இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 7, 2011

வயிற்றுகட்டுப்பாடு



வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச் செலவுக்கே பெரிய அளவில் நிதிஒதுக்கவேண்டி இருக்கிறதுஇந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம்நீரிழிவுஆஸ்துமா,கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக்கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!'' என்கிறார் 'அனாடமிக் தெரபி’ என்கிற 'செவிவழி தொடு சிகிச்சை முறையை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.




 ''உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான்.ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.

மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவுகுடிநீர்மூச்சுக் காற்றுதூக்கம்உடல் உழைப்புஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும்தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதேதெரியவில்லைஉணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறதுஎன்று பலரும் நினைக்கிறார்கள்இது தவறுசாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலேயேஆரம்பித்துவிடுகிறது.

எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும்உணவில் இனிப்புகசப்புதுவர்ப்பு,புளிப்புஉப்புகாரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம்அப்போதுதான் ரத்தத்தில் அனைத்துசத்துகளும் இருக்கும்மேலும்பற்களால் நன்கு கடித்தும் மென்றும் கூழாக்கிநாக்கால் சுவையைருசித்த பின்னரே உணவை விழுங்கவேண்டும்அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும்சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும்மனிதன் வாயின் இரு பக்கங்களிலும் மூன்றுஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறனஇதில் புரோட்டீன்தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிறஎன்ஸைம் போன்றவை இருக்கின்றனஇந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாகஉதவுகிறதுவாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால்இரைப்பையில் ஜீரணத்துக்காகஎடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறதுஇவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சிலதினங்களுக்கு தாடை வலிக்கும்ஆனால்போகப்போக பழகிவிடும்.


அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத்தண்ணீர் குடிக்கக் கூடாதுசாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது.சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கானதிரவம் சுரந்திருக்கும்அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால்அந்த திரவத்தின்தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாதுகுளித்த பின் சுமார் 45நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும்சாப்பிட்ட பிறகு  இரண்டரை மணிநேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனைகடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லைபாஸ்கர் சொல்வதைமேற்கொண்டும் கேளுங்கள்...

''டிவிபார்த்தபடிபுத்தகம் படித்தபடிபேசியபடி சாப்பிடக் கூடாதுநாம்எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும்ஜீரணமாவதற்கான என்ஸைம்சுரக்காதுஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்கமுடியாதுஇந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும்ஒரு வீட்டில்செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்குஇணையாக இருக்கும்இதனால்சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம்சரியான உணவுஎன்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான்அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம்என்கிறபோதுஉணவு மட்டும் விதிவிலக்கா என்னகாலை தொங்கப் போட்டபடி நாற்£லியில் உட்கார்ந்துசாப்பிடுவது நல்லது அல்லமேலும்சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள்சிலர்,சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள்இரண்டும் தவறுகுறைந்தபட்சம் 5 நிமிடம்,அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்...  
''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும்.தேநீர்காபியை தவிர்த்து எலுமிச்சைஇளநீர்பழ ரசங்களை குடிக்கவேண்டும்குறைந்தது ஆறு மணி நேரஉறக்கம் அவசியம்தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்சாப்பாட்டில் இருக்கிறகார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறதுவெள்ளை சர்க்கரை என்கிறசீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும்அதை விஷம் என்றுதான்சொல்லவேண்டும்இனிப்பு தேவை என்கிறபோது தேன்வெல்லம்கருப்பட்டி போன்றவற்றைப்பயன்படுத்திக் கொள்ளலாம்நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்லஅன்றே நம்முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவதுசெலவு மற்றும் மருந்து இல்லாதஅனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சிசெய்யுங்கள்!''

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites