ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள் என்பது
மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களின் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ
அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக
புகை, தூசி போன்றவை செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு
எதிராக செயல்படும்.

இப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாசக் குழாய்கள் சுருங்குவதால், அதன் வழியாக காற்றுச் சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.
இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகமாகக் காணப்படும்.
ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்டவர்கள் பலர் இந்த நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். எனினும், ஒருசில நேரங்களில் நோயின் தாக்கம் இருக்கும். அப்போது உரிய மருத்துவம் செய்து கொண்டு மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக்குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற சந்தர்ப்பத்தில், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.
எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும். மருத்துவரும் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, உட்கொள்ள வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பார்.
நோயின் காரணங்கள்
நாம் சுவாசிக்கும் காற்று உட்பட சுற்றுச்சூழலில் காணப்படுகிறது சில பொருட்கள், ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்குளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வா பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.
பொது வகையான அலர்ஜின்ஸ் (ஒவ்வா பொருட்கள்)
1. மிருகங்களின் (உடலின் மேல்) உள்ள பொடுகு (தோலில், முடியில் மற்றும் இறகுகளிலிருந்து வருபவை)நோயின் அடையாள அறிகுறிகள்
2. தூசி மற்றும் தூசியில் உள்ள சிறு பூச்சி (வீடுகளில் இருக்கும் தூசியில் காணப்படுபவை)
3. கரப்பான்பூச்சி
4. மரங்கள் மற்றும் புல்களிலிந்து வரும் மகரந்தத்தூள்
5. மேல் பூசு பொருட்கள் - பெயின்ட், டிச்டம்பர் போன்றவை
6. சிகரட் புகை
7. காற்றில் காணப்படும் மாசுப்பொருட்கள்
8. குளிர்ந்த காற்று அல்லது தட்பவெப்பநிலை மாற்றம்
9. வண்ணப்பூச்சுப் பொருள் மற்றும் சமைக்கும் பொழுது வரும் வாசனை
10. நருமண மூட்டப்பட்ட பொருட்கள்
11. கடுமையான மன உணர்வுகளை வெளிப்படுத்துதல் ( அழுதல் அல்லது சிரித்தல்)
12. ஆஸ்பரின் மற்றம் பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்துகள்
13. உணவில் சல்பைட்ஸ் போன்ற பொருட்கள் (உலர்ந்த பழவகைகளில் அல்லது மதுபான வகைகள் ( திராட்சை மது)
14. வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஆஸ்த்துமாவின் அறிகுறிகளை, பாதிப்புகளை அதிகப்படுத்தி, மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.
15. இராசாயனப் பொருட்கள் மற்றும் தூசிப் பொருட்கள்.
16. நோய்தொற்றுதல்
17. குடும்ப பின்னணி
18. குழந்தைகள் புகையிலையில் இருந்து வரும் புகையை சுவாசிக்க நேரிடும் போது, ஆஸ்துமா வருகிறது.
19. ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலையிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில் ஆஸ்துமா வருகிறது.
19. உடற்பருமனாகுதல், பிற சுகாதாரக் கேடுகள் ஆஸ்துமா மற்றும் வியாதியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம்.
மூச்சுத்தினறல் - திடீரென சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற பாதிப்புக்குள்ளாகுதல், இது அடிக்கடி ஏற்படுதல்
இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல்
குளிர்ச்சியான பகுதிக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது நிலைமை மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். பின்னர் தானாகவே மறைந்துவிடும்
மருந்து உட்கொள்ளும் போது மூடிய சுவாசக்குழாய்கள் திறந்து சுகமாகுதல்
இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல்
சாதாரணமாக வேலைகள் செய்யும்போது மூச்சு இறைப்பினால் உடல்நிலை மோசமாகுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
பரிசோதனைகள்
எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (பி.எப்.டி.) போன்ற பரிசோதனைகள் மூலம் ஆஸ்துமாவைக் கண்டறியலாம்.
காய்ச்சலை அளப்பதற்கு தர்மாமீட்டர் உள்ளது போல், ஆஸ்துமாவிற்கும் பீக்ப்ளே மீட்டர் என்னும் ஒரு கருவி உள்ளது. இதனைப் பயன்படுத்தி ஒரு நுரையீரல் எவ்வளவு சீராக காற்றை வெளியே விடுகிறது என்பதை அளவெடுக்கலாம்.
சிகிச்சை முறை
நல்ல வீசிங்கில் இரவில் சிரமப்பட்டிருந்தால் கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை
உதிர்த்து போட்டு கசாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நெஞ்சில் இரவில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி உடனடி சுவாசப்
புத்துணர்ச்சி கிடைக்கும். ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக இந்த கலவை கசாயத்தைக் காலை பானமாக குடித்துவர இரைப்பு கண்டிப்பாய்க் கட்டுப்படும். கூடவே தும்மல் இருந்தால் முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக்
கொள்ளலாம்.
இரவில் வீசிங்கில் சிரமப்பட்டவர்க்கு காலை உணவு சாப்பிடப் பிடிப்பதில்லை. பசியும் இருப்பதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகு ரச சாதம், இட்டிலி என ஏதொவொன்றை சாப்பிடுவது நல்லது. ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல், அரை வயிற்றிற்கு
சாப்பிடுவதும் வேண்டும். இடையில் தேநீர் சப்பிடுவதும் நல்லது.
மதிய உணவில் நீர்சத்துள்ள சுரை,புடலை, சவ்சவ் இவற்றைத் தவிர்க்கலாம். மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை காய்கறிகள் சேர்த்து சாப்பிட
வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், சீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்க வைக்கும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். வாயு உண்டாக்கும், செரிக்க நேரமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது
தவறல்ல. தயிரை தவிர்க்கலாம். சில வகை காய்களுக்கு சிலருக்கு அலர்ஜி இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வெண்டும். அதே
சமயத்தில் தன் நாவிற்கு பிடிக்காததை எல்லாம், “அய்யோ எனக்கு பவக்கா
அலர்ஜி! வெண்டக்கா ஒத்துக்காது” என நடிக்கத் துவங்கினால் இழப்பு கூடும்; இழுப்பும் கூடிடும்.
மாலையில் தேநீரோ/ சுக்குக் கசாயமோ எடுப்பது இரவு சிரமத்தை
பெருவாரியாகக் குறைக்கும். இரவு உணவினை முடிந்தவரை ஏழரை மணிக்கு முன்பதாக எடுத்துப் பழகிக் கொள்வது நல்லது. கோதுமைரவை கஞ்சி, இட்டிலி நல்லது. பரோட்டா, பிரியாணி என படுக்கைக்குப் போகும் முன் புகுந்து
உணவில் விளையாடுவது நல்லதல்ல. படுக்கைக்கு போகும் போது
காலிவயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும்.
பல ஆஸ்துமா நோயினருக்கு வாழைப்பழம் குறித்து தேவையற்ற அச்சம்
உள்ளது. நாட்டு வாழைப்பழம் (தென் மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது), மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.மலத்தையும்
இளக்க அது உதவிடும். ஆற்றலையும் தரும். மோரிஸ் அல்லது தற்போது சந்தையில் கிடைக்கும் ஹ்ய்பிரிட் மஞ்சள் வாழை கடைசிச் சாய்ஸாக இருக்கலாம். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை பழங்களை மருந்து எடுத்துவரும் காலத்தில் கண்டிப்பாக 6-7 மாதம் முற்றிலும் தவிர்ப்பது வேண்டும். பகல் பொழுதில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகள் சிறிது மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
சிறந்த உணவுத் தேர்வுடன், சரியான சித்த மருத்துவம், மூச்சுப்பயிற்சி எனும் பிராணாயாமம் இருந்தால் ஆஸ்துமாவைக் கண்டு பயம் கொள்ளத் தேவையே இல்லை.
இனிப்பு பண்டங்கள் ஆஸ்துமாவிற்கு நல்லதல்ல. ரொம்பா ஆசைப்பட்டால்

பகல் வேளையில் கொஞ்சமாய் சுவைக்கலாம்.அதுவும் குளிர் காலத்தில் தேவையில்லை.
பெரியவர்கள் மதிய உணவிற்குப் பின்னர் 2 வெற்றிலை சவைப்பதும் ஆஸ்துமாவிற்கு நல்லது தான். வெற்றிலையும் மிளகும் ஆஸ்துமா நோயில் பயனளிப்பதை நம்ம ஊர் சித்தர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு ஆய்வாளர்களுமே சொல்லியுள்ளனர். வெற்றிலையுடன் புகையிலையை மட்டும் மறந்தும் சேர்த்துவிட வேண்டாம். புற்று நோய் வந்துவிடும்.
சிவப்பரிசி அவல், புழுங்கல் அரிசி கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக் கீரை பொரியல், மணத்தக்காளி வற்றல், இலவங்கப்பட்டைத் தேநீர், இவையெல்லாம் ஆஸ்துமாகாரர் மெனு கார்டில் அவசியம் இடம் பெற வேண்டும்.
Posted in: தெரிந்து கொள்ளுங்கள் உடல் உறுப்புகள்
0 comments:
Post a Comment