இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, October 26, 2011

கிரேக்க கூடை தேன் கூடு


கிரேக்க கூடை தேன் கூடு

கிரேக்க கூடை தேன்கூடு என்பது ஒரு பாரம்பரிய தொழில் நுட்பமாகும். இது வட்டார பொருட்கள் மற்றும் திறனைக் கொண்டே செய்ய கூடிய ஒன்று. ஆதலால், இது இன்றும் பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பமாகும்.
கட்டுமானம்
  • இந்த கூடை அகன்ற மேற்பகுதியையும், குறுகிய அடிபகுதியையும் உடையது.
  • மேற்பகுதி 1.25" அகலத்தையுடைய மரகட்டைகளால், தேனீ நுழைய முடியாத அளவில் நெருக்கமாக ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் மூடியினால் மூடப்பட்டிருக்கும். நீளவாட்டத்தில் ஒவ்வொரு மரக்கட்டையும் உள்நோக்கி வளைந்த அமைப்பை கொண்டிருக்கும். கட்டைகளின் நடுவில் இவ்வளைவு காணப்படும். கட்டையின் இரண்டு முடிவுகளும் தட்டையாக (2-3") இருக்க வேண்டும். இதனால் தேனீக்கள் தப்பி செல்ல வாயப்பில்லை. (படம் 1)
  • ஒவ்வொரு கட்டையில் நீளவாட்டத்தின் உட்புற நடுப்பகுதியில், தேனீ மெழுகைக் கொண்டு, சின்ன தேன்கூடுப் பகுதி  ஒட்டப்பட்டிருக்கும். இது தேனீக்களை நேரான கூடுகளை அமைக்க வழிவகுக்கும்.
  • கூடை உள்ளேயும், வெளியேயும், 2 பங்கு சாணம் மற்றும் ஒரு பங்கு களிமண் கலந்த கலவையைக் கொண்டு மொழுகப்பட்டிருக்கும். மொழுகியது காய்ந்தவுடன், கட்டைகளினால் ஆன மேல் மூடியை இட்டு, கூம்பு வடிவுடைய குல்லா போன்ற கூறையைக் கொண்டு முடப்பட்டிருக்கும். இது வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பை அளிக்கும்.
  • தேன் கூட்டின் நுழைவாயில் அடிபாகத்திலிருந்து 3" உயரத்தில் இருத்தல் வேண்டும். இதனால், தேன்கூடு விழும்பட்சத்தில், நுழைவாயில் அடைபடாது.
  • தேன்கூடு அறுவடைக்கு தயாராக காணப்படும் போது, சுமார் 1" அளவு தேன்கூடு, மேல்மூடி கட்டையோடு ஒட்டியிருக்கும் வகையில், தேன்கூட்டினை அறுவடை செய்ய வேண்டும். மீதமுள்ள தேன்கூடு பகுதி புதிய தேன்கூடு அமைய அடிப்படையாக காணப்படும்.
மூலம் : சென்டர் ஆப் சைன்ஸ் ஃபார் வில்லேஜஸ், வார்தா, மஹாராஷ்டரா.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites