இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

குளிர்பானங்கள் அருந்துவது ஒரு ஃபாஷனாகி விட்டது


இப்போது குளிர்பானங்கள் அருந்துவது ஒரு ஃபாஷனாகி விட்டதுஇரண்டு பேர் சந்தித்தால்அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும்குறிப்பாகவிருந்தினர்களை நன்குமதித்ததன் அடையாளமாக பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள்அதுவே,விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்உண்மையில் இந்தத் குளிர்பானங்கள் உடலுக்குகேடுதான் விளைவிக்கிறது.

இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் பாட்டிலில்டின்னில் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறதுகலரில்உள்ள பென்ஸாயிக் என்ற இந்த அமிலம் ஆஸ்துமாபருதோலில் வேனல் கட்டிவெடிப்புமுதலியவற்றை உண்டாக்குகிறதுகூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும்மனப்பான்மையையும் உண்டாக்குகிறது.

கலர் பானங்களைப் பதனப்படுத்துவதுடன் எலுமிச்சை பானங்கள் கருப்பு நிறமாக மாறிவிடாமல் இருக்கவும்சல்ஃபர்டையாக்ஸைடு சேர்க்கப்படுகிறதுஇது பானங்களில் உள்ளநறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறதுஇந்த சல்ஃபர்டையாக்ஸைடுஒரு நச்சுமுறிவு மருந்துதான்நலமாக உள்ள ஒருவர் தொடர்ந்து கலர் அருந்தியதும் மந்தநிலை,தெளிவற்ற பார்வைதோலில் வெடிப்புவீக்கம்சோர்வுஇதயத்தில் ஓருவித இறுக்கம்,அதிர்ச்சிதிடீர்க் கோபம்அதிர்ச்சியில் இறப்பு போன்றவை ஏற்படுகின்றனஅடிக்கடி கலர்அருந்துகிறவர்கள் தங்களுக்கு அடிக்கடி சோர்வும்விரக்தியும்வெறுப்பும் உள்ளதா என்பதைபரிசோதிக்கவும்அப்படி இருந்தால் ஆரோக்கியமான உடலில் கலர் மூலம் சேர்ந்தசல்பர்டையாக்ஸைடே காரணம்.

பானங்கள் நறுமணமாக இருக்க, காஃபைன் (Caffeine) சேர்க்கப்படுகிறதுகோலா பானங்களில்மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் காஃபைன் சேர்க்கப்படுகிறதுஇந்த அளவுநாம் தினமும்அருந்தும் காபிதேநீர் போன்றவைகளில் உள்ள அளவிற்குச் சமம்காஃபைன்உண்மையில்போதை தரும் ஒரு மருந்துதான்இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடிஊக்குவிக்கப்படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறதுகோலா கலர் பானம் ஒருமுறை சாப்பிட்டதும் வரும் புத்துணர்ச்சி நாம் ஒரு நாளில் மூன்று கப் காபி அருந்தியதற்குசமம்ஒரு நாளைக்கு இரண்டுமூன்று பாட்டில் கோலா கலர் அருந்தினால் மத்திய நரம்புமண்டலம் பலவீனம் அடையும்.



இதனால் தூக்கமின்மைநரம்புக் கோளாறுஎரிச்சல்வயிற்றுப்பொருமல்மனக்குழப்பம்இதயம்வேக வேகமாகத் துடித்து ஒரு விதப் பதட்டம் முதலியன ஏற்படுகின்றனசிறுநீர்ப் பைகள்வயிறுமுதலியவற்றில் புற்றுநோய்இரத்தக்கொதிப்புமேலும் ஆறுவிதமான புற்றுநோய்கள் அடிக்கடிகலர் அருந்துகிறவர்களுக்கு வருகிறதுஅடிக்கடி இளவயதில் கலர் அருந்தும் தம்பதிகளுக்குபிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கலர் பானங்கள் தயாரிக்கப்படுகின்றனஇந்தடார்ட்ராஜைன் என்ற கலரை நார்வேபின்லாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளனஇந்தவண்ணச் சாயம் தோலிற்கு அலர்ஜியைத் தந்துஉடலில் வீக்கம்மூக்கு ஊற்றுதல்(கடுமையான ஜலதோஷம்), கண்கள் சிவப்பாக மாறுதல் ஆகிய விளைவுகளைஏற்படுத்துகின்றன.

சிவப்பு நிற பானங்கள் அமெரிக்காகனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளனஸாஃப்ட்டிரிங்க் பானங்களின் நிறத்துக்கு சேர்க்கப்படும் இந்த சிவப்புச் சாயம் புற்றுநோய்ஒவ்வாமை,சாப்பிட்ட உணவை அல்லது தயாரித்த உணவை நஞ்சாக மாற்றிவிடுகிறது.

எனவேஅடுத்த முறை கலர் அருந்த நினைக்கும் போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு,இயற்கையான பழச்சாறுகள்இளநீர் போன்றவற்றை அருந்துங்கள்உடலுக்கு நன்மை செய்யும்பானங்கள் இவை மட்டுமே!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites