இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, October 1, 2011

ஆண் சிறுவர்களின் சிறுநீர் மூலம் முட்டை அவிக்கும் சீனா

ஆண் சிறுவர்களின் சிறுநீர் மூலம் முட்டை அவிக்கும் சீனா!(Photo In)

ஆண் சிறுவர்களின் சிறுநீர் மூலம் முட்டை அவிக்கும் சீனா!(Photo In) சிறுவர்களின் சிறுநீரில் அவிக்கப்பட்ட முட்டைகளை உலகம் பூராவும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது சீனா.
சீனாவில் வசந்த கால பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றமை வழக்கம். ஆனால் செஜிஆங் மாகாணத்தின் டொங்யாங் நகரத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக இப்பண்டிகை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது.
முட்டைகளை பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீரில் அவித்து உண்கின்றார்கள். பாடசாலைகள் தோறும் பாத்திரங்கள், வாளிகள் போன்றவற்றில் சிறுவர்களின் சிறுநீர் சேகரிக்கப்படுகின்றது. சிறுவர்களின் சிறுநீரில் அவிக்கப்படுகின்ற முட்டைகள் மிகவும் சுவையானவை என்று சீனர்கள் கூறுகின்றனர்.
10 முட்டைகளை ஒரு நாளில் சாப்பிடுகின்றபோதிலும் அவா அடங்காதாம்.
Virgin Eggs – A Chinese Delicacy Soaked in Boys’ Urine
இம்முட்டைகள் ஆரோக்கியத்துக்கும் மிகுந்த நன்மைகள் கொடுக்கும் என்கின்றனர். சீனாவின் பாரம்பரிய மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி இம்முட்டைகள் கோடை காலத்தில் உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவும். அத்துடன் இரத்த சுற்றோட்டத்தை சீராக்கும். எனவே இம்முட்டைகளை உலக மக்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க சீனா தீர்மானித்து உள்ளது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites