆறியதும் வடிகட்டி வைத்தக்கொள்ள வெண்டும் இதனை தினமும் தேவையான அளவ எடுத்து தலையில் தடவிவரவேண்டும் அப்படி தடவிவந்தால் உடற்சுடு தணியும் . கண்பார்வை தெளிவாகும்


    குடல் சுத்தமாக கரிசலாங்கண்ணிக்கீரையை வராத்திற்க்கு இருமுறை சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றும். குடலிலுள்ள கிருமிகள் சாகும்.

    மறதி சரியாக

    மூன்று நாட்கள் வீதம் இரண்டு மாதங்கள் நெய் பாசிப்பருப்படன் கலந்து பொரியல் செய்து இக்கீரை சாப்பிட்டுவந்தால் புத்தி தெளிவடையும் மறதி போகும்

    காதுவலிபோக


    கரிசாலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் சில துளிகளை காதில்விடகாதுவலி தீரும்.

    இக்கீரையை அவ்வவப்போது சாப்பிட்டுவந்தால் அடிக்கடி ஏற்படும் மயக்கநோய் நீங்கும்
    தினமும் காலையில் இக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தாலோ சாறுபிழிந்து பருகி வந்தாலோ கெட்டுப்போன ஈரல் நல்ல நிலைமைக்கு மாறும் .

    சிறுநீரில் ரத்தமா

    பலருக்கு சீறுநிரில் ரத்தம் வரும் சிலருக்கு மயக்கம் வரும் இப்படிப்பட்டவர்கள் கீரையிலிருந்த சாறெடுத்து தினம் இருவேளைகள் 100 மிஇலி முதல் 150 மி.லி வரை பருகிவர இந்தநோய் குணமாகும்

    பற்களில் மஞசள்நிறமா

    கரிசாலஙஙகண்ணியின் வேரைச் கொண்டு பல் துலக்கவும். பல துலக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவந்தால் நாளடையில்பற்களில் படிந்திருக்கும் மஞசள்கறை மறைந்தே பேய்விடும் .

    கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிடுவவதால் தீரும் நோய்கள்

    • காய்ச்சல்
    • யானைக்காய்ச்சல்
    • விஷக்கடி
    • ஐலதோஷம்
    • கண்பார்வை
    • மஞசள்காமாலை
    • இரத்தசோகை
    • தலைப்பொடுகு
    • பசியின்மை

    Sunday, April 1, 2012

    மூட்டு வலியை விரட்டும் கீரைகள்

    *பொதுவாக வயதானவர்களுக்கு வந்துவிடும் வலி மூட்டு வலி.அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.
    இவைகளை கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

    முடக்கத்தான் சாறு

    *இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரைத்தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி.

    *இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவேண்டும்.அதனுடன் இரண்டு குவளை நீர் ஊற்றி வேகவைக்க வேண்டும் கீரை வெந்ததும் இறக்கி அதன் சாற்றை நன்கு வடிகட்டினால் சாறு கிடைக்கும்.இதனை முடித்தால் மூட்டில் தங்கியிருந்த அனைத்து வலிகளும் பறந்தோடும்.

    *முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

    மலம் பேதி

    *இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். அப்புறமென்ன ஓடி ஆடலாம். சின்னக் குழந்தை போல துள்ளிக் குதிக்கலாம். உடனே முடக்கத்தான் கீரை வாங்க போங்க மூட்டுவலிக்கு குட் பை சொல்லுங்க

    Sunday, January 1, 2012

    மணல் தக்காளி

    மணல் தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்ட ஒரு தாவரமாகும்.  இது மிளகு தக்காளி எனவும்  கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. 

    இதன் பயன்கள்:  
    1) தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும்,  தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும்.

    2) சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சுப்பை எரிச்சலை அகற்ற வல்லது. சீதபேதிக்கு மாற்றாகும். செடியின் சாறு கல்லீரல், கணையத்தின் வீக்கம், மூலநோய், பால்வினைநோய், நீர்க் கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும். 

    3) மலர்கள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகும். கனிகள் இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன. இலைகள் வீக்கமடைந்த விந்துப்பை வலியை அகற்றவல்லது. இலையின் பசை மூட்டு வலிக்கு பற்றாக பயன்படுகிறது. விழிப் படலத்தினை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது. 

    4) உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம். 

    5) நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். மணத்தக்காளிப் பழத்தை பேதி மருந்தாக சாப்பிடலாம். 

    6) கீரையின் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. 

    7) இக்கீரையை சாப்பிட்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

    8) மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது. ஆஸ்துமா நோயாளிகள் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. 

    9) இப்பழம் உடனே கருதரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் பெரிதும் உதவுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரை உண்டாக்குகிறது.போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”


              மனத்தக்காளிக் கீரையின் காய்கள் மிளகை ஒத்தவையாகக் கானப்படுவதால் அதனை மிளகுத்தக்காளி என்றும் அழைப்பர். இத்தக்காளிச் செடி மனமுள்தால் மனத்தக்காளி என்றும் திருமனத்துக்கு தக்க உடல்லை யாளியை யொத்ததாக்கும் தன்மை தரக்கூடிய வல்லமை யுள்ளதால் இக் கீரையை மனக்க தக்க யாளி மனத்தக்காளி யாக்கிவிட்டது.
              இக்கீரையின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதாத்தகுண சிந்தாகணியில் 
    “மந்தாக்கின சோவை வாந்தி யாழல.; வாயு வெப்பம்
      விந்து நோய் பாண்டொதிர் விக்கல் - முந்து
      வளருமத்தோச நோய் மாறும் கைப்பான
       மினகுத் தக்காளியிலை மெய்” என்று ஒருபாடலிலும் அடுத்து
     காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
     வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் - தீக்குள்
     உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும்
     மனத்தக் காளிக்குள்ள வாறு”   
     வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு இது அருமந்தாகும் என்பதை தேரையர் எவ்வளவு அழகாக வெண்பாவில் குறிப்பிட்டுள்ளார்.            
     பொதுவாக வெப்பகாலத்திலே ஏற்படக்கூடிய வாய்ப்புண்ணுக்கு மனத்தக்காளி இலையை மெண்று விழுங்கி விட்டால் குணமாகிவிடும். 
         இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூன்னர் வாழ்த சித்தர்கள் இன்றைய உலகுக்கு பொருத்தமானதை எப்படி உணர்ந்திருந்தனர் என்பதை அறிவியல் ஆய்கின்றது என்னும் போது நமக்கெல்லாம் ஒருபுறம் பெருமையும் இன்னுமோர் புறம் வியர்ப்பாகவும் இருக்கின்றது. தமிழ் மருத்துவ உலகம்கில் சித்தர்கள் தொண்மையும் விஞ்ஞானத்தின் மெய்ஞானியாக இருந்திருக்கின்றனர். என்பது இங்கு கண்கூடு.
       1.இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) மஸ்பரலஸ் என்ற ஆய்வியலாளர் மனதக்காளியின் இலைச்சாற்றை ஆய்வு செய்து குடல்புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு என்பதை வெள்ளை எலிகளுக்கு கொடுத்து அவைகளுக்கு ஏற்பட்டிருந்த குடல் புண் ஆறக்கண்டு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அத்துடன் வாயுடன் கூடிய அல்சறை குணமாக்கும் ஆற்றலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு உண்டு என்று நிருபித்துள்ளார்.
      2. யதீஸ் என்ற இன்னுமோர் ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்)செய்த ஆய்விலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு வயிற்றில் எற்படும் புண்களை முற்றாக மாற்றும் வல்லமை இருப்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளார்.
       3. இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) ராஐ; என்ற இன்னுமோர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்றில் உள்ள “கப்பட்டோ புரட்டக்டியுல்” என்ற வேதியல் மூலக்கூறு கல்லீரலைப் பாதுகாக்கின்றது. என்ற கருத்தை அவரின் ஆய்வின் மூலம் முன்வைத்து நீருப்பித்துள்ளார்.
       4.இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) பகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான்னலி அஸ்ரப் அலி என்னும் ஓர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்று மஞ்சல் காச்சலில் ஒருவகையான “கப்பட்டைடிஸ் -சீ” என்ற காச்சலை உருவாக்கும் வைரஸ்சை அழிக்கும் வல்லமை உள்ளதுடன் கல்லிரலின் பலவீனத்தால் உண்டாக்கும் நோய்களை குணப்படுத்த வல்லதுடன் கல்லீரலை பலப்படுத்தும் வல்லமையும் இருக்கின்றது என மீண்டும் அக் கருத்துக்கு வலுவுட்டியுள்ளார்;.
       5.செல்வப்பா முத்து என்ற இன்னுமொரு ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) செய்த ஆய்வில் மனதக்காளிக் கீரை மிகவும் சக்தி வாய்தது என்றும் அது ஆண்களின் ஆண்மையை வீரியமாக்குவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் இதன் அளவையும் விந்து சுரப்பையும் அதிகரிக்கின்றது என்று தனது முடிவை வெளியிட்டுள்ளார். இதனை சித்தர் “விந்து நோய் பாண்டொதிர்”என முன்னரே அறிந்து அறிவியல் உலகுக்கு தெரிவித்துன்னர் என்பதை அறியும்போது தமிழ் மருத்துவத்தின் அறிவியல் தொன்மையை அறிய முடிகின்றது. 
    மனத்தக்காளி காயும் பழமும்
      5. திருமதி. வடிவேல் அருள்மொழி என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தில் (2010 இல்)தாம் செய்த ஆய்வில் மனத்தக்காளிக் சற்றுக்கு இரண்டு பண்புகள் உண்டு என்றும் இவை
            1;.நோய் எதிப்பு சக்தி வீழ்சிக்கு காரணமாக இருக்கின்ற பொருட்கள்         எல்லாவற்றையும் அழிக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். உடலை முதுமையிலிருந்து இளமையாக்கி  காக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். 
           2.உடலில் கொளுப்பு சத்து அதிகரித்து கொலஸ்றோல் அதிகர்த்து அதன் விளைவால் வரக்கூடிய சைக்கிளிசைட், லோடெண்சிட்டி கொலஸ்றோல், லிப்பீட் கொலஸ்றோல் போன்றவை உடலில் கூடுவதை தடுக்கும் ஆற்றல் மனத்தக்காளிக்குண்டு. என்று தனது ஆய்வில் வெளியிட்டுள்ளார்.
    6. சீனதேசத்தைக் சேர்ந்த கெஸ்சி முவான் என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) வெளியிட்ட கட்டுரையில் மனத்தக்காளிக் கீரைக்கு இன்னும் இரண்டு பண்புகள் இருப்பதாக குறிப்பிடுகின்றார். 
                1.அட்டோ பசிஸ்
                2.அப்போட்டசிஸ் என்ற வேதியல் மூலக்கூறுகள் இருப்பதாகவும் அது உடலில் அழிந்த கலங்களை மீண்டும் புதிப்பிக்கின்றதுடன் கலங்கள் தேவைக் கேற்ப உற்பத்தி செய்வதுடன் உற்பத்தியின் போது ஏற்படும் தவறான நகல்களை அழித்து சரியான நகல்களை நிலை நிறுத்தும் ஆற்றல் உள்ளது என்பதை நிருபித்துள்ளார். இதை சித்தர் பாடலில் “முந்து வளருமத்தோச நோய் மாறும் கைப்பான  மினகுத் தக்காளியிலை மெய்” என அப்போதே அழகாகக் கூறியிக்கின்றார்.
    7.லைவோசன் என்பவரும் ரீக் என்ற இருவரும் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) இல் ஆய்வு செய்து மனத்தக்காளிக் கீரைகயில் “கிக்கோரோட்டிக்” என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது என்றும் இது புற்றுநோயை தடுக்க வல்லது என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் கிக்கோ என்பது மாச்சத்து புரோட்டீன் என்பது புரதம் இவை இரண்டும் சேர்ந்த ஓர் புரதப்பொருள் இது புற்றுநோயை தடுக்க வல்லது. இதன் முலம் மீண்டும் ஆதாரப்படுத்தியுள்ளது.
    மனத்தக்காளி 
                 சீன நாட்டில் இருதய நோய்க்கு பல முகிலிகைகளுடன் சேர்த்துப் மனத்தக்காளியைப் பயன்படுத்து கின்றனர்.அது போன்று கிரேக்க மருத்துவத்தில் வீக்கத்துக்கு பற்றுப்போட பயன்படுத்துகின்றனர். வீக்கம் வருவதையும் காச்சல் வருவதையும் இக்கீரை தர்க்கும் ஆற்றல் உண்டு. பேஸ்சிய நாட்டிலே நீக்கோவைக்கு அருமந்தாக பயன் படுத்து கின்றனர். நீக்கோவை என்பது கால், முகம், கண்ணீத்தாரைப்பை( கண்களின் கீழ்ப்பகுதி),வயிறு போன்ற இடங்களில் நீர் சுரந்திருத்தல் உடலில் தேவையற்ற வகையில் நீர் தோல்லின் அடிப்பகுதியில் நீhதேங்கியிருத்தல்.  
    பெண்களின் கற்பப்பையில் ஏற்படும் புற்று நோக்கு அருமருந்தாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
      இந்தக்கீரை உடலிலே நோய் எதிர்ப்புக் சக்தியை ஏற்படுத்தி புற்றுநோயை வராது தடுத்து புற்றுநோய் திசுக்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றது. முத்தோச நோய் என்னும் புற்றுநோய் இது ஒன்றில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவி உடலை அழித்து விடும் ஆனால் அஸ்துமா என்னும் சுவாசகாசம். இருதையநோய், நுரையிரல் நோய் போன்றவை அந்த உறுப்பை மட்டும் பாதிப்பாவை இதனாலே சித்தர்கள் இதனை முத்தோச நோய் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
    “காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
     வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண்” காய் குளிர்சியால் வரும் நோயை குணமாக்கும். உடலில் வெப்பத்தை ஏற்படுத்தி குணமாக்கும் காய்க்குக் கபம் தீரும் என்றும் கீரை வெப்பத்தினால் வரும் நோயை குணமாக்கும். உடலில் குளிர்சிசியை ஏற்படுத்தி குணமாக்கும் வினைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் என்று வெண்பாவில் கூறியுள்ளார். நோய்யுற்று உடல் தளர்தவர்களின் தளர்வு நீங்கி வலிமை பெற மனத்தக்காளி வற்றல் புளிக் குழம்பு சிறந்த பலனைத்தரும்,  “தீக்குள் உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும் மனத்தக் காளிக்குள்ள வாறு” என கூறிப்பிடுகின்றார். தளர்வு நீங்கி வலிமை பெறுகின்ற போது உடலில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறும் அப்போது மீள்திறனை ஏற்படுத்தும் ஆற்றல்லுடன் நோய் எதிர்ப்புச்சக்தியை ஏற்படுத்தி உடலை வலுவுட்டும் சக்தி மனத்தக்காளிக் குண்டு. 
    பயன்படுத்தும் முறைகள்:    
     1;.மனத்தக்காளி சூப்
    தயாரிக்கும் முறை: தக்காளி இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில் தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து  பின் இறக்கி சூப்பாக பருக முடியும். பருகினால் வாய்வேக்காடு வராது வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும். 
    2.பச்சையாக மென்று சாப்பிடலாம்.
    3. கீரையை பருப்பு போட்டு கடைந்து காப்பிடலாம். பாத்திரத்தில் கீரையைப் போட்டு சின்னவெங்காயத்தை நறுகிப்போட்டு அதனுடன் அரைத்பங்கு தக்களிப் பழத்தையும் நறுகிப் போட்டு சிறிதளவு மிளகு சீரகம் பச்சைமிளகாய் இவை போட்டு திடமாக தன்னீவிட்டு காச்ச வேண்டும். கீரையின் பசுமை நிறம் மாறாது இருக்க சக்கரையை சிறிதளவு தூவி விடவேண்டும் பசுமை நிறம் மாறாது இருக்கும் .இதை எடுத்து வைத்து விட்டு இன்னுமோர் பாத்திரத்தில் எண்ணை அல்லது நெய்யில்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் பருப்பு அல்லது துவரம் பருப்பு அவித்த நீரை விட்டு அதில் அவித்துவைத்த இலையை போட்டு அவித்து வதக்கி கடைந்து தேவையான உப்புச்சேர்த்து எடுத்து சாதத்துடன் உண்ணமுடியும்.  பொதுவாக கீரைகளுக்கு புளிசேர்ப்பதை தவிப்பதால் சத்தி இழப்பின்றி முழுமையான பலனைப் பொறமுடியும். நெய் சேர்ப்பது கீரைக்கறிக்கு நல்ல சுவையைத்தருவதுடன் ஊட்டமாகவும் இருக்கும்.    
    4. காயை அல்லது வற்றலை புளிக்குழம்பாக செய்து வெந்தையக் சேர்த்து தாயாரித்து உணவுடன் தேர்த்து உண்ண முடியும். கபம் உள்ளவர்கள் வெந்தயத்தை தவித்துக் கொள்ளலாம். வேந்தையம் குளிர்த் தன்மையானது.


    கோடை காலத்துக்கு மணத்தக்காளி சட்னி


    “பச்சை நிறமே…பச்சை நிறமே.. இச்சை கொடுக்கும் பச்சை நிறமே” மனக்கண்ணில் மாதவனும் ஷாலினியும் பறப்பது… தெரிகிறதே.

    இலைகள்

    நாளாந்தம் உண்ணும் அரிசி, கோதுமை மாப்பொருள் உணவுடன் எமது உடலுக்குத் தேவையான விட்டமின்களையும், கனிப்பொருள்களையும் பெறுவதற்கு இலை வகைகள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து உண்ண வேணடும்.

    இரும்பு கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், அயடின் போன்ற கனியங்கள் முக்கியமானவை. இலைவகைகளில் உடல் வளர்ச்சிக்கும் தேவையான விற்றமின் ஏ, பீ சுண்ணாம்பு இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன என்பது அறிந்ததுதான்.

    அரிசி உணவோடு கீரை

    அரிசி உணவில் விற்றமின் ஏ குறைவாக இருப்பதால் நாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் 50கிராம் ஆவது கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இலகுவாக மலிவாகக் கிடைக்கும் கீரைகளை வாங்கிச் சமைத்துக் கொள்ளலாம்.

    மணத்தக்காளி கீரை


    கீரை வகையில் மணத்தக்காளி கீரையும் சிறந்தது. இதன் பொட்டானிக்கல் பெயர் Solnum nigrum ஆகும்.

    மணத்தக்காளி என்பது இங்கு மருவி மணித்தக்காளி ஆயிற்று.
    மணிமணி போல் பழங்கள் இருப்பதால் அவ்வாறு வந்ததோ?

    இதன் இலை, காய், பழம் என மூன்றையுமே சமையலில் பயன்படுத்தலாம்.
    சிறிய வெள்ளைப் பூக்களுடன் மலரும்.
    இதன் காய் மிகவும் சிறிதாக கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும். காய் முற்றிவர கத்தரிப்பூ நிறமாக மாற்றமடையும்.


    இன்னொரு இன வகையின் பழம் இளம் சிகப்பு நிறமாக இருக்கும். இப் பழங்கள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். நேரடியாகவே உண்ணலாம்.

    சிறிய வயதில் விரும்பி உண்டதில்லையா?
    சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான பழம் இது.



    மணத்தக்காளி இலையில் சட்னி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம், சொதி செய்யலாம். காய், பழத்தில் புளிக் குழம்பு செய்து கொள்ளலாம்.

    வெப்ப காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்க பெரும்பாலும் சமையல் செய்து உண்பார்கள்.

    கோடைச் சூட்டிற்கு நாவில் தோன்றும் கொப்பளங்களைப் போக்க இதன் இலையை சிறிது தண்ணீர் விட்டு அவித்துக் குடிப்பது மிகுந்த பலனைத் தரும். சம்பல் செய்து சாப்பிடுவதும் சிறந்தது.

    வீட்டு வைத்தியத்தில்

    கிராமங்களில் இதன் நன்மையை அறிந்து அதிகம் பயன்படுத்துவர்.

    குடல் புண்ணுக்கும் சுகம் தரும். மூல நோய்க்கும் சிறந்தது என்பர்.

    கண் பார்வைக்கும் பல் உறுதிக்கும் வேண்டிய விற்றமின் ஏ, பீ, இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

    மணத்தக்காளி சட்னிஇன்று சட்னி செய்து கொள்வோமா?
    இரண்டு முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்-
    முறை - 1

    மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
    செத்தல் மிளகாய் - 1
    பூண்டு – 2-4
    சின்ன வெங்காயம் - 6
    தேங்காய்த் துருவல் - 1 கப்
    பழப்புளி – தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - ½ ரீ ஸ்பூன்

    தேவையான பொருட்கள்-
    முறை - 2
    மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
    மிளகு - ¼ ரீ ஸ்பூன்
    சின்னச் சீரகம் - ¼ ரீ ஸ்பூன்
    பச்சை மிளகாய் -1(விரும்பினால்)
    சின்ன வெங்காயம் - 6
    தேங்காய்த் துருவல் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு.
    தேசிச் சாறு - 1 ரீ ஸ்ப+ன்

    செய்முறை - 1
    கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.

    சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.

    ஓயிலில் செத்தல் மிளகாய், பூண்டு வதக்கி எடுத்து வையுங்கள்.

    மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி, கிர்…கிர் எனத் தட்டி எடுத்திட வேண்டியதுதான்.

    செய்முறை – 2
    கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.

    சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.

    தேசிச்சாறு தவிர்த்து மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி,அரைத்து எடுங்கள்.

    பரிமாறும் கோப்பையில் எடுத்து வைத்து விடுங்கள்.

    தேசிச்சாறு விட்டுக் கலந்துவி

    Share

    Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites