எம்.ஆர்.ஐ ஸ்கானை பற்றி பரவலாக மக்கள் மத்தியில் இருக்கும் சில சந்தேகங்களையும்கேள்வி பதில் வடிவத்தில் எழுத முயற்சிக்கிறேன்.
எம்.ஆர்.ஐ ஸ்கான் என்றால் என்ன?
எம்.ஆர்.ஐ (MRI) என்பது மாக்னேடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) என்கிறசொற்றொடரின் சுருக்கம்.
“எம்.ஆர்.ஐ ஸ்கான்” தமிழாக்கம் என்ன என்று கேட்டதற்கு நண்பர்கள் மருத்துவர் புருனோ,வானம்பாடி, TBCD ஆகியோர் கொடுத்த பதில்கள்: காந்த மீளதிர்வு படம் / படமாக்கல்; காந்தஅதிர்வு சோதனை/பரிசோதனை.
எம்.ஆர்.ஐ ஸ்கான் என்பது எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கான் (CT scan), அல்ட்ராசவுண்ட் ஸ்கான்(Ultrasound scan), நியூக்ளியர் ஸ்கான் (Nuclear scan) போன்ற மற்ற உடல் அங்கங்களை படம்பிடித்துக்காட்டும் ஸ்கான் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
எம்.ஆர்.ஐ ஸ்கானின் முக்கிய அங்கம் ஒரு பெரிய காந்தம் (magnet) ஆகும். இது நம் குழந்தைகள்விளையாடும் நிரந்தர காந்தத்தன்மை வாய்ந்த உலோக காந்தமாகவும் (permanent magnet)இருக்கலாம், அல்லது மின்சக்தியினால் செயற்கையாக காந்தத்தன்மை பெரும் உலோகத்தால்ஆன அல்லது உலோகக்கலவையிலான (alloy) காந்தமாகவும் இருக்கலாம் (superconducting magnet, இதற்கு தூய தமிழ் பெயர் மீ கடத்திக்காந்தம்). இந்த காந்தத்திற்கு நம் விளையாட்டுக்குஉபயோகிக்கும் காந்தத்தைவிடவும், பூமியில் இயற்கையாக உள்ள காந்தப்புலனைவிட (Earth’s natural magnetic field) பல ஆயிரம் மடங்கு சக்தி அதிகம். காந்தப்புலனின் சக்தி / அளவு டெஸ்லா(Tesla = T) கணக்கில் குறிக்கப்படும். பூமியில் இயற்கையாக உள்ள கந்தப்புலனின் அளவு 0.00003டெஸ்லா. மருத்துவத்தில் பயன்படும் மிகச்சிறிய எம்.ஆர்.ஐ ஸ்கான் இயந்திரங்களின்காந்தப்புலன் அளவு 0.2 மற்றும் 0.3 Tesla, அதிகபடியான அளவு 3 Tesla. அதாவது இயற்கைகாந்தப்புலனைவிட சுமார் பத்தாயிரம் மடங்கிலிருந்து ஒரு லட்சம் மடங்கு அதிகம்சக்திவாய்ந்த காந்தங்களை உபயோகிக்கிறோம்.
இந்த பெரிய காந்தம் ஒரு உளுந்துவடை போன்று நடுவில் ஓட்டை உள்ள உருவம் கொண்டவட்டமான இயந்திரத்தினுள் பொருந்தியிருக்கும் (அதன் பெயர் gantry). இந்த வட்டஇயந்திரத்தினுள் ஒருவரை படுக்க வைத்து இயந்திரத்தை இயக்கினால், அவருடைய உடல்அந்த இயந்திரத்திலிருக்கும் பெரிய காந்தத்தின் காந்தபுலணிற்கு (magnetic field) உட்படும்.அப்படி சக்திவாய்ந்த காந்தபுலணிற்கு உட்பட்டிருக்கும் உடலுக்கு வெளியில் இருந்து வானொலிஅதிர்வெண்கள் (radio frequency waves / RF waves) மூலம் அதிர்வு ஏற்படுத்தப்படும் (excitation).இந்த அதிர்விலிருந்து மெதுவாக உடல் மறுபடியும் தளர்ந்து இயந்திரத்தின் காந்தத்தன்மையைஅடையும் (relaxation to original magnetic field). அதிர்வினால் ஏற்பட்ட கூடுதல் சக்தி (energy)இந்தத் தளர்ச்சி ஏற்படும் பொழுது உடலிலிருந்து வானொலி அதிர்வெண்கள் மூலம் வெளிபடும்.வெளிபடும் வானொலி அதிர்வேன்களை (emitted RF waves) வைத்து உடலை படம் பிடிப்பதுதான்எம்.ஆர்.ஐயின் ரகசியம். பலவித அடர்த்திகளில் இருக்கும் பாகங்களில் இருந்து வெளிவரும்வானொலி அதிர்வலைகள் வித்தியாசமாக இருப்பதை வைத்து இந்தப் படங்கள் கிடைக்கின்றன.
எம்.ஆர்.ஐ ஸ்கான் முறையில் எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கான் (CT scan) போன்ற ஸ்கான்முறைகளில் உபயோகப்படுத்தப்படும் உடலுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய ஊடுகதிர்கள்(ionizing radiation, ie, X-rays) கிடையாது. எம்.ஆர்.ஐ. ஸ்கானில் இருக்கும் காந்தத்தன்மையால்நம் உடலுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது. காந்தத்திலிருந்து வெளியே எடுத்ததும்,ஸ்கான் செய்யப்பட்டவரின் உடல் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கான் எப்படி உபயோகிக்கப்படுகிறது?
இன்றைய நிலையில், எம்.ஆர்.ஐ ஸ்கான் உச்சி முதல் பாதம் வரை எல்லா மனிதஉறுப்புகளையும் துல்லியமாகப் படம் பிடிக்கும் வல்லமையுடன் இருக்கிறது. பலமருத்துவத்துறை நிபுணர்களால் எம்.ஆர்.ஐ ஸ்கான் இல்லாமல் சரியான சிகிச்சை கொடுக்கவேமுடியாது என்கிற நிலைதான் உள்ளது.
ஆங்கிலத்தில் soft tissues என்று சொல்லப்படும் உடலின் மென் உறுப்புகளையும் (உதாரணமாகமூளை, முதுகுத்தண்டு, கண்கள், இருதயம், ஈரல், கணையம்) மற்றும் மூட்டுகளையும் (joints), தசைகளையும் (muscles) துல்லியமாகப் படம் பிடிக்க எம்.ஆர்.ஐ. தான் சிறந்த ஸ்கான் முறை.
கர்பிணிப் பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கான் (Ultrasound scan) செய்து குழந்தையின்வளர்ச்சியையும் உறுப்புக்களையும் படம் பிடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.கருவிலிருக்கும் குழந்தைக்கு உறுப்புகளில் கோளாறு இருப்பின் அதைஅல்ட்ராசவுண்ட் ஸ்கானைவிடத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்ட எம்.ஆர்.ஐ ஸ்கான்உதவும்.
அண்மையில் சில வருடங்களாகப் பிரபலமாயிருப்பது மூளையின் செயல்பாட்டை ஸ்கான்செய்யக் கூடிய ஃபன்க்ஷனல் எம்.ஆர்.ஐ ஸ்கான் (functional MRI, also known as fMRI).
எம்.ஆர்.ஐ. ஸ்கான் பெரியதா / நல்லதா அல்லது சி.டி. ஸ்கான் (CT scan) பெரியதா /நல்லதா?
இது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லை, மருத்துவத்துறையிலே உள்ள பலருக்கும் உள்ளசந்தேகம். பரவலாக சி.டி. ஸ்காணைவிட எம்.ஆர்.ஐ ஸ்கானுக்கு விலை அதிகம்,அதானாலையே இந்தக் கேள்வி மக்களின் மத்தியில் பரவி விட்டதோ என்று எனக்கொருசந்தேகம்.
முதல் கேள்விக்கான பதிலில் நான் குறிப்பிட்டிருந்தேன், இவ்விரண்டு ஸ்கான்களும்வெவ்வேறு முறைகளை உபயோகித்து உடலைப் படம் பிடிக்கின்றன என்று.
ஒவ்வொரு ஸ்கான் முறைக்கும் சில பிரத்தியேகமான உபயோகங்கள் உள்ளன. உதாரணமாகநுரையீரலை படம் பிடிக்க சி.டி.ஸ்கான் தான் உசிதம், மூட்டுகளினுள்ளே உள்ள மென்தசைகளை
(ligaments, tendons) படம் பிடிக்க எம்.ஆர்.ஐ தான் உசிதம். சில/பல இடங்களில் இரண்டில் எதைஉபயோகித்தாலும் தப்பில்லை (உதாரணம்: மூளை). பல நேரங்களில் எந்த ஸ்கான் முறையைஉபயோகிக்கலாம் என்பதை அந்த மருத்துவமனையிலோ அந்த ஊரிலோ எது வசதியாகஉள்ளது என்பதைப் பொறுத்தே மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள்.
(ligaments, tendons) படம் பிடிக்க எம்.ஆர்.ஐ தான் உசிதம். சில/பல இடங்களில் இரண்டில் எதைஉபயோகித்தாலும் தப்பில்லை (உதாரணம்: மூளை). பல நேரங்களில் எந்த ஸ்கான் முறையைஉபயோகிக்கலாம் என்பதை அந்த மருத்துவமனையிலோ அந்த ஊரிலோ எது வசதியாகஉள்ளது என்பதைப் பொறுத்தே மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள்.
முதல் பாகத்தின் பின்னூட்டங்களில் நண்பர்கள் கொத்தனாரும், ஆயில்யனும், “படம் வரைந்துபாகம் குறித்தால் இன்னும் தெளிவு கிடைக்கும்.” என்று கேட்டிருந்தார்கள். கீழே மூன்றுபடங்களை இணைத்துள்ளேன். நான் வரையவில்லை, தமிழில் பெயர்கள் மட்டும் எழுதினேன்.
மீகடத்திக்காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களில்தான் உளுந்து வடை (டோன்ட் / donut) உருவத்தில்கான்றியும் (gantry) பீப்பாய் போன்ற நீளமான துவாரமும் இருக்கும் (மேலே முதல் மற்றும்மூன்றாவது படங்களில் உள்ளது போல்). இருட்டான சிறிய குகை போல் உள்ள இந்த இடத்தில்படுக்கவைத்து ஸ்கான் எடுக்கும் பொழுது சிலருக்கு தனிமை மருட்சி (claustrophobia)ஏற்படுகிறது.
பொதுவாக நிரந்தர காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களில் கான்றி (gantry) அவ்வளவு குறுகலாகஇல்லாமல் விசாலமாக இருக்கும். சில இயந்திரங்களில் (மேலே இரண்டாவது படத்தில் உள்ளதுபோல்) மூன்று பக்கங்கள் திறந்து இருக்கும். இவைகளுக்கு திறந்தவெளி எம்.ஆர்.ஐ (Open MRI)என்றும் பெயர் உண்டு.
நிரந்தர காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களின் காந்த சக்தி 0.5 டெஸ்லாவிற்கும் கம்மியாக இருக்கும்.மீகடத்திக்காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களின் காந்த சக்தி 0.5 டெஸ்லாவிற்கும் அதிகமாகஇருக்கும். காந்த சக்தியை வைத்து பார்த்தால் முறையே 0.2, 0.3, 0.4, 0.5, 1.5 மற்றும் 3 டெஸ்லாஅளவில் ஸ்கான் இயந்திரங்கள் உண்டு. இதில் பொது மக்கள் முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டியது இரண்டு விஷயங்கள்:
- காந்த சக்தி அதிகம் உள்ள ஸ்கான் இயந்திரத்தில் எடுக்கும் படங்கள் சிறப்பாகவும்துல்லியமாகவும் இருக்கும்.
- காந்த சக்தி அதிகம் உள்ள ஸ்கான் இயந்திரத்தில் பரிசோதனையை சீக்கிரமாகமுடித்துவிடலாம்.
மக்களுக்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இன்னொன்றும் உண்டு. காந்தசக்தியை, அதுவும் மிகவும் சக்தி வாய்ந்த காந்தங்களைக் கொண்டு ஸ்கான் செய்வதால், ஸ்கான்செய்யும் அறைக்குள் காந்த சக்திக்கு உட்படக்கூடிய உலோகத்தினால் ஆனபொருள்கள் இருக்கக்கூடாது. அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. அதேபோல் மின்னணுசாதனங்களும் (electronic items – கைக்கடிகாரம் /wristwatch, செல்பேசி/mobile phone, calculator, digital diary, laptop computer, etc) எடுத்துச் செல்லக் கூடாது. கடன் அட்டை (credit card) எடுத்துச்செல்லக் கூடாது. உலோகத்தால் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது. எல்லா ஸ்கான்மையங்களிலும் ஸ்கான் செய்வதற்கு முன் இவை எல்லாம் உங்களுக்கு சொல்லப்படும். நீங்கள்அணிந்து செல்லும் உடையை கழற்றிவிட்டு அவர்கள் தரும் அங்கியைத்தான் உடுத்திக் கொள்ளவேண்டும்.
உடலின் ஒரு பகுதிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்க சுமார் எட்டிலிருந்து இருபது நிமிடங்கள் ஆகும்.உதாரணமாக மூளையை படம் பிடிக்க 0.2 டெஸ்லா இயந்திரத்தில் குறைந்த பட்சம் 20 நிமிடம்ஆகும், 1.5 டெஸ்லா இயந்திரத்தில் சுமார் 8 நிமிடம் ஆகும். எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்து அனுபவப்பட்டவர்களுக்கு இது தெரியும்; படம் பிடித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆனாலும், அவ்வளவுநேரமும் ஒரு துளி கூட அசையாமல் படுத்திருக்க வேண்டும். சிறிது அசைந்தாலும் படம்தெளிவற்று போய்விடும் (blur or movement artifact).
தலைவலியுடன் மூளைக்கோ அல்லது முதுகு வலியுடன் முதுகுத்தண்டுக்கோ ஸ்கான் எடுக்கசெல்பவர் 20 – 25 நிமிடங்கள் அசையாமல் படுத்திருப்பது மிகவும் கஷ்டம் என்பதை நான்சொல்லவேண்டியதில்லை.
பல தருணங்களில் பரிசோதனைக்கு வந்திருப்பவரால் அசையாமல் படுக்க முடியாது.உதாரணத்திற்கு வலிப்பு (fits, seizures), பக்கவாதம் (Paralysis) உள்ளவர்கள், தலையில்அடிபட்டுள்ளவர்கள், சிறு குழந்தைகள். அப்படிப்பட்ட நேரங்களில் நோயாளிக்கு மயக்க ஊசிபோட்டு படுக்கவைத்து ஸ்கான் எடுப்பதைத்தவிர வேறு வழியில்லை.
சில சமயங்களில், ஸ்கான் செய்யப்படும் உறுப்பைப் பொறுத்து, உங்களுக்கு கான்ட்ராஸ்ட்அல்லது டை (contrast / dye) என்ற மருந்து நரம்பில் ஊசி மூலம் செலுத்தவேண்டியிருக்கலாம்.கேடோலினியும் (Gadolinium) என்கிற ரசாயனம் உள்ள இந்த மருந்தின் விலை அதிகம். உங்களுக்குகொடுக்கும் பத்து மில்லிலிட்டர் (10 ml) மருந்தின் விலை சுமார் 1800 – 2000 ரூபாய் ஆகும்.பொதுவாக இது ஸ்கான் விலையிலிருந்து அப்பாற்பட்டு கூடுதலாக வசூலிக்கப்படும்.
ஸ்கான் விலை என்று பேச்சு வந்துவிட்டதால் அதையும் பார்த்துவிடுவோம்.
ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்க சுமார் 5000 ரூபாய் செலவாகும் என்பது இதை படிப்பவர்கள்பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. பொதுவாக ஒரு உடல் அங்கத்திற்கு பரிசோதனைசெய்ய மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் ஆகும். எம்.ஆர்.ஐ ஸ்கான் விலை பொதுவாகநிர்ணயிக்கப்படுவது பரிசோதனை செய்து முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பதை வைத்து.ஒரே நபருக்கு இரண்டு அங்கங்களுக்கு ஸ்கான் செய்யவேண்டும் என்றால், நேரம் அதிகம் ஆகும்என்பதால், இரண்டு தனி பரிசோதனைக்கான விலை.
தில்லி, மும்பை, சென்னை, பெங்களுரு போன்ற பெருநகரங்களில் விலை நான்குறிப்பிட்டிருப்பதைவிட அதிகமாக இருக்கும்.
ஒருவருக்கு பரிசோதனை முடிக்க அதிக நேரம் ஆனால், ஒரு நாளுக்கு சிலரைத்தான்பரிசோதிக்க முடியும். அதனால் சீக்கிரம் படம் எடுக்கக்கூடிய, அதாவது காந்த சக்தி அதிகம் உள்ளஎம்.ஆர்.ஐ இயந்திரங்களையே என்னைப் போன்ற ரேடியாலஜிஸ்ட்கள் விரும்புவார்கள் (radiologist,தமிழாக்கம் நுண்கதிரியக்கவல்லுநர் – யாருக்கும் புரியாது).
இன்றைய நிலையில் உடலின் அனைத்து பாகங்களையும் துல்லியமாகப் படம்பிடிக்கச் சிறந்தது 1.5 டெஸ்லா இயந்திரம்தான். இதுதான் நல்ல இயந்திரம் என்றால் ஏன் எல்லாஊர்களிலும் உள்ள மருத்துவமனைகள் அல்லது ஸ்கான் மையங்களில் 1.5 டெஸ்லா இயந்திரம்இருப்பதில்லை என்று கேள்வி எழும்.
இந்த இயந்திரங்கள் எதுவுமே நம் நாட்டில் உற்பத்தியாவது இல்லை. அமேரிக்கா, ஜெர்மனி,ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. புதிதாக வாங்கினால்இவற்றின் விலை 60 லட்சத்தில் இருந்து 8 கோடி ரூபாய் வரை ஆகும். உதாரணத்திற்கு சீனாவில்தயாரிக்கப்படும் 0.2 டெஸ்லா இயந்திரத்திற்கு விலை 60 லட்சம்; அமெரிக்காவில் தயாரிக்கப்படும்3 டெஸ்லா இயந்திரத்திற்கு விலை 8 கோடி.
நான் சிறந்தது என்று கூறிய 1.5 டெஸ்லா இயந்திரத்தின் விலை சுமார் 4 – 5 கோடி ரூபாய். இதுபோக மாதாமாதம் மின்சாரம் மற்றும் பராமரிப்பு செலவும் அதிகம் (சுமார் 2 – 3 லட்சம் ரூபாய்ஆகும்). குத்துமதிப்பாக சொன்னால் ஒரு நாளைக்கு குறைந்தது பதினைந்து ஸ்கான்செய்தால்தான் முதலுக்கும், பராமரிப்பிற்கும் நஷ்டமில்லாமல் இருக்கும்.
இணைப்பு:
- காந்தத்தின் உள்ளே இருப்பதாலோ, வனொலி அதிர்வலைகளைச் செலுத்துவதாலோபக்க விளைவுகள் எதுவும் உண்டாகாது.
- இருதயத்தில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் (pacemaker) மின்னணு இயந்திரம். அதுபொருத்தியிருந்தால் எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்கக் கூடாது.
- உடைந்த எலும்புகளை உலோகத் தகடுகள் கொண்டு இணைத்திருந்தால் அந்தஉலோகத் தகடுகள் காந்த சக்திக்கு உட்படும் வகையா (ferro-magnetic alloy) அல்லதுஉட்படாத வகையா (non-magnetic alloy) என்று தெரிந்து கொண்டு முறையே ஸ்கான்செய்யக்கூடாது அல்லது செய்யலாம்.
- ரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்கி வைக்கப்படும் ஸ்டெண்ட்களும் (vascular stent)உலோகக்கலைவைகளால் ஆனவைதான் அவற்றிற்கும் மேலே கூறிய விடைபொருந்தும்.
- சமீப காலத்தில் பொருத்தப்படும் எலும்பு முறிவு சாதனங்கள் (orthopaedic prosthesis) ,ஸ்ட்டேன்டுகளில் (stents) எல்லாம் எம்.ஆர்.ஐ ஸ்கான் காந்த்ததினால் பாதிக்கப்படாதவைதான்.
Thanks : Vijay Sadasivam (Radiologist)
0 comments:
Post a Comment