இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

முட்டு வலி

http://rawae.com/wp-content/uploads/2010/07/arthritis_.jpg

தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால் தாங்கலாகத் தான் நடக்க வேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப்பிரச்சினை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பாம்ஸ் (balm) மற்றும் தைலம், பாப்பிங் பில்ஸ் ஆகியவை உபயோகிக்கும்போது மட்டும் வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறீர்களா? அனேகமாக நீங்கள் ‘ஆர்திரிடிஸ்’ மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

பருவக் கால மாற்றங்கள் நம் உடலில் சில குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்துவிடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால்தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.

ஆர்திரிடிஸ் என்றால் என்ன?

அறிவியலின்படி ‘ஆர்திரிடிஸ்’ என்பது (ஆர்த் : இணைப்புகள் ஐடிஸ் : வீக்கம்) முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கமாகும். முழங்கால் அழற்சி மூலம் வலி, முழங்கால் மடக்க முடியாமை மற்றும் வீக்கம் ஆகியவை முழங்கால் மூட்டில் உண்டாகிறது.

http://media.summitmedicalgroup.com/media/db/relayhealth-images/arthrito.jpg
ஆர்திரிடிஸ் வகைகள்
இன்றைய நிலையில் 100_க்கும் அதிகமான ‘ஆர்திரிடிஸ்’ நோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக ‘ஆர்திரிடிஸ்’ இரண்டு வகையாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.

1. ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் :


http://0.tqn.com/f/p/440/graphics/images/en/17128.jpg
உடலில் இரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள், நீண்ட நேரம் உடல் செல்களுக்கும் தீங்கிழைக்கும் மற்ற பொருள்களுக்குமிடையேயான வேறுபாட்டை அறிவதில்லை. இதனால் அவை உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. முழங்கால் மூட்டிலுள்ள சவ்வு இதனால் வீக்கமடைந்து விறைப்பு தன்மை அடைந்து சிவப்பாக மாறும் இவற்றுடன் மூட்டு வலியும் ஏற்படுகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்து விடுகின்றன. இந்நேரத்தில் இந்நோய் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Rheumatoid arthritis

2. ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் :
இது பொதுவாக மற்றொரு வகை ஆர்திரிடிஸ் நோயாகும். இந்நோய் மேலும் வளரக்கூடியது அல்ல. உடல் எடை அதிகமாகி முழங்கால் மூலமாக அதிக எடையை தாங்கும்போது இந்நோய் முக்கியமாக வருகிறது. நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கிவிடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது. சாதாணமாக மக்கள் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயினால் பாதிக்கப்படுவதால் மூட்டு வலி ஏற்பட்டு, அதிகமாக அசைக்க முடியாத நிலை ஏற்படும். இந்த ஆர்திரிடிஸ் நோய், ரியூமேட்டாய்டு ஆர்திரிடிஸ் போன்று உடலின் உட்புற பாகங்களை பாதிப்பதில்லை. மூட்டுகளை மட்டுமே பாதிக்கிறது.



http://palscience.com/wp-content/uploads/2010/09/osteoarthritis.jpg
மூட்டு வலி : காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம்.

  • ஆர்த்ரைடிஸ் (மூட்டுவலி) ருமாடாய்ட், ஆஸ்டியே ஆர்த்ரைடிஸ் மற்றும் கீல்வாதம் (கெளட்) அல்லது லூபாஸ் போன்ற இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள்.
  • கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது (அதிக நேரம் முட்டியிடுவதால், அதிகமாக மூட்டுகளை பயன்படுத்தும் போது உதாரணம் நடப்பது ஓடுவது மற்றும் காயங்கள் ஏற்படுவது)
  • டெண்டிரைடிஸ் (தசைநார் பாதித்தல்)- முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும், மாடிப்படி ஏறி இறங்கும்போது மற்றும் சாயும்போது வலியின் தன்மை அதிகரிக்கும். ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும்.
  • பேக்கர்ஸ் சிஸ்ட் - கால்முட்டியின் பின்புறத்தில் நீர்நிறைந்த பை போன்று வீக்கம் காணுப்படுதல். இந்த பை போன்ற சிஸ்ட் உடையும்போது வலி ஏற்பட்டு இந்த வலி முழுங்காலுக்கு கீழ் பரவும்.
  • கார்டிலேஜ் என்னும் எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள் வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்.
  • எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிதல் - இதனால் வலி மற்றும் முட்டியை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
  • சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறுசிறு காயங்கள்.
  • முட்டியின் சிப்பி இடமாற்றம் அடைவது.
  • மூட்டுகளில் நோய் தொற்றுவது.
  • மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்.
  • இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். உதாரணம் ஈலியோடிபியல் சின்ட்ரோம் - அதாவது இடுப்பிலிருந்து மூட்டி பகுதிக்கு செல்லும் கயிறுபோன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்.
  • அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.
  • குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும் சாதாரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.
  • வழக்கத்திற்கு மாறாக அதிக உடல் எடை அதிகரிப்பு.
  • சமீபத்திய மோசமான உடல் பாதிப்பு மற்றும் நீண்ட நாள் நோய் வாய்பட்டிருத்தல்.
  • ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் இரத்தம் உறைந்து விடுதல்.
அறிகுறிகள் : இவ்விரு மூட்டு நோய்களையும் சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும்போது அதிக வலியுடன் விறைப்பு தன்மை உடலிலிருந்தால் அதை ரியூ மேட்டாய்டு நோய் அறிகுறி என அறியலாம். வயதானவர்க இதனால் அதிகம் இயங்க முடியாது. குளிர் காலங்களில். உடற்பயிற்சி மற்றும் நடக்கும்போது அதிக வலி ஏற்பட்டால் அது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோய் அறிகுறியாகும்.

சோதனைகள்: இரத்த சோதனைகள் மற்றும் எக்ஸ்-ரே மூலம் இந்த நோய் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.


http://www.disability-claims.net/images/arthritis.jpg

வலியைக் குறைக்க உதவும் வழிகள்:

  • வலியை அதிகப்படுத்தும் செயல்களை (உதாரணம் -பழுதூக்குதல்) தவிர்த்து ஓய்ந்திருத்தல்.
  • வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம், முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.
  • கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீ’க்கங்களை குறைக்கலாம்.
  • ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தை செலுத்தலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்க உதவியாய்யிருக்கும். இவ்வகை பாண்டேஜ்களை மருந்துக் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.
  • மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்.
  • சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.
  • சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, மூங், பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
  • தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30_லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம்.
  • தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.
  • ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.
  • இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தை குறைக்கலாம்.
  • 5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்வதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
  • போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்படவேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites