இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

சீல் என்பது என்ன


உடலில் எங்காவது காயம் ஏற்படும் போது சரியாக கவனிக்கவில்லை என்றால் சில நாட்களிலேயே சீழ் பிடிக்க ஆரம்பித்து விடும். சரி இந்த சீழ் என்பது என்ன… தெரியுமா? அநேகமாக உங்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் தசை நார்கள் கிழிந்து வடிந்தோடிய ரத்தம் கெட்டுப்போய் இருக்கும் என நினைப்பீர்கள். ஒரளவுக்கு நீங்கள் நினைப்பது சரி… அதாவது கெட்டுபோன ரத்தம் தான் அது, ஆனால் முழுமையான காரணம் வேறு. உடலில் காயம் ஏற்படும் போது அதன் வழியாக கிருமிகள் உள் நுழைகிறது, கிருமிகளை எதிர்க்கவே நம் உடலில் காவலர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தான் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், இந்த வெள்ளை அணுக்களின் கடமையே நோய் பரப்பும் கிருமிகளுடன் சண்டை இடுவது தான். காயத்தின் காரணமாக உட்புகும் கிருமிகளை, வெள்ளை அணுக்கள் எதிர்த்து சண்டையிடுகின்றன, சண்டையில் உயிர் நீத்த போராளி வெள்ளை அணுக்கள் தான் இந்த சீழ். உடலுக்கு தேவை இல்லாத கழிவு என்பதால் உடலை விட்டு அது தானாக வெளியேறுகிறது.

மேற்கொண்டு ரத்தம் பற்றிய சில தகவல்கள்:

ரத்தம் செயற்கை முறையில் தயாரிக்க முடியாத ஒன்று, இது எலும்புகளின் ஊடே உள்ள மஜ்ஜையிலிருந்து உருவாகிறது.

வில்லியம் ஹார்வி என்பவர் தான் முதன் முதலில் ரத்தம் உடலை சுற்றி வருகிறது என்ற தகவலை வெளியிட்டார்.

ரத்தத்துடன் சோடியம் சிட்ரேட் என்ற வேதிப் பொருளை சேர்க்கும் போது ரத்தம் திடநிலைக்கு மாறுவதை தவிர்க்கலாம், இந்த ஆய்வே ரத்தத்தை சேமித்து வைக்கும் ரத்தவங்கி உருவாகக் காரணமானது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites