இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

உடல் பருமன் என்றால் என்ன?

File:Obesity-waist circumference.PNGஉடல் பருமன் என்றால் என்ன?
உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறிக்கும்.

நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் செய்யும் வேலை இந்த இரண்டுக்கும் இடையேயான வரவு - செலவு கணக்கில் ஏற்படும் சமமின்மையே உடல் எடை அதிகரிக்க காரணம்.  நம் உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரித்திறன் அதிகமாக இருந்து,  நமது உடல் செலவழிக்கும் கலோரித் திறன் குறைவாக இருந்தால் காலப்போக்கில் படிப்படியாக உடல் பருமனாகிறது.


obesity_chart

உணவு கிடைக்காத போது சமளிப்பதற்காக அதிகமாக உணவு கிடைக்கும் போது அதை  கொழுப்பாக மாற்றி உடல் டெபாசிட் செய்து கொள்ளும். ஆதி மனிதனுக்கு அவசிய தேவையாக இருந்த இந்த தந்திரம் இன்று நமக்கு ஆபத்தாகி விட்டது. இப்போது உடலின் தேவைக்கு சற்று அதிகமாக உணவை உட்கொண்டால் கூட அது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

உடல் பருமனை அளவிடுவது எப்படி?
சராசரி அளவைவிட பெரிதாக இருப்போரை பருமனாக இருப்பதாக குறிப்பிடுகிறோம். உடல் பருமனை அளவிட உடல் எடை குறியீட்டு எண் (Body Mass Index) என்ற முறையைப் பயன்படுத்துகின்றனர். இது ஒருவரது உயரம் மற்றும் எடையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த அளவை சுருக்கமாக பி.எம்.ஐ எனக் குறிப்பிடுகிறோம்.

பி.எம்.ஐ 18.5-க்கு கீழ் சென்றால் அவர் குறைந்த எடை உடையவர். அதுவே 25-க்கும் அதிகமானால் அதிக எடை என்கின்றனர். 30-க்கும் மேல் என்றால் பருமன். 40-க்கும் மேல் என்றால் ஐயோ! குண்டு பூசணிக்காய் தான், இந்தியர்களை   பொருத்தவரை பி.எம்.ஐ 23-க்கு அதிகமாக இருத்தாலே அதிக எடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு தொப்பைதான் பெரிய எதிரி.


Childhood obesity

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி உலகில் 100 கோடி பேர் அளவுக்கு அதிகமான எடையுடன் உள்ளனர். 30 கோடி பேர் உடல் பருமனால் பதிக்கப்பட்டுள்ளனர். அதிக எடையும் உடல் பருமனும் ஏராளமான நோய்களைக் கொண்டு வருகின்றன. சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மூட்டு நோய்கள், சிலவகை புற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

உடல் பருமன் ஏன்?
சக்கரை, கொழுப்பு, உப்பு போன்றவற்றை அதிகம் கொண்ட அதிக கலோரி சத்தும், குறைவான ஊட்டச்சத்தும் கொண்ட உணவு வகைகள் தான் இன்றைய உடல் பருமன் சிக்கலுக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
துரித உணவுகள், நொறுக்குத் தீனி வகைகள், மென்பானங்கள் ஆகியவைதான் இன்றைய இளம் தலைமுறை உடல் பருமனுடன் இருப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
உலகின் மொத்த இறப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு,  அதாவது 1 கோடி 66 லட்சம் இறப்புகளுக்கு இதயம் தொடர்பான நோய்களே காரணமாகின்றன. இந்த ஆபத்துக்கு காரணமாக இருப்பது முறையற்ற உணவு பழக்கம்தான்.
உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுப்பழக்கம் ஒருபுறம், உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அதிக நேரத்தைச் செலவழிப்பது மற்றொருபுறம். இந்த இரண்டும் சேர்ந்து உடல் பருமனுக்கு வழி செய்கிறது.

obesity_illustration
Obesity & Health Problem 
அமெரிக்காவில் 65 சதவீதத்தினர் அதிக எடையுடன் காணப்படுகின்றனர். இதற்கான மருத்துவச் செலவுகளுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.4,600 கோடி செலவழிக்கப்படுகிறது. நாமும் அந்த ஆபத்தான நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.
உணவில் இரண்டு தன்மைகள் இருக்கின்றன. ஒன்று ருசி. இன்னொன்று சத்துக்கள். ஆனால் நாகரிக உலகில் ருசி எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டதால் சத்துக்கள் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.
எடை கூடுவது எப்படி: 
ஒரே நாளில் எடை கூடி விடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகிறது. தொடக்கத்தில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை.  ஒரளவுக்கு மேல் பிரச்சனையான பிறகு தான், "ஐயோ" என்று அலறுகிறார்கள். உடல் நலபாதிப்பு அல்லது உடல் அழகு கெடும்போது தான் எல்லோரும் விழிக்கிறார்கள். அப்போதும் கண்டுகொள்ளாதவர்களும் உண்டு.
உடல் எடை கூடுவதால் அழகு மட்டும் கெடுவதில்ல. பல்வேறு நோய்களுக்கும் அது காரணமாகிறது.
செக்ஸில் நாட்டம் குறையும்:  
உடல் எடை கூடுவதால் தாம்பத்திய உறவுக்குப் பங்கம் ஏற்பட்டு குடும்ப உறவுகள் பதிக்கப்படும் அபாயம் உள்ளது. உடல் எடை, அளவுக்கு அதிகமாகும் போது வழக்கமான செக்ஸில் ஈடுபட முடியாது. ஆர்வம் இருக்கும், ஆனால் உறவில் ஈடுபடும்போது உடல் ஒத்துழைக்காது. இதனால் துன்பமே மிஞ்சும்.
உடல் எடை அதிகமான பின் அதைக் குறைக்க கஷ்டப்படுவதை விட, எடை கூடிவிடாமல் உடல் எடையை பராமரிப்பதே சிறந்தது.
உடல் நலத்துக்கு டாக்டர்களின் ஆலோசனை கேட்பது போல் எந்த உணவை எவ்வளவு சாப்பிடலாம் என்று உணவு ஆலோசகரிடம் (Dietician) கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் ஆலோசனைப்படி சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.  

உடல் பருமன் சுட்டு (Body Mass Index)

உடல் பருமன் சுட்டு எண் (Body Mass Index) என்பது ஒருவரது எடை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய உதவும் ஒரு உத்தேச கணக்கு முறை. ஒருவரது உயரத்தையும் அவரது எடையையும் கொண்டு அவரது உடல் பருமன் சரியான அளவில் உள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறியலாம். அதிக எடை என்பது அதிகப்படியான கொழுப்பு சத்தினால் உண்டாவது. இந்த உடல் பருமன் சுட்டு மூலம் ஒருவரது உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை நேரடியாக கணக்கிட முடியாது. இருப்பினும் அவரது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் சுட்டு கணக்கீட்டின் மூலம் நீங்களும் அறிந்துகொள்ளலாம்.
Find your BMI

சுட்டு எண்உடலமைப்புஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள்
<18.5குறைவான எடைநடுநிலை
18.5-24.9ஆரோக்கியமான எடைகுறைவு
25-29.9அதிக எடைஅதிகம்
30-34.9மிகவும் அதிக எடைமிகவும் அதிகம்
>35மிக மிக அதிகப்படியான எடைமிக மிக அதிகம்
உடலின் எடைக்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு, விடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.

எடை (கிலோவில்)
சுட்டு எண் =------------------------------ X 10000

(உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.)
உடல் பருமன் சுட்டு எண்ணைக் கொண்டு உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கும் வரைபடம் இது.


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites