இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 30, 2011

நான் இப்படித்தான்

புதுமணத் தம்பதிக்குள் எவ்வளவு அன்யோன்யம், நெருக்கம் இருக்கும்..! முதல் குழந்தை பெற்றெடுத்த பின்பும் அதே அளவு ஆசையும், ஆர்வமும் கணவனுக்கு இருக்கும். ஆனால் மனைவியின் உடல் ஒத்துழைக்க மறுக்கும். பொறுப்புகள் தடுக்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் முக்கியமான சூழல்களில் இதுவும் ஒன்று. இதுபோன்ற நேரங்களில் சில கணவன்கள் திசைமாறிக் கூட சென்றி ருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன?
* குழந்தை பெற்றெடுத்ததும் இளம் தம்பதி என்ற நிலைமாறி பெற்றோர் என்ற புது அந்தஸ்து கிடைக்கும். புதுமையான உலகமும் தம்பதிகளை சூழ்ந்து கொள்ளும். இப்போது இருவருக்குள்ளும் சிந்தனைகள் மாறத் தொடங்கும். பொறுப்பும், அக்கறையும் கூடுவது போலவே, கவலையும், பயமும் தொற்றிக் கொள்ளும். அதுவரை கணவரையே நம்பியிருந்த மனைவி, இப்போது குழந்தையே உலகமென மாறிவிடுவாள். இங்குதான் பிரச்சினை ஆரம்பம்.
* ஆண் இப்படித்தான் இருப்பான் என்று பெண்ணும், பெண் இப்படித்தான் இருப்பாள் என்று ஆணும் அறிந்து கொண்டால் பிரச்சினைகள் எழுந்தாலும் எளிதில் அடங்கி விடும். பெண்ணுக்கு அரவணைக்கும் குணம் அதிகம். கருத்து வேறுபாடு ஏற்பட்டபின் நீங்கள் ஒருபடி இறங்கி வந்தால் அவள் பத்து படி இறங்கி வரும் அளவுக்கு இரக்கமும், அரவணைக்கும் பண்பும் கொண்டவளாக இருப்பாள். ஆனால் யார் முதலில் இறங்கி வருவது என்பதுதான் பிரச்சினை பெரிதாக காரணம்.
*பெண் இயல்பாகவே பெற்றோர், கணவர், குழந்தை என்று சார்ந்து வாழ பழக்கப் பட்டவள். எனவே நேசிக்கவும், நேசிக்கப்படவும் விரும்புவாள். அவளை நீங்கள் ஏதோ ஒன்றை காரணம் காட்டி வெறுக்கும்போது அவள் நிலை அடியோடு மாறும். குழப்பத்தில் அவள் எந்த முடிவு எடுக்கவும் துணிந்து விடுவாள். தாம்பத்யம் அவசியம் என்ற நிலையிலும் தவிர்ப்பாள். இதிலும் பிரச்சினைகள் எழும்.
* திறமை வாய்ந்த வெற்றிகரமான ஆணை விரும்புவது பெண்களின் அடிப்படை குணம். உங்கள் தோற்றத்தில் மயங்கி உங்களை ஏற்றுக் கொண்டபின் தன் எதிர்பார்ப்பில் ஏமாற்றங்களை கண்டால் மனம் உடைந்து போவாள். உறவிலும் அதிக பெண்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். இதனாலும் குடும்பத்திற்குள் பிரச்சினை வரலாம். குழப்பத்தை யும், முரண்பாடுகளையும் தவிர்க்க விரும்புகிறவர்கள் பேசிப் பார்த்தாலே அனேக விஷயங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியும்.
* ஆணின் அடிப்படைப் பண்பே போராட்ட குணம் தான். பெண்களை கவர விரும்புவதும் அவர்கள் இயல்பு. எப்போதும் வெற்றியை நோக்கி விரட்டப்பட்டுக் கொண்டி ருப்பார்கள். ஒருபுறம் இயல்பும், இன்னொருபுறம் இயலாமையும் விரட்ட, போராட்டம் அவர்களின் வாழ்வில் நிரந்தரமாகி விடுகின்றன. அதனால்தான் அவர்கள் தலையை பிய்த்துக் கொண்டு, `கல்யாணம் முடிக்காமலே இருக்கலாம்’ என்று ஆலோசனை சொல்ல கிளம்பி விடுகிறார்கள். வீறாப்பால் விட்டுக்கொடுக்காததாலும் பிரச்சினைகள் நீளும்!
* குழந்தை பிறந்த பிறகு தனக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்பதுதான் பெரும்பாலான கணவர்களின் குற்றச்சாட்டு. இப்போதைய நிலையில் உலகத்தைப் பற்றிய புதிய பார்வை இருவருக்கும் வேறுவேறாக இருப்பதால், ஒருவர் மீது ஒருவர் நிறை கண்ட நிலை மாறி, குறை காண ஆரம்பிப்பார்கள். தாம்பத்யம் உள்பட பிற விஷயங்களில் இருந்த நெருக்கம் குறைய ஆரம்பிக்கலாம். கருத்து வேறுபாடுகள் எழலாம். வாழ்வில் ஒருவித சலிப்பு தோன்றும்.
* பிறந்த குழந்தை தம்பதிக்கு கூடுதல் பொறுப்புகளைத் தரும். குடும்பத்திலும், வெளியிலும் பிரச்சினைகள் ஆணின் மனதை அதிகமாக உறுத்தும். தேவைகளை நோக்கி ஓடத் தொடங்குவான். மனைவியோ பொறுப்புகளை கணவன் பகிர்ந்து கொள்வாரா? என்று எதிர்பார்ப்பாள். சம உரிமை கோரி நிற்பாள். ஏற்கனவே தன்னை முன்போல் கவனிப்பதில்லை என்ற ஆதங்கத்திலும், நிதிச்சுமையிலும் தடுமாறிக் கொண்டி ருக்கும் ஆண், எதிர்பாராத இந்த உரிமை கோரலால் குழப்பமடைவான். மோதல் ஆரம்பமாவது இங்கு தான்.
* கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதும் இருவரும் தங்கள் பலத்தைக் காட்டுவார்கள், பலவீனங்களை சுட்டிக்காட்டி குறைகூறத் தொடங்குவார்கள். அந்தரங்கங்கள் மூன்றாம் மனிதர் நுழையும் அளவுக்கு போகும். இருவரும் சுமூக முடிவுக்கு வராத நிலையில், பிரச்சினை விவாகரத்து வரை கூட செல்லலாம். தலை தூக்கும் முரண்பாடுகளைத் தவிர்க்கவும், காலம் முழுவதும் கணவன்-மனைவி சேர்ந்து வாழவும் சில குணநலன் களை புரிந்து நடக்க வேண்டும்.
* ஆண்கள் எப்போதும் உறவுகளில் மிக நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பார்கள். தனக்கு பலம் அதிகம் என்றெண்ணி உடல் நலத்தை கெடுத்துக் கொள்வதும் உண்டு. போராட்டம், விரக்தி இவற்றால் விரட்டப்பட்டு அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் வீறாப்பு குணம் விட்டுக் கொடுப்பதை விரும்பாது. இதை பெண்கள் புரிந்து கொண்டாலும் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
* ஆணானாலும், பெண்ணானாலும் அடிப்படை குணங்களைவிட்டு வெளியே வரா விட்டால் பிரச்சினை தான். “நான் இப்படித்தான்” என்ற கோட்பாட்டை தகர்த்து ஒரு வருக்குள் ஒருவர் ஐக்கியமாகிவிடும்போது வேறுபாடுகள் நீங்கும். இன்பம் பெருக் கெடுக்கும். திருமணத்தோடு, குழந்தை பிறப்போடு எல்லாமே முடிந்து விடுவதில்லை. எப்போதும் முதன்முதலாகச் சந்திக்கும் ஆவலோடு நேசம் கொள்ளுங்கள், பிரச்சினை களை சிறு பிள்ளையின் தவறாக மன்னிக்கப் பழகுங்கள். மணவாழ்க்கை மகிழ்வும், நிறைவும் பெறும்.
நன்றி-தினத்தந்தி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites