இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, October 22, 2011

தொல்லைதரும் பேன்கள் / Pediculosis

 



மனித உடலில் புற ஒட்டுண்ணியாக வாழ்ந்து மனிதருக்குப் பெரும் துன்பம் தருகின்ற கிருமி பேனாகும். இவை மனித குருதியை உறிஞ்சிக்குடிக்கின்றன , அத்துடன் இவற்றின் கழிவுகளால் மனித உடலில் ஒவ்வாமை ஏற்படுகின்றது ,இவற்றோடு இவை சில வகையான நோய்களைப் பரப்பும் தன்மையையும் கொண்டிருக்கிறது.





பேன்கள் மூன்று வகைப்படும்


தலைப்பேன் Pediculus humanus capitis (head louse)
உடற்பேன் அல்லது சீலைப்பேன் Pediculus humanus corporis(body louse)
நண்டுப்பேன் Pthirus pubis (pubic louse)




இவையனைத்தும் ஆதிகால மனிதனின் உரோமம் நிறைந்த உடலில் வாழ்ந்த ஒருவகைப்பேனின் வழித்தோன்றல்களாகும். இவற்றின் காலின் முடிவில் உட்புறமாக முள்போன்ற உறுப்பொன்றும், வெளிப்புறமாக கொக்கி போன்ற அமைப்பும் உள்ளது. அவற்றின் உதவியுடன் மயிரையும், தலையையும் பற்றிப்பிடித்து வாழ்கின்றன.




பேனுள்ள நபருடனான நெருங்கிய உடம்புத் தொடுகை, அவர்கள் உபயோகித்த துணிகள், படுக்கை, கூந்தல் தூரிகை முதலியவற்றை பிறர் உபயோகிப்பதன் மூலமாக பேன்கள் பரவுகின்றன.
நண்டுப்பேன்கள் துணி, படுக்கை,மலசலகூட இருக்கைகள் மூலம் பரவுகின்றது.




பேன்கள் தோலைத்துளைத்து பின் குருதியைக்க குடிக்கின்றது. கடிக்கும் இடத்தில் சொறிவதால் சிறிய காயம் உண்டாவதுடன் தோல் ஒவ்வாமை ஏற்படுவற்கான வாய்ப்பும் உண்டாகின்றது. இவற்றுடன் TYPHUS, RELAPSING FEVER கிருமிகளும் பேன்களால் காவப்படுகின்றது.




தடுப்பு முறைகள்


1. பேன் தொற்றுள்ளவர்களுடனான தொடுகைகளைத் தவிர்த்தல்
2. தற்சுகாதாரம் (உடலையும்,உடைகளையும் சுத்தமாக வைத்திருத்தல்)
3. தொற்றுள்ள துணிகளை வென் நீரில் கழுவுதல்
4. கூந்தல் தூரிகை மூலம் அகற்றல்
5.benzyl alcohol lotion 5% , Permethrin 5% (Elimite) or 1% (Nix) lotion , Lindane 1% shampoo (Kwell) , Pyrethrin/Piperonyl butoxide shampoo (RID Mousse, RID Shampoo, A-200) , Malathion (Ovide) என்பவற்றை வைத்திய ஆலோசனையுடன் பாவித்தல்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites