இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Friday, November 30, 2012

கர்ச்சீஃப் முதல் கல் நகை வரைரோடு பெரியவலசுப் பகுதியைச் சேர்ந்த சர்மிளாவின் கைவசம் 65 கைவினைத் தொழில்கள் இருக்கின்றன. அதன் மூலம் சம்பாதிப்பதோடு பெண்களுக்குக் கற்றுத்தரவும் செய்கிறார்.
''கல்யாணம் ஆன புதுசில் எனக்குச் சம்பாதிக்கிற எண்ணம் எதுவும் இல்லை. ஆனா, ரெண்டு குழந்தைகள் பிறந்ததும் அவங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டிய கட்டாயம். அதனால், தையல் வகுப்பில் சேர்ந்தேன். முதல்ல கர்ச்சீஃப் தைக்கச் சொல்லித் தந்தாங்க. நான் கர்ச்சீஃப் தைச்சு அதுக்கு நடுவில் பூ டிசைனும் போட்டுக் கொடுத்தேன். கொஞ்ச நாள்ல வீட்டிலேயே தையல் மெஷின் வாங்கிவெச்சு பிளவுஸ் தைக்க ஆரம்பிச்சுட்டேன். ரொம்ப நேர்த்தியா நான் தைக்கிறதைப் பார்த்துட்டு, கணிசமான கஸ்டமர்கள் உருவானாங்க. எடுத்த எடுப்பிலேயே மாசம் 2,000 ரூபாய் வருமானம் கிடைச்சுது. நான் சொல்றது 12 வருஷத்துக்கு முன்னாடி.
அடுத்த முயற்சியா ஃபேப்ரிக் பெயின்டிங் கத்துக்கிட்டேன். சேலையில நம்ம கையாலேயே டிசைன் போட்டுத் தர்றதுதான் இந்த
கான்செப்ட். இதிலேயும் சொல்லிக்கிற மாதிரி வருமானம் வந்துச்சு. வெறும் டிசைனா மட்டும் இல்லாம சேலையில் கல்வெச்சு, ஆர்ட் வொர்க் செய்கிற 'ஆர்யா வொர்க்’ கத்துக்கலாமேனு அது தொடர்பான வகுப்புக்கும் போனேன். அந்த வேலை நுணுக்கமான, நேரம் அதிகமாகும் வேலைதான். ஆனா, நிறைய வருமானம் கிடைக்கும். என்னோட வேலை நேர்த்தியைப் பார்த்துட்டு ஈரோட்டில் இருக்கிற பெரிய துணிக் கடைகள்ல இருந்து நிறைய ஆர்டர்கள் வந்துச்சு.
இதுக்கு நடுவுல ஈரோட்டில் எங்கே எல்லாம் கைவினைத் தொழில் பயிற்சி நடக்குதோ அதை எல்லாம் தேடிப் பிடிச்சு கத்துக்க ஆரம்பிச்சேன். மண் பானை ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், கண்ணாடி பொருள்களில் ஓவியம், பொம்மைத் தயாரிப்பு, மூங்கில் கூடைகள் செய்றதுனு நிறைய கைவினைத் தொழில்கள் கத்துக்கிட்டேன். நானும் கத்துக்கிறேன் பேர்வழினு போயிட்டு வராம, அவங்க சொல்லிக்கொடுத்த விஷயத்தைத் தாண்டியும் புதுமையா ஏதாவது முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்.
சமீபத்தில் 'நகை தயாரிப்பு’ பற்றி ஒரு பேப்பர்ல படிச்சேன். அதுக்கான பயிற்சி வகுப்புகள் உள்ளூரில் இல்லை. அதுக்காக சென்னைக்குப் போய் கத்துக்கிட்டேன். இப்போ ஸ்படிகக் கற்கள்வெச்சு நகை வேலை செய்து உள்ளூர் நகைக் கடைகள், ஃபேன்சி ஸ்டோர்களில் விற்கிறேன். அருமையான தொழில் இது. புதுப்புது டிசைன்களை உருவாக்கினா நல்ல வரவேற்பு கிடைக்கும்.
10 வருஷத்துக்கு முன்னாடி மாசம் 2,000 சம்பாதிச்ச நான், இன்னைக்குக் 25,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறேன். நிறைய மகளிர் சுய உதவிக் குழுக்கள், வங்கிகள், தனியார் அமைப்புகள் எல்லாம் வகுப்பு எடுக்கக் கூப்பிடுறாங்க. அப்படிப் போனா, மாசம் 50,000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும். ஆனா, வீட்டையும் குழந்தைகளையும் கவனிச்சுக்க முடியாது. நான் சம்பாதிக்கிறதே அவங் களுக்காகத்தானே. அதனால், வீட்டிலேயே ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி உட்பட பல்வேறு தொழில் பயிற்சிகளை கத்துக்கொடுத்துட்டு வர்றேன். இதுவே மனசுக்கு நிறைவா இருக்கு'' என்கிறார் நெகிழ் வுடன்!

Thursday, November 29, 2012

எந்த ஊரில் என்ன வாங்கலாம்


பட்டுப் புடவைகளுக்கு பெயர் போனது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம்

ம்மூர் பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் ரெண்டே ரெண்டுதான். ஒன்று தங்கம், மற்றொன்று பட்டுப் புடவை. இந்த பட்டுப் புடவைகளுக்கு பெயர் போனது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம். முகூர்த்த நாட்கள் இருக்கும் எல்லா மாதங்களுமே இங்கு பட்டுப் புடவை வாங்கும் 'சீசன்’தான்.
'பட்டுநூல்காரர்கள்’ என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்களே திருபுவனத்தில் அதிகம்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னருக்கு பல விதமான பட்டுத் துணிகளை வடிவமைத்து தருவதற்காக இந்த ஊரில் குடியேறிய இவர்கள், இன்றைக்கும் பட்டுப் புடவை உற்பத்தியில் தமிழகத்திலேயே தலைசிறந்து விளங்குகிறார்கள்.
திருபுவனத்தில் இருக்கும் சன்னதி தெருதான் அங்கு உற்பத்தியாகும் அனைத்துப் பட்டுப் புடவைகளின் காட்சிக் கூடம். இங்கு நான்கு அரசாங்க சொஸைட்டிகளும் சிறியதும் பெரியதுமாக ஐம்பத்தைந்து தனியார் கடைகளும் இருக்கின்றன.
150 மீட்டர் மட்டுமே நீளமுள்ள இந்த சன்னதி தெருவில் வருடந்தோறும் ஐம்பது கோடி ரூபாய்க்கும் அதிகமாக 'டேர்னோவர்’ ஆகிவருகிறது.
இந்த ஊரில் உற்பத்தியாகும் பட்டுப் புடவைக்கு அப்படி என்ன விசேஷம் என திருபுவனம் சில்க் சிட்டி பட்டு ஜவுளிகள் வியாபாரிகள் சங்க செயலாளர் சங்கரிடம் கேட்டோம்.
'திருபுவனத்தில் உற்பத்தியாகும் பட்டுப் புடவைகளில் தஞ்சை மண்ணின் கலையம்சமும் பாரம்பரியமும் நிரம்பி இருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் புடவைகளின் கலர், ஜரிகை போன்றவற்றில் எப்போதுமே ஒரு தனித்தன்மை இருக்கும். இங்கு தயாரிக்கப்படும் புடவைகளின் 'திக்னெஸ்’ அதிகமாக இருக்கும். 'ஒத்தைப்பாகு’, 'ரெட்டைப்பாகு’ என இங்கு தயாரிக்கப்படும் புடவைகளின் வகைகளும் வெவ்வேறுவிதமாக இருக்கும்'' என சிறப்புகளை அடுக்கினார்.திருபுவனத்தில் மொத்தம் ஐயாயிரம் குடும்பங்கள் இருக்கிறது. அதில் நான்காயிரம் குடும்பங்களுக்கு பட்டுப் புடவை உற்பத்திதான் குடும்பத் தொழில். இங்கு குறைந்தபட்சம் 2,500 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சம் வரைக்கும் பட்டுப் புடவைகளை வாங்க முடியும். அதேபோல் கல் வேலைபாடு கொண்ட பட்டுப் புடவைகளை 5,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாய் வரைக்கும் வாங்கலாம். சராசரி வேலைபாடுகள் கொண்ட ஒரு பட்டுப் புடவையை செய்து முடிக்க ஐந்து நாட்களும், அதிக வேலைபாடுகள் உள்ள புடவைகளை தயாரிக்க பதினைந்து நாட்கள் வரைக்கும் தேவைப்படுகிறது. பெரும்பாலும் ஒரு பட்டுப் புடவையின் விற்பனைத் தொகையில் 60 சதவிகிதம் வரை அதன் உற்பத்திச் செலவாக இருக்கிறது.
பட்டுப் புடவை உற்பத்தி தவிர, பழைய பட்டு புடவைகளுக்கு 'பேட்ச் வொர்க்’ செய்வது, சாயம் போன பட்டுப் புடவைகளுக்கு சாயமேற்றும் தொழிலும் பெருவாரியாக நடக்கிறது. இதற்கெல்லாம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் வேலைக்கேற்ற மாதிரி கட்டணம் வாங்கப்படுகிறது. ''இன்றைக்கும் தமிழ்நாட்டுல இருக்குற எல்லா ஊர்களிலிருந்தும் திருபுவனத்துக்கு வந்து வியாபாரிகள் மொத்தமாக புடவைகளை வாங்கிட்டு போய் 20-25% லாபம் வைத்து விக்கிறாங்க'' என்கிறார்கள் பல்வேறு சொஸைட்டிகளை சேர்ந்த ஊழியர்கள்.
'முன்னாடி எல்லாம் திருபுவனத்தில் உற்பத்தியும் விற்பனையும் சீராக இருந்தது. ஆனால், இப்ப உற்பத்தி அதிகமாக இருக்கு; விற்பனையோ குறைஞ்சிருக்கு. டி.வி.யில் பெரிய பெரிய கடைகள் கொடுக்குற விளம்பரங்கள்ல வரும் மாடல்களையும் டிசைன்களையும் பார்த்துட்டு அந்த வாரத்துலயே நேரா இங்கே வந்து 'அந்த மாடல்களையெல்லாம் எடுத்துப்போடுங்க’னு கேட்குறாங்க. எங்களால அவ்வளவு வேகமா ஓட முடியுறதில்லை'' என்று வருத்தப்பட்டு பேசுகிறார்கள் பட்டு வியாபாரிகள்.
அடுத்த தடவை நீங்கள் கும்பகோணம் போனால், திருபுவனம் ஞாபகமிருக்கட்டும்.
- உ.அருண்குமார்,
படங்கள்: எஸ்.சிவபாலன்

எந்த ஊரில் என்ன வாங்கலாம்


சிதம்பரம் கவரிங்


நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது தங்கம். எனவே, தங்க நகை போலவே டிசைன், அதே ஜொலிப்பு உள்ள விலை குறைவான கவரிங் நகைகளுக்கு மவுசு கூடிக்கொண்டே வருகிறது.கவரிங் நகைகள் எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது என்றாலும், அதற்கு தாய் வீடு என்னவோ சிதம்பரம்தான். பெரும் போட்டி வந்தபிறகும் அந்த பெருமையை இன்றும் தக்க வைத்திருக்கிறது சிதம்பரம். தமிழகத்தின் பல நகரங்களிலிருந்தும் கவரிங் நகைகளை சிதம்பரத்திலிருந்துதான் கொள்முதல் செய்கின்றனர். 

சிதம்பரத்தில் கவரிங் நகைகளை செய்வதற்கென்றே பல குடும்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அப்பாபிள்ளைத் தெரு, இளமையாக்கினார் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு போன்ற இடங்களில் கவரிங் நகைகள் முழுமூச்சாக தயாராகி வருகின்றன. 

இங்கு நேரடியாக வாங்கும்போது ஒரிஜினல் கவரிங், மைக்ரோ கவரிங், சாதாரண கவரிங் என கவரிங் ரகங்களைப் பார்த்து வாங்க முடியும். அதேபோல் உங்களுக்குப் பிடித்த டிசைனை பேரம் பேசியும் வாங்க முடியும் என்கிறார் சிதம்பரம் நகர விஷ்வகர்மா சங்கத் தலைவர் ஆர்.பி.சுந்தரமூர்த்தி. 

சிதம்பரம் கவரிங் என்று அடைமொழியோடு அழைக்கப்படுவதற்கான காரணத்தையும், மற்ற நகரங்களில் வாங்குவதற்கும், சிதம்பரத்தில் வாங்குவதற்கும் உள்ள சிதம்பர ரகசியத்தையும் அவரிடம் கேட்டோம்.

''இப்ப கவரிங் நகை செய்யும் தொழில் எல்லா ஊர்களிலும் வந்துவிட்டது. ஆனா, ஒரிஜினல் கவரிங் இங்கேதான் கிடைக்கும். அதற்குக் காரணம், சிதம்பரத்தின் தண்ணீர். இங்கு செய்யப்படும்  நகைகள் அவ்வளவு சீக்கிரம் கறுக்காது, தோல் உரியாது. அதேபோல அணிந்துகொள்வதால் சருமப் பிரச்னைகள் இருக்காது.

பெண்கள் விதவிதமான டிசைன்களை விரும்புவதால் ஆண்டு முழுவதுமே கவரிங் நகைகளைத் தயாரிக்கிறோம். தற்போது சிதம்பரத்தில் இது குடிசைத் தொழில் போலவே ஆகிவிட்டது. முன்பு கவரிங் செயின் மட்டும்தான் செய்தோம். ஆனால், தற்போது வளையல், ஆரம், மோதிரம், கொலுசு போன்றவையும் அச்சு அசல் தங்க நகைகளைப் போலவே செய்கிறோம். 

பொதுவாக திருட்டுப் பயம் இல்லை என்பதால் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு தங்க நகைகளைப் போலவே கவரிங் நகைகளையும் மக்கள் விரும்பி அணிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால் கவரிங் நகைகளுக்கு இன்னும் மவுசு கூடுகிறது'' என்றார்.

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் விற்பனையாளர்கள் மொத்தமா வாங்கிச் சென்று சுமார் 30 சதவிகிதத்துக்கும் மேல் லாபம் வைத்து விற்பனை செய்கிறார்கள். தவிர, இங்கு செய்யப்படும் சில பிராண்டட் கவரிங் நகைகளுக்கு ஒரு வருடம் கேரண்டியும், ரீ சேல் மதிப்பும் இருக்கிறது. தங்க நகைகளை மாற்றிக்கொள்வது போல பழைய கவரிங் நகையை கொடுத்துவிட்டு, புதிதாக நகைகளைகூட வாங்கிக்கொள்ள முடியும்.

மணப்பெண் அலங்கார நகைகள் என்று தனியாக செட் நகைகளும் கிடைக்கிறது. விலையைப் பொறுத்தவரை, குறைந்தது 25 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரையிலும் டிசைனுக்கு ஏற்ப இருக்கிறது. குடும்பத் தலைவிகள், கல்லூரி மாணவிகள் சிலர் இங்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். அந்த வகையில் சிறந்த சுயதொழில் வாய்ப்பையும் கொடுக்கிறது. 

இந்த கவரிங் நகைகளை பாலீஸ் போட்டுக்கொண்டால் போதும். ஐந்து வருடங்களுக்கு அழியாமல் இருக்கும். தங்கத்திற்கு மாற்று கவரிங் நகைகள்தான் என்றாகிவிட்டது. அடுத்தமுறை சிதம்பரம் சென்றால் ஆளுக்கொரு கவரிங் நகை வாங்கிக்கொள்ள மறக்காதீர்கள். 

தொகுப்பு: மா.நந்தினி,
 படங்கள்: இ.ராஜவிபீஷிகா

ஏற்றுமதி செய்வதற்கான தகுதி, முன்னேற்பாடுகளைக் குறித்து விளக்கிச் சொல்லுங்கள்!ஏற்றுமதி செய்வதற்கான தகுதி, முன்னேற்பாடுகளைக் குறித்து விளக்கிச் சொல்லுங்கள்!
மாரிக்கண்ணன், கோவில்பட்டி.
''அப்படி எதுவும் இல்லை..! ஏற்றுமதி பற்றி ஓரளவுக்கு விஷய ஞானம் இருந்தால் போதும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு என பிரத்யேக எண் இருக்கிறது. இதை 'எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் கோட்’ என்பார்கள். அதனை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். இதை வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரக (DGFT - Director General of Foreign Trade)  அலுவலகத்தில் பெற வேண்டும். தமிழ்நாட்டில் இதன் அலுவலகங்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயங்கி வருகின்றன.
இந்த ஏற்றுமதி எண்ணை பெற ஏற்றுமதி செய்பவர் அல்லது நிறுவனத்தின் பெயரில் பான் கார்டு இருக்க வேண்டும். மேலும், முகவரிக்கான ஆதாரம், வங்கி நடப்புக் கணக்கு விவரம் போன்றவை தேவைப்படும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.250. ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். அதற்கு  http://www.dgft.gov.in என்கிற இணையதளத்தைப் பார்வையிடவும். அடுத்து, நீங்கள் ஏற்றுமதி செய்யப் போகிற பொருளை தேர்வு செய்யுங்கள். அந்த பொருள் தொடர்புடைய ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அல்லது எங்களின் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராகி வழிகாட்டுதல் பெறலாம்.'
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பயிற்சிகளை உங்களின் அமைப்பு நடத்துகிறதா?
டி.கே.சிவக்குமார், திருச்செங்கோடு.

''எங்கள் கூட்டமைப்பு குறுகிய கால மற்றும் ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை முக்கிய நகரங்களில் நடத்துகிறது. இதற்கு சிறிய கட்டணம் உண்டு. எங்களை, கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அல்லது இ-மெயில் முகவரியில் தொடர்பு கொண்டால், அடுத்த பயிற்சி வகுப்பு அல்லது கருத்தரங்கம் எங்கே நடக்கிறது என்கிற விவரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.
தொலைபேசி எண்கள்: 044-2849 7744/55/66
இ-மெயில் முகவரி: fieosouth@airtelmail.in

சலூன் கடைகளில் கிடைக்கும் முடியை ஏற்றுமதி செய்து சம்பாதிக்க வழி இருக்கிறதா?
ஜி.ராஜ்குமார், மதுரை-14.
''இந்தியாவிலிருந்து பலர் மனித முடிகளை ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த வகையில் நீங்கள் தாராளமாக ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டலாம். சலூன் கடைகளில் கிடைக்கும் மனித முடிகளை அப்படியே ஏற்றுமதி செய்ய முடியாது. அதை சுத்தப்படுத்தி பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய வேண்டும்.''
ஐம்பது வருடங்களுக்கு முன் சுதந்திரப் போராட்ட தியாகியான எங்கள் பெரியப்பா ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு எண் (Code) வாங்கி வைத்திருந்தார். அதைக் கொண்டு இப்போது புதிதாக ஏற்றுமதி செய்ய முடியுமா?
ராஜலெஷ்மி ஜெயராமன், கும்பகோணம்.
''அந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எண் புதுப்பிக்கப்பட்டிருக்காது என்பதால் இப்போது செல்லாது. மேலும், ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்கள் எல்லாம் இப்போது மாறியிருக்கும். எனவே, புதிதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எண்ணுக்கு விண்ணப்பிப்பதே நல்லது. இது விண்ணப்பித்த இரு வாரத்துக்குள் கிடைத்துவிடும்.''
'என்னிடம் ஒரு லட்ச ரூபாய் உள்ளது. இதை வைத்து நான் ஏற்றுமதி  செய்ய முடியுமா? குறிப்பாக திருப்பூரிலிருந்து பின்னலாடை ஏற்றுமதி சிறிய அளவில் மேற்கொள்ள முடியுமா?
எஸ்.சரவணகுமார், சென்னை.
''ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச முதலீடு என்று எதுவும் தனியாக இல்லை. பொருளை இறக்குமதி செய்பவரின் தேவையைப் பொறுத்து ஏற்றுமதி செய்பவரின் செலவு இருக்கும். மேலும், உங்களின் நிதி வசதிக்கு ஏற்ப ஆரம்பத்தில் பொருட்களின் அளவை முடிவு செய்துகொள்ளலாம். இறக்குமதியாளர் ஒரே நேரத்தில் அதிக மதிப்பிலான பொருட்களை கேட்டால், அவரிடமிருந்து முன்பணம் பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஏற்றுமதி ஆர்டரைக் காட்டி வங்கியில் கடன் வாங்கிக்கொள்ள முடியும்.''
அப்பளம் தயாரித்து உள்நாட்டில் விற்பனை செய்து வருகிறேன். இதற்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து சொல்லுங்கள்..?
பி.ஆர்.சந்திரன், தலைவர், தமிழ்நாடு அப்பள உற்பத்தியாளர்கள் சங்கம்,
வேளச்சேரி, சென்னை.
''இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து அப்பளங்களை உலகின் பல நாடுகளுக்கு இப்போதும் ஏற்றுமதி செய்கிறார்கள். அப்பள ஏற்றுமதி என்கிறபோது, அது சுகாதாரமானதாகவும், தரமானதாகவும் இருப்பது அவசியம். மேலும், குறைந்தது ஆறு மாதங்கள் கெடாமல் இருக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஸ்பெஷல் பேக்கிங் செய்து அனுப்புவது அவசியம். இந்தியாவிலிருந்து தற்போது அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றுக்கு அப்பளம் ஏற்றுமதியாகி வருகிறது.''
நான் கடந்த ஐந்து வருடங்களாக துபாயில் வேலை பார்த்து வருகிறேன். சென்னையிலிருந்து துபாய்க்கு அரிசி இறக்குமதி செய்ய விரும்புகிறேன். அதற்கான நடைமுறைகள் என்னென்ன?
அன்புராஜன் இ.காந்தி, துபாய்.
''துபாய், இந்தியாவிலிருந்து அதிகமாக அரிசியை இறக்குமதி செய்து வருகிறது. ஏற்றுமதி நடைமுறைகள் குறித்து ஷார்ஜாவில் உள்ள எங்களின் பிராந்திய அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
தொலைபேசி எண்: 00971 65578220

முகவரி:
INDUS TRADE SERVICES FZE
(Subsidiary of FIEO)
P 6 - 69, SAIF ZONE,
PB No. 121820, SHARJAH-UAE
இ-மெயில்: industs@emirates.net.ae
தொகுப்பு: சி.சரவணன்,
படம்: ஜெ.வேங்கடராஜ்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்!பிரம்பு பொருட்
வீடு முழுக்க என்னதான் அலங்காரப் பொருட்களை வாங்கி அடுக்கினாலும், 

ஒரு பிரம்பு சோஃபா இருந்தாலேப் போதும், உங்கள் வீடு மாடர்னாக 

மாறிவிடும். இன்றைக்கு பிரம்புக்கூடை எல்லா நகரங்களிலும் விற்பனை 

ஆகிறது என்றாலும், அதை குறைந்த விலையில் வாங்க வேண்டும் 

என்றால் அதற்கு தமிழகத்திலேயே பெஸ்ட் இடம், சீர்காழிதான்.


பிரம்பு பொருட்கள் செய்வதையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கும் 

தைக்கால் கிராமம் சீர்காழிக்கு அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 

மயிலாடுதுறை வழியில் சீர்காழிக்கு முன்பே கொள்ளிடம் கரையில் 

இருக்கிறது இந்த ஊர். இங்கு கடைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்ட 

விதவிதமான பிரம்பு பொருட்களை வரிசைக்கட்டி வைத்திருப்பதே 

அழகுதான்.


இந்த ஊரில் இதுதான் முக்கியமான தொழில் என்பதால், இதன் பின்புலத்தை 

அறிந்துகொள்ள நூற்றாண்டு கண்ட ராயல் லுக் கடையின் உரிமையாளர் 

முகமது அப்பாஸிடம் பேசினோம்.


''எங்க தாத்தா காலத்தில் ஆரம்பமானது இந்த தொழில். 

கொள்ளிடக்கரையில் இருப்பதால் இந்த பகுதியில் விளையும் மெல்லிய 

பிரம்புகளை வைத்து வீட்டிலேயே தொழிலைத் தொடங்க, இன்று 

முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழிலைச் செய்து வருகிறோம்.


சீர்காழி, சிதம்பரம், திருக்கடையூர், தரங்கம்பாடி போன்ற ஊர்களுக்கு 

தைக்கால் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் வெளியூர் 

சுற்றுலாப் பயணிகளும் தைக்காலுக்கு ஒரு விசிட் அடிக்காமல் 

போவதில்லை. பஞ்சு மெத்தைகள் சுகமாக இருந்தாலும் கை 

வேலைபாடுகொண்ட பிரம்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதும், பிரம்பு 

பொருட்களின் குளுமை, உடம்பு சூடு தணியும் என்பதாலும் வருடம் 

முழுவதும் எங்களுக்கு நல்ல விற்பனைதான். வேலூர், சென்னை, திருச்சி 

போன்ற வெளியூர்களில் பிரம்பு பொருட்களை விற்பனை செய்வதற்காக 

இங்கிருந்துதான் வாங்கிச் செல்கின்றனர்'' என்றார். 

இங்கு விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து ஜாடி, கூடை, முறம், 


அர்ச்சனைத் தட்டு, அலங்கார கூடைகள் செய்யப்படுகிறது. இந்த மெல்லிய 

பிரம்பு அதிக வளைவு கொடுக்காது என்பதால் எடை தாங்கும் கூடைகளைச் 

செய்ய முடியாது. அதனால கடினமான, குவாலிட்டியான பிரம்புகளை 

பீகாரில் இருந்து இறக்குமதி செய்து பொருட்களை செய்கிறார்கள். ஏழு 

வகை பிரம்புகளில் ரைடான், மூங்கில் பிரம்பு, முக்கால் பிரம்பு என 

ரகரகமாகப் பொருட்களை செய்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். கலை 

நுணுக்கமான வேலை என்பதால் ஒரு நாளில் எட்டு பேர் சேர்ந்து ஒரு 

சோபாதான் செய்ய முடியுமாம். கடினமான ரைடான் பிரம்புகளால் பெரிய 

பிரம்பு சோஃபா, நாற்காலி, டீபாய், ஜூலா போன்றவற்றை 

செய்கிறார்கள்.வெளியூர் விற்பனையாளர்கள் இங்கிருந்து 10 ஆயிரம் 

ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் பொருட்களை பதினைந்து ஆயிரத்துக்கு 

தாராளமா விற்க முடியும் என்கிறார்கள். வாடிக்கையாளர்கள் இங்கு வந்து 

நேரடியாக வாங்கும்போது கையில இருக்குற தொகைக்கு ஏற்ப 

பொருட்களை தரம் பார்த்து வாங்க முடியும். அதே சமயம் தரமானதாகவும் 

பார்த்து வாங்கலாம். சோஃபாசெட், ஜூலா, டைனிங் டேபிள் என எல்லாமே 

கிடைக்கிறது. முக்கியமாக நேரடியாக வந்து வாங்கும்போது கேரண்டியும் 

தருகிறார்கள்!.இங்கிருந்து பொருட்களை வாங்கிச் செல்வது மட்டுமல்ல, தேவைகேற்ப 

ஆர்டர் கொடுத்து செய்துவாங்கிக் கொள்ளவும் முடியும். அவர்களிடம் 

இருக்கும் டிசைன் மட்டுமல்ல, உங்களது விருப்ப டிசைன்களும் 

செய்துகொள்ளலாம். இயற்கையான நிறத்தில், கலர் இல்லாமல், தரமாக, 

உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப ரேட் பேசி வாங்கிச் செல்ல 

இந்த ஊருக்கு விசிட் அடிக்கலாம்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்ந்த கொண்டாட்டமாக இருந்தாலும் அதை மறக்க முடியாத நாளாக மாற்றுவதில் புத்தாடைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. இப்போதெல்லாம் பண்டிகைக் காலங்கள் என்றுதான் இல்லை; கையில் காசு இருந்தால் கலர் கலரா, டிசைன் டிசைனா ஆடைகளை எடுத்துப்போட்டு அழகு பார்க்கும் ஆர்வம் எல்லோருக்குமே வந்துவிட்டது. காலத்துக்கு ஏற்ப புதுசு புதுசா பல மாடல்களில் ஆடைகள் வந்தவண்ணமும் இருக்கின்றன.
மனதுக்குப் பிடித்த ஆடைகளை குறைந்த விலையில் எங்கே வாங்கலாம் என்பதுதான் ஆடைப் பிரியர்களின் தேடலாக இருக்கிறது. அத்தகைய தேடலுக்குத் தீர்வு தரும் இடங்களில் முதன்மையாக இருப்பது சென்னை வண்ணாரப்பேட்டை. சின்னக் குழந்தைக்குத் தேவையான ஜட்டியிலிருந்து பெரியவர்களுக்குத் தேவையான ஆடைகள் வரை அனைத்தும் வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு மார்க்கெட்டில் கிடைக்கும். கடந்த முப்பது வருடங்களாக இங்கு துணிக் கடை நடத்திவரும் சந்திரசேகரிடம் பேசினோம்.
'கடந்த நூறு வருடங்களாக இங்கு ஜவுளி வியாபாரம் நடந்துட்டு வருது. ஆரம்பத்துல ஜவுளி வியாபாரம் சிறுதொழிலா ஆரம்பிக்கப்பட்டு இப்ப பெரிய அளவுல வளர்ந்திருக்கு. இங்க மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்கிறோம். இங்கிருந்து சென்னை தி.நகர், புரசைவாக்கம் போன்ற சென்னை பகுதி கடைகள் மற்றும் கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களுக்கும் துணிகள் சப்ளை செய்கிறோம். தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, கேரளா, புதுச்சேரிக்கும் சப்ளை செய்கிறோம்.

சூரத், பாம்பே, கொல்கத்தா, திருப்பூர் என்று துணிகளை உற்பத்தி செய்யும் இடங்களுக்கே சென்று வாங்குகிறோம். இடைத்தரகர்கள் இல்லாததால் மிக குறைவான விலைக்கே எங்களால் வியாபாரம் செய்ய முடியுது. இங்கே 80 ரூபாயிலிருந்துகூட புடவை கிடைக்கும். பூனம், பேப்பர் காட்டன், பப்பாளி காட்டன் புடவைகளை 150 ரூபாயிலிருந்து வாங்கலாம்.
ஆண்களுக்கான சட்டை 100 ரூபாயிலிருந்தும், இளம் பெண்கள் விரும்பும் அனார்கலி, ரசக்களி டிரெஸ்களை 500 ரூபாயிலிருந்தும் வாங்கலாம்.  அது மட்டுமல்லாமல் தீபாவளி மாதிரியான பண்டிகைகளுக்குத் தள்ளுபடியும் கொடுக்கிறோம்.
திருமணம் போன்ற விசேஷங்களுக்காக  மொத்தமா வாங்க வர்றவங்கதான் அதிகம். ஏன்னா, வேற இடத்துல ரெண்டு பேருக்கு வாங்குறப் பணத்துல இங்க நாலு பேருக்குத் துணி வாங்கிடலாம். வாங்கிட்டுப் போன துணி பிடிக்கலைன்னாவோ, டேமேஜ் இருந்தாலோ 15 நாட்களுக்குள் திருப்பிக் கொண்டுவந்தால் மாற்றியும் கொடுத்துவிடுவோம். சிட்டியில எத்தனை பிரமாண்டமான கடைகள் ந்தாலும் வண்ணாரப்பேட்டைக்குன்னு ரு மவுசு இருக்கவே செய்யுது.
 
காலையில ஏழு மணிக்கு கடை  திறந்தா இரவு 11 மணிக்குதான் மூடுவோம். சில பண்டிகை நாட்களில் இரவு ஒருமணிவரைகூட ஆகிவிடும். பெண்களுக்கான சுடிதாரை விரும்புகிற டிசைனுக்கேற்ப ஒரு மணி நேரத்தில் தைத்தும் கொடுக்கிறோம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் புழங்கக்கூடிய வண்ணாரப்பேட்டை, இப்போது எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் ஜவுளிக் கடலாக மாறியுள்ளது'' என்றார்.
சென்னையில் இருப்பவர்கள் பெரும்பாலும் வண்ணாரப்பேட்டையை தங்கள் சாய்ஸாக வைத்திருப்பார்கள். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருகிறவர்களும் வேலையோடு வேலையாக வண்ணாரப்பேட்டைக்கும் ஒரு விசிட் அடித்து வகை வகையான ஆடைகளை வாரிச் செல்லலாமே!
    - பி.செ.விஷ்ணு,
படங்கள்: த.ரூபேந்தர்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளப்பட்டி. சின்ன ஊராக இருந்தாலும் சின்னாளப்பட்டி சுங்குடி சேலை என்பது இன்றைக்கு உலகம் முழுக்கப் பிரபலம். ஆரம்பத்தில் இந்த ஊரில் எளிய டிசைனில் காட்டன் சேலைகளைத் தயாரித்து விற்றனர். ஆனால், காலப்போக்கில் விசைத்தறிகளின் ஆதிக்கம் பெருகவே, இன்றைக்கு துணி உற்பத்தி என்பதைவிட, திருப்பூரிலிருந்து துணி வாங்கி, அதை சுங்குடி புடவையாக மாற்றி விற்பதே இப்போது இங்கு பிரதானமான தொழிலாக இருக்கிறது. கடந்த இரு தலைமுறைகளாக சின்னாளப்பட்டியில் சுங்குடி சேலை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ரவியிடம் பேசினோம்.
''சுங்குடி புடவையின் பிறப்பிடம் மதுரைதான் என்றாலும் அதிகமான உற்பத்தி, விற்பனை எல்லாமே இப்போது சின்னாளப்பட்டிதான். இதற்காக திருப்பூரில் இருந்து சுத்தமான காட்டன் துணிகளை வாங்குகிறோம். பின் சாயம் போடுவது முதல் ஒரு வாரம் தண்ணீரிலேயே பிராசஸ் வேலைகளை இங்கேயே செய்கிறோம். சிறுமலை, மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே சின்னாளப்பட்டி அமைந்திருப்பதால், தண்ணீருக்கு என்றைக்கும் பஞ்சமில்லை. தவிர, எங்கள் ஊர் தண்ணீருக்கு விசேஷ குணம் உண்டு. இந்த தண்ணீரில் நனைத்து சாயமிடும்போது, தேவையான அளவு துணி சுருங்கிவிடும். இதனால் மேற்கொண்டு அந்த துணி சுருங்குவதற்கு வாய்ப்பில்லை. இதனால் பலரும் எங்களைத் தேடி வந்து சுங்குடிப் புடவைகளை வாங்கிக்கொண்டு போகிறார்கள்.
பொதுவாக சுங்குடிப் புடவை என்றால் வயதானவர்கள் உடுத்துவது என்றிருந்த நிலை மாறி, இப்போது இளம்பெண்களும் கட்டத் தொடங்கி இருக்கின்றனர். கல்லூரிப் பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மொத்தமாக ஆர்டர் கொடுக்கும்போது அவர்கள் கொடுக்கும் டிசைன்களிலும் அல்லது எங்களிடம் இருக்கும் டிசைன்களுக்கு ஏற்ப செய்து கொடுக்கிறோம். பாரம்பரிய டிசைன்கள் மட்டுமில்லாமல், தற்போது பெண்கள் விரும்பும் வகையில் பல்வேறு டிசைன்களிலும் சுங்குடிப் புடவைகளை தயார் செய்து தருகிறோம்'' என்றார் ரவி.
சின்னாளப்பட்டி சுங்குடிப் புடவைகளின் தனிச்சிறப்பு என்னவெனில், அவை முழுக்க முழுக்க காட்டன் புடவைதான். எனவே, வெயில் காலத்திற்கு இந்த புடவைகளை பெண்கள் விரும்பி உடுத்துகின்றனர்.
இந்த சேலைகளின் விலை மிகக் குறைவுதான். ஓரடுக்கு, மூன்றடுக்கு சரிகை என சரிகையைப் பொறுத்து விலை வேறுபடும் என்றாலும், 150 ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 500 ரூபாய் விலைக்குள் வாங்கிவிடலாம். எனவேதான், இங்கு விற்பனை என்பது எல்லா நாட்களிலும் கனஜோராக இருக்கிறது. மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகம், உத்தரபிரதேசம், அசாம், நாகலாந்து என வடமாநில வியாபாரிகளும் இங்கிருந்து புடவைகளை வாங்கிச் செல்கின்றனர்.
என்னதான் மாடர்னாக மில் சேலைகளை உடுத்துபவர்களாக இருந்தாலும் சுங்குடி சேலையை ஒருமுறை கட்டிப் பார்த்தால், அதில் கிடைக்கும் சௌகரியத்தை அனுபவித்தவர்கள் அந்த புடவையைத் தொடர்ந்து நாடவே விரும்புவார்கள். கொடைக்கானலுக்கோ திண்டுக்கல்லுக்கோ போகிறவர்கள் சின்னாளப்பட்டிக்கு ஒருமுறை போய் ஒன்றிரண்டு சுங்குடிச் சேலையை வாங்கி வரலாமே!
- க.அருண்குமார்,
படங்கள்: வீ.சிவக்குமார்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்


இது பண்டிகைக் காலம். வீட்டில் எது இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரையும், வெல்லமும் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த வகையில் இப்போது குறைந்த விலையில் தரமான வெல்லத்தை எங்கு வாங்கலாம்?
ழநியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறிய ஊர் நெய்க்காரப்பட்டி. இவ்வூரைச் சுற்றி ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு வெல்லம் செய்யும் ஆலைகள் அமைந்துள்ளன. இந்த பகுதி கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் கரும்பு விவசாயம். சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பைக் கொடுப்பதைப் போல, நாட்டு வெல்ல ஆலைகளுக்கும் கரும்பைக் கொடுக்கின்றனர். இதனை பாகு எடுத்து வெல்லமாக்கி ஒவ்வொரு ஆலையும் மாதம் மூன்று லட்சம் ரூபாய் வரை பிஸினஸ் செய்கின்றன.  
சில இடங்களில் விவசாயிகள் நேரடியாக ஆலை அமைத்தும் வெல்ல உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று உற்பத்தியாகும் வெல்லத்தை மண்டிகளில் வைத்து ஏலமுறையில் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஏலத்தில் மூட்டைக் கணக்கிலும், ஆலைகளுக்குச் சென்று வாங்கும்போது சில்லறையாகவும் வெல்லத்தை வாங்கிவிடலாம். ஒரு கிலோ ரூபாய் 25-ல் தொடங்கி வெல்லத்தின் தரத்தையும் நிறத்தையும் பொறுத்து விலை மாறுபடுகின்றது.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏஜென்ட் சம்சுதீனிடம் பேசினோம்.
''இந்த பகுதியைச் சேர்ந்தவங்களோட முக்கியத் தொழில் இதுதான். இங்க ஆலைகள்ல சின்ன அச்சுவெல்லம், பெரிய அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் அதிக அளவில் உற்பத்தி செய்யறாங்க. உற்பத்தியானதை வெல்ல மண்டிகள்ல வைத்து விவசாயிகள், வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடுவோம். இதில் ஒரு சிப்பம்கிறது 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை.
இங்கு வெல்லம் வாங்க தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள், கேரள வியாபாரிகள் என பலரும் வருவாங்க.
கெட்டியாக இருக்கும் வெல்லம் சீக்கிரமா தூள் ஆகாது. அதுபோன்ற வெல்லம் நல்ல விலைக்குப் போகும். அது மட்டுமில்லாம, விலையை தீர்மானம் செய்வதில் நிறத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. நல்ல வெளீர் மஞ்சள் நிறம் கொண்ட வெல்லம் முதல் தரமானது. இது நல்ல விலைக்கு ஏலம் போகும். பண்டிகை காலத்தைப் பொறுத்து வெல்லத்தோட விலை ஏறியிறங்கும். அதாவது, மாசி மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாதங்களும் நல்ல 'சீஸன்’ என்று சொல்வோம். வெல்ல உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களிலும் விலை குறைவாகக் கிடைக்கும். விளைச்சல் கம்மியாகும்போது விலை ஏறிவிடும்'' என்றார்.
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஓணம், பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் வெல்லம் அதிக அளவில் விற்பனையாகும். இதுபோன்ற விசேஷ தினங்களில் வெல்லத்தின் விலை அதிகமாக இருக்கும். இங்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறிய அளவில் தொழில் செய்யும் வியாபாரிகள் முதல் பெரிய அளவில் தொழில் செய்யும் வியாபாரிகளின் படையெடுப்பு அதிகம். இங்குள்ள ஆலைகளுக்குச் சென்று வாங்கும்போது நல்ல தரம் பார்த்தும், பேரம் பேசியும் வெல்லத்தை வாங்கிச் செல்லலாம். மேலும், தூள்களாக சிதைந்த வெல்லத்துண்டுகளை குறைந்த விலைக்கு வாங்கிச் செல்லவும் முடியும்.
சர்க்கரை உபயோகிக்கும் முன் நம் மக்கள் நாட்டு வெல்லத்தைத்தான் பயன்படுத்தினார்கள். அளவோடு பயன்படுத்தினால் நாட்டுவெல்லம் சிறந்த மருத்துவ குணங்கள் உடையது.  சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தை பயன்படுத்தினால் நீரிழிவு நோய் குறைவதற்கு வாய்ப்புண்டு என்கின்றனர்.  
இனி, பழநிக்குச் செல்கிறவர்கள் அப்படியே பஞ்சாமிர்த டப்பாவோடு, நெய்க்காரப்பட்டி வெல்லத்தையும் கொஞ்சம் வாங்கி வரலாமே!
க.அருண்குமார்,
படங்கள்:  வீ.சிவக்குமார்.

Wednesday, November 28, 2012

பார்த்த விளம்பரம்

Newspaper Bags - செய்தித்தாள் பைகள்
மிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் செய்தித்தாள் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

1. நியூஸ்பேப்பர் பேக் - சிறியது
அளவு 1 : உயரம் 22 செ.மீ. (9 இஞ்ச்)
அகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.00
500 பைகளுக்கு மேல்: ஒரு பை 80 பைசா
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)

2. நியூஸ்பேப்பர் பேக் - பெரியது
அளவு 2 : உயரம் 26 செ.மீ. (10.5 இஞ்ச்)
அகலம் 24 செ.மீ. (9.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.50
500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.1.30
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)
Paper Bags - காகிதப் பைகள்
மிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் காகிதப் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

1. பேப்பர் பேக் - சிறியது
அளவு: உயரம் 23 செ.மீ. (9 இஞ்ச்)
அகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்)
பக்கவாட்டு அகலம் 5 செ.மீ. (2 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.5.50
500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.5.00
ஆப்செட் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.1000
ஸ்கிரீன் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.2000
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் வரை அனுப்ப ரூ.120 செலவாகும்.)

2. பேப்பர் பேக் - பெரியது
அளவு: உயரம் 25 செ.மீ. (10 இஞ்ச்)
அகலம் 20 செ.மீ. (8 இஞ்ச்)
பக்கவாட்டு அகலம் 6 செ.மீ. (2.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.6.50
500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.6.00
ஆப்செட் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.1000
ஸ்கிரீன் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.2000
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் வரை அனுப்ப ரூ.120 செலவாகும்.)
தொடர்புக்கு: ச.சுதாதேவி, தரணிஷ் எண்டர்பிரைசஸ், எண்.2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை-50. பேசி: +91-99427-32425, 86081-55133, மின்னஞ்சல்: sudha@chennainetwork.com


Candles - மெழுகுவர்த்திகள்
எங்களிடம் முதல் தர மெழுகால் செய்யப்பட்ட தரமான மெழுகுவர்த்திகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். பல வண்ணங்களிலும், இனிமையான நறுமணத்துடனும் கூடிய மெழுகுவர்த்திகள் பலவித வடிவங்களில் கிடைக்கும்.

1. அளவு 1
6 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.1.50)
1 கிலோவுக்கு 170 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.200
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

2. அளவு 2
10 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.2.50)
1 கிலோவுக்கு 100 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.200
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

3. அளவு 3
220 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.75.00)
1 கிலோவுக்கு 4 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.225
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)


சுதாதேஇது விளம்பரம்  இல்லை .தன்னால் முடிந்த பொருளை உருவாக்கி சாதனை படைக்கவேண்டும்.என்ற ஆர்வம் வரவேற்கிறேன் .வி, தரணிஷ் எண்டர்பிரைசஸ், எண்.2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை-
தொடர்புக்கு.சுதாதேவிதரணிஷ் எண்டர்பிரைசஸ்எண்.2, சத்தியவதி நகர் முதல் தெருபாடிசென்னை-50. பேசி: +91-99427-32425, 86081-55133, மின்னஞ்சல்: sudha@chennainetwork.com
50. பேசி: +91-99427-32425, 86081-55133, 

முத்து வளர்ப்பு,


நான் தூத்துக்குடியில் பணிபுரிந்த சமயம், அங்கே எனக்கு முத்துக்குளிப்பவர்கள் சிலர் நண்பர்களாயினர். அவர்கள் மூலம் அறிந்து கொண்டதாவது... முத்துக்குளிப்பவர் முதலில் அதிகநேரம் நீருக்கடியில் மூச்சை தம் கட்ட பழகிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடலுடன் ஒரு கயிற்றை கட்டிக்கொண்டு படகிலிருந்து கடலில் குதிக்க வேண்டும். கயிற்றின் மறுமுனை படகில் இருப்பவரின் கையில் இருக்கும். நீரின் அடியில் தரையில் எவ்வளவு விரைவாக முத்துச்சிப்பிகளை சேகரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைய சேகரிக்க வேண்டும். கடலில் குதித்தவர் எவ்வளவு நேரம் மூச்சை தம் கட்டுவார் என்று கடல் நீர்ப்பரப்பில் படகில் கயிற்றை பிடித்து இருப்பவருக்கு நன்கு தெரியும். அந்த நேரம் வந்தவுடன் மேலே படுவேகமாக கயிற்றை இழுத்து தூக்கி விடுவார். (கயிற்றை கட்டிக்கொள்ள காரணம்: அவ்வளவு சிப்பிகளின் வெயிட்டை தூக்கிக்கொண்டு நீந்தி மேலே ஏறி வருவது கடினம்..!)

கயிற்றை கையில் பிடித்திருப்பவருக்கும் முத்து கிடைத்தால் பங்கு உண்டு என்பதால், "நம்ம பங்காளி உள்ளே இருக்க இருக்க நமக்கு லாபம்தானே" என்று கயிற்றை இழுக்காமல் விட்டு வைத்திருப்பவராக இருக்ககூடாது அல்லவா..? இது ஒரு ரிஸ்க்கான வேலை. உயிர் பிரச்சினை. எனவே, அந்த கயிற்றை பிடித்திருப்பவர் தன் மச்சினனாக மட்டுமே இருப்பார். அதாவது, குதித்தவரின் மனைவியின் சகோதரன்..! 'தன் சகோதரி விதவை ஆகக்கூடாது' என்று, சுயநலன் பார்க்காமல் மச்சான் உயிரை காப்பாற்றுவானாம் மச்சினன் என்பதால்..! வேறு யாரையும் நம்பி முத்துக்குளிப்பவர்கள் கடலினுள்ளே குதிப்பது கிடையாதாம்..!  

பிற்காலத்தில்,  ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டினால்... இன்னும் அதிக நேரம் சிப்பிகளை சேகரிக்கலாம். இதனால், இன்னும் வெயிட் ஏறும். இதனாலும், கட்டி தூக்க கயிறும் அவசியம். எனவே, மச்சினனும் அவசியம்.

இப்போது... சேகரித்த சிப்பிகளை உடைத்துப்பார்த்தால்... 400 கிலோ சிப்பிகளில் ஒன்றோ அல்லது  இரண்டோதான் முத்துக்கள் கிடைக்குமாம். 

ஆக, இந்த அனைத்து சிப்பிகளிலும் முத்துக்கள் இருந்தால்...? முத்துக்கள் இருந்தால்...? இருந்தால்...? எப்பூ....................டி இருக்கும்........?


இதற்குத்தான் வந்தது நவீன தொழில்நுட்பம்..! அது பற்றி அறியும் முன், சிப்பிகளில் முத்துக்கள் எப்படி உருவாகின்றன என்று பார்த்து விடுவோம்...? 
.

தங்கம், வைரம் போன்று மண்ணிற்குள்ளிருந்து கிடைக்கும் உயிரற்றவை போல அல்ல முத்து. உயிருள்ள OYSTER என்ற சிப்பிகளின் வயிற்றில் பிறக்கின்ற இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து..! கடலில் உள்ள சில உயிருள்ள ஒட்டுண்ணிகள் (parasites)  சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச்சென்று விடுகின்றன. அப்போது, சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, அதனிலிருந்து சிப்பி நிவாரணம் பெற, தற்காப்புக்காக நாக்கர் (nacre) திரவத்தை அந்த வேண்டா விருந்தாளியின் மீது பொழியும். அவ்வாறு பொழியும் போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக பின்னர் மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாக மாறி விடுகிறது. இந்த நாக்கர் திரவம் என்பது கால்சியம் கார்போனேட் என்ற ஒருவகை உப்பு.! இந்த நாக்கர் திரவம் சிப்பியின் ஒவ்வோர் வகைக்கும் ஒவ்வோர் வண்ணமாக இருப்பதால், வெள்ளை, கருப்பு, நீலம், சிகப்பு என பல வண்ணங்களில் இருந்தாலும் தங்கநிற முத்து மட்டுமே விலை மதிப்பு வாய்ந்ததாம். இதுபோல உருவானால் அவை (நேச்சுரல்) 'இயற்கை முத்துக்கள்'எனப்படுகின்றன.

இனி... முத்துக்குளிப்பில் அதிநவீன(?) தொழில்நுட்பம்:- இதில்,  உருத்தல்தரும் புல்லுருவிகள் தானாக நுழையாமல், செயற்கையாக சிப்பிக்குள் நுழைக்கப்படுகின்றன. பின்னர், முத்துக்கள் முழுமையாக சிப்பியினுள் உருவாகும் காலம் அறிந்து, அதுவரை பொறுமையாக காத்திருந்து, 'அறுவடை' செய்யப்படுகின்றன..! இவை (கல்ச்சர்ட்) 'வளர்க்கப்படும் முத்துக்கள்' எனப்படும். 

'ஜ்வெல்மர்' என்ற உலகின் ஒரே ஒரு நிறுவனம்தான் முத்துக்களிலேயே மிக விலையுயர்ந்த வகையான "தங்க நிற முத்துக்களை" வளர்த்து உருவாக்குகின்றது.  இந்நிறுவனம் தன் பலவருட உயிர்த்தொழில்நுட்ப ஆராய்ச்சியின் பலனாக இதை சாதித்து இருக்கின்றது. இதற்கென ஒரு உயர்ந்த வகை சிப்பி (பிங்க்டேட்டா மேக்ஸிமா) ஒன்றை தேடிக்கண்டுபிடித்து...


(அது சுமார் அரையடி அலத்திற்கு உள்ள!) அவ்வகை  சிப்பி, உலகில் அதிகம் வாழும் இடத்தையும் ஃபிலிப்பைன் கடலில் கண்டுபிடித்து...  அங்கே சொந்தமாய் ஒரு தீவையும் வளைத்துப்போட்டு...


தன் 'முத்து தொழிற்சாலை'யை (அதாவது... முத்துச்சிப்பி வளர்க்கும் கடல் பண்ணையை) அங்கே... இப்படி ஜம்பமாய் அமர்த்திக்கொண்டு....
(இதுதான் 'முத்துப்பண்ணை')


அமர்க்களப்படுத்துகிறார் அதன் இயக்குனர் ஜாக்குயஸ் ப்ராநெல்லேக்..!

(இவர்தான் ஜாக்..!)

முதலில் கடலடியிலிருந்து அந்த குறிப்பிட்ட வகை சிப்பிகளை சேமிக்கின்றனர்.அதனை கயிறுகட்டி இழுத்து தூக்கி படகில் அள்ளிப்போட்டுக்கொள்கின்றனர். 


பின்னர் சேகரித்த சிப்பிகளை சோதனைச்சாலையில், இந்த அறிவியல் தொழில் நுட்பவாதி ஏதோ ஒரு சரியான புல்லுருவியை சரியான அளவில் சரியான இடத்தில் உள்ளே செலுத்துகிறார். அதை மேற்பார்வை இடுகிறார் ஜாக். 


பின்னர் அனைத்து சிப்பிகளும் எண்ணப்பட்டு பெயர் குறிப்பிடப்பட்டு பாதுக்காப்பாக ஸ்டீல் வலைத்தட்டிகளில் பிணைக்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் வளரவிட... வாழவிடப்படுகின்றன..!இந்த முத்துப்பண்ணைக்கு கடும் பாதுகாப்புகள் உண்டு. 


கடலினுள்ளும் அவ்வப்போது பாதுகாப்பு..! முத்துக்கள்.., என்றால் சும்மாவா..?


குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் மீண்டும் அவை கடலில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்புடன் சோதனைச்சாலைக்கு கொண்டுவரப்படுகின்றன. 


முதலில் மிக பாதுக்காப்பாக உடைந்துவிடாமல் முத்துச்சிப்பிகளை ஸ்டீல் வலையிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள். 


பின்னர் சோதனைச்சாலையில், சிப்பிகளிலிருந்து, முத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி  முத்தை நயமாக வெளியே எடுக்கிறார்கள்.அப்பப்பா..! எவ்வளவு முத்துக்கள்..! மாஷாஅல்லாஹ்..! என்ன அழகு..!
இனி... முத்துக்களின் கண்(கொள்ளா)காட்சிகள் தான்..! 
.

பெரும் களிப்புடன் வார்த்தையில்லா உவகையில் ஜாக். 


அவை அனைத்தும் உறையிடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன..! 
சரி, இந்த முத்துக்கள் எப்படி, எதற்கு, உபயோகப்படுகின்றன..? ம்ம்ம்.... எல்லாமே பெரும்பாலும் பெண்களுக்காகத்தான்...

அவர்கள் விதவிதமாக... நகைகளாக இப்படி...  அழகு ஆபரணங்களாக செய்து அணிந்துகொண்டு...


 பெருமையாக தங்களை மேலும் அழகு காட்டிக்கொள்ளத்தான், இந்த முத்துப்பண்ணையில் இவர்களின் இந்த படாதபாடுபட்டு உழைப்பதெல்லாம்..!
.
சரி..., முத்துக்கள் எடுக்கப்பட்ட அந்த சிப்பிகளெல்லாம் என்னவாகும்..? அதையும்கூட காசாக்காமல் விட்டுவைப்பதில்லை ஜாக்..! அவையனைத்தும், உடைக்கப்பட்டு உள்ளே உள்ள 'உணவாகும் மேட்டர்' மட்டும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, அவை நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்டு,


குளிர்படுத்தப்பட்ட ஐஸ் பெட்டிகளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு பிபிப்பைனி-சைனீஸ் ஹோட்டல்களுக்கு மிக நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.
இதற்கு சுவைப்பிரியர்களிடம் படு டிமாண்டாம்..!
"சிப்பி 66..?" 
முத்துக்களுடனும் சிப்பிகளுடனும் முத்துப்பண்ணை தீவிலிருந்து இப்போது விடை பெறுகிறார் ஜாக்..! இனி அடுத்த 'முத்து மகசூலுக்கு' திரும்பிவருவார்..!
நன்றி :http://ellalan-ellalan.blogspot.com/

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites