இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 7, 2011

யார் சுகவாசி


 சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி!
☻ அதிகாலையில் எழுபவன் சுகவாசி!
 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி!
 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி!
 மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி!
 உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி!
 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி!
☻ வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி!
 கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி!
 மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி!
☻ கவலைப்படாத மனிதன் சுகவாசி!
 நாவடக்கம் உடையவன் சுகவாசி!
 படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி!
☻ எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி!
 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி!
 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி!
 கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி!
 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி!
 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி!
 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி!
☻ இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி!
 தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் சுகவாசி!
 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி!
 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி!
 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாசி!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites