இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, October 22, 2011

பாம்புக்கடி

 

இலங்கையில் வருடமொன்றுக்கு 600 க்கு மேற்பட்டோரைப் பலியெடுக்கும் ஒரு துர்நிகழ்வாக விசப்பாம்புக்கடி இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 11,000 மரணங்களும் , தெற்காசியாவில் 14,000 மரணங்களும் , உலகில் ஆண்டொன்றுக்கு 94,000 மரணங்களும் பாம்புக்கடியால் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.



உண்மையில் இந்த எண்ணிக்கை தொற்றுநோய்களால் ஏற்படும் மரணங்களை விட அதிகமானது என்பதும், அதுபற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை என்பதும் கசப்பான உண்மையாகும். இதனால் இது neglected tropical disease என்றழைக்கப்படுகிறது.



எனவே பாம்புக்கடி தொடர்பான முதலுதவி முறைகளை நாமனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. அவைபற்றி மிகச் சுருக்கமான விளக்கங்களைப் பார்ப்போம்.



ஒருவர் பாம்புக்கடிக்குள்ளானால் இயன்றவரை பாதிக்கப்பட்டவரை பதற்றமடையச் செய்யவேண்டாம். பதற்றமடைந்தால் இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். இதனால் நஞ்சு விரைவாக உடலில் பரவலாம். எனவே மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என நம்பிக்கையளித்து அவரது பதட்டத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும்.



கடிபட்டவருக்கு எல்லாவகைப் பாம்புகளும் அபாயமானதல்ல என்று விளக்கவேண்டும். அத்துடன் கடிபட்ட அனைவருக்கும் விசம் ஏறி இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவிக்க வேண்டும்.




காயத்தை சவர்க்காரமிட்டு ஓடும் நீரில் கழுவவேண்டும். காயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்க வேண்டாம். கடிபட்ட பாகத்தை அசையாது வைத்திருந்தால் அது இரத்த ஓட்டத்தை மந்தப்படுத்த உதவம்.


முடிந்தால் பாம்பின் வகையை கேட்டறிந்து கொள்வது மருத்துவத்துக்கு உதவியாக இருக்கும்.



ஆபத்தான நான்கு நச்சுப்பாம்புகள்


கடிவாயின் மீது கீறுவதோ,உறுஞ்சுவதோ, கட்டுவதோ தவிர்க்கப்படல் வேண்டும். கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கலங்கள் இறக்கக்கூடும். வாய்வைத்து உறிஞ்சும் போது வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும். இதனால் பாம்புக் கடிக்கு உள்ளானவர் தவிர முதலுதவியாளரும் ஆபத்துக்கு உள்ளாகலாம்.


“ஆஸ்பிரின்” ,“மதுபானம்” என்பன கொடுத்தலைத் தவிர்க்க வேண்டும்.


உடன் வைத்தியசாலைக்கு கடிபட்டவரை கொண்டு செல்ல வேண்டும்.


சரியான முதலுதவிகள் செய்வதன் மூலமும், மருத்துவம் மூலமும் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புக்களைத் தவிர்க்க முடியும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites