இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, October 17, 2011

காகித பை.. எப்படி தயாரிப்பது

‘சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஜிசி டைகிரீன் கான்செப்ட் நிறுவன உரிமையாளர் திவ்யா(24). அவர் கூறியதாவது:  கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சென்னையில் எம்பிஏ படித்தேன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுவதால், அதற்கு மாற்றான காகித பைகளை தயாரித்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.

இதுகுறித்து அறிந்து கொள்ள இணையதளத்தில் தேடியபோது, கோவையில் தனபாக்கியம் என்பவர் காகிதப் பை தயாரிக்க பயிற்சி கொடுக்கும் விவரம் தெரிந்தது.  இறுதியாண்டு எம்பிஏ செய்முறை பயிற்சிக்காக கோவை வந்தேன். அப்போது காகிதப் பை தயாரிக்க பயிற்சி பெற்றேன். மீண்டும் விடுதிக்கு திரும்பி அங்கு செய்தித்தாளை கொண்டு பை தயாரித்து, கல்லூரி கேன்டீனுக்கு இலவசமாக கொடுத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் இதையே தொழிலாக செய்தால் என்ன என்ற எண்ணம் உதித்தது.

படிப்பை முடித்து கோவை திரும்பியவுடன், பை தயாரிக்கும் இயந்திரங்களை பெற்று தொழிலை துவக்கினேன். முதலில் எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் பிளாஸ்டிக் பை ஒழிப்பில் தீவிரம் காட்டும் ஊட்டி, கொடைக்கானல், டாப்சிலிப், ஏற்காடு பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்க தொடங்கினேன். சுற்றுலா பயணிகளாக வந்த சில தொழிலதிபர்கள், தங்கள் நிறுவனத்துக்கு இதுபோல் வேறு டிசைன்களில் செய்து தர முடியுமா என்று கேட்டனர். அதன்படி செய்து கொடுத்தேன். இப்போது பல நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் குவிகிறது.

கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரம் பைகள் தயாரித்துள்ளேன். திருமண தாம்பூலப் பைகளையும் காகிதத்தில் தயாரித்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. புதிய தொழில்முனைவோர் ஈடுபட இது சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீட்டில் துவங்கி, படிப்படியாக முன்னேறலாம்.

காகிதப் பை வகைகள்

ஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என விதவிதமான வகைகள் உள்ளன.

தேவைப்படும் பொருட்கள்: பழைய அல்லது புதிய பேப்பர்கள். பேப்பரின் வகைகளான டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன்ஷீட், சார்ட் ஆகியவை.

இயந்திரம்: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின்.

உற்பத்தி பொருட்கள்: மெட்டல் வளையம், பசை, கைப்பிடிக்குத் தேவையான கயிறு.

கிடைக்கும் இடங்கள்: பேப்பர்கள் பழைய பேப்பர் கடைகளிலும், கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் சென்னை, பெங்களூர், கோவை, ஐதராபாத் நகரங்களிலும், இதர வகை பேப்பர்கள் மற்றும் பொருள்கள் சிறு மற்றும் பெரு நகர ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

எந்த வகை பேப்பர் ஆனாலும், தயாரிப்பு முறை ஒன்றுதான். முதலில் தயாரிக்கப்படவுள்ள அளவை பேப்பரில் ஸ்கேல் வைத்து அளந்து மார்க் செய்ய வேண்டும். அதை கையால் இயக்கக்கூடிய கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும், கீழ்பகுதியில் மடக்கியும் கொள்ளலாம். அடிப்பாகத்தை வலுப்படுத்த, அட்டை ஒட்ட வேண்டும்.

கைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் 2 துளைகளை போட வேண்டும். துளை போட அந்த மெஷினையே பயன்படுத்த வேண்டும். ஓட்டைகள் கிழியாமல் இருக்க, மெட்டல் வளையத்தை பிரேம் செய்ய வேண்டும். கடைசியாக துளையில் கயிறு கோர்த்து முடிச்சுபோட்டால் பேப்பர் பை தயார்.

விற்பனை வாய்ப்பு

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மற்றும் சுற்றுச் சூழல் அக்கறை ஆகிய காரணங்களால் பெரும்பாலான கடைகளில் காகித பைகளில் பொருள் வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஜவுளி, டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர்பிடிக்கலாம். காகிதப் பைகளில் நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் பைகளுக்கு மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும்.

லாபம்

மீடியம் அளவான 11க்கு 9 செ.மீ. பையில், தாங்கு திறனுக்கேற்ப 200 கிராம் முதல் 6 கிலோ எடையுள்ள பொருள்களை வைக்கலாம். செய்தித்தாள் பைகளில் குறைந்த எடை, பெரிய தோற்றமுள்ள பொருட்களை வைக்கலாம். ஒரு மீடியம் சைஸ் காகிதப் பை தயாரிக்க ரூ.3, டியூப்ளக்ஸ் பை தயாரிக்க ரூ.4, கோல்டன் யெல்லோ ஷீட் பை தயாரிக்க ரூ.3.25, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தயாரிக்க ரூ.3.25 செலவாகிறது. இதில் காகிதப் பை, கோல்டன் ஷீட் பை, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தலா ரூ.5க்கும், டியூப்ளக்ஸ் பைகள் ரூ.7க்கு விற்கிறது.

இதன் மூலம் பைக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை லாபம். இதன் மூலம் மாதம் குறைந்தபட்ச லாபம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும். ஒரு மெஷினில் ஒருவர் கட்டிங் செய்து, மற்றொருவர் கிரீசிங் செய்து, இன்னொருவர் துளையிட்டு கயிறு கோர்த்தால் மாதம் 6 ஆயிரம் பை தயாரிக்கலாம். லாபமும் அதற்கேற்ப அதிகரிக்கும்.

பயிற்சி: பேப்பர் பை தயாரிப்பு தொடர்பான பயிற்சியை வேளாண் பல்கலைக்கழகம், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் பயிற்சியாளர்கள் மூலம் கட்டண முறையில் ஒரு நாள் முதல் ஒரு வாரம் கால அளவில் அளித்து வருகின்றன.

முதலீடு

கட்டமைப்பு: மெஷின் நிறுவ, பணியாற்ற 10க்கு 10 அடி அறை போதும். பைகளை இருப்பு வைக்கவும், அலுவலக பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு அறை தேவை.

நிரந்தர முதலீடு: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் ரூ.25 ஆயிரம்.
 
உற்பத்தி செலவு

ஒரு மெஷினில் ஒரு நாளில் ஒருவர் 11க்கு 9 செ.மீ அளவிலான 75 பைகளை வெட்டி, கிரீசிங் செய்து, துளையிட்டு, கயிறு கோர்த்து தயார் செய்யலாம். இதற்கு எந்த வகை பை தயாரிக்கிறோமோ அந்த வகை காகிதம் ஒரு கிலோ போதுமானது. அதன்படி மாதத்துக்கு 26 கிலோவில் 2 ஆயிரம் பைகள் தயாரிக்கலாம். சாதாரண காகிதம் 26 கிலோ ரூ.260, டியூப்ளக்ஸ் போர்டு ரூ.1690, கோல்டன் யெல்லோ ஷீட் ரூ.910,  பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் ரூ.750. பசை 26 கிலோ ரூ.260, கைப்பிடி கயறு 5 மீட்டர் ரூ.130, மெட்டல் வளையம் ரூ.20, பென்சில் 2க்கு ரூ.10. உற்பத்தியாளர் சம்பளம் மாதம் ரூ.5200.

சாதாரண பை தயாரிக்க மாதத்துக்கு மொத்தம் ரூ.5,880, டியூப்ளக்ஸ் போர்டு பைகள் தயாரிக்க ரூ.7990, கோல்டன் யெல்லோ ஷீட் தயாரிக்க ரூ.6530, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் தயாரிக்க ரூ.6370 செலவாகிறது. இதில் கூலியாள் இல்லாமல் நாமே உற்பத்தியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் ரூ.680, அதிகபட்சம் ரூ.1690 உற்பத்தி செலவுக்கு போதும்.

2 comments:

CAN YOU GIVE CONT OF THIS PERSON NUMBER

CAN YOU GIVE CONT OF THIS PERSON NUMBER

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites