இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, October 18, 2011

ரோஜா இதழ் நீர்

ரோஜா பூவைக் கொண்டு இனிய சுவையுள்ள சர்பத் தயார் செய்யலாம். ரோஜாப் பூ சர்பத் தாகம் நீக்கும். இனிய பானமாக மட்டுமின்றி நல்லதொரு மருந்தாகவும் பயன்படுகின்றது. ரோஜாப்பூ சர்பத் உடல் உஷ்ணத்தை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கும். இரத்தத்தின் இயல்பைக் கட்டிக் காக்கும். களைப்பு நீக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும்.
நல்ல பெரிய இதழ்களுள்ள ரோஜா மலர்களைக¢ வாங¢க¤க¢ கொள்ள வேண்டும். பிறகு அவற்றின் இதழ்களை சுத்தம் பார்த்து ஆய்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அது களிம்பு ஏறாத பாத்திரமாக இருக்க வேண்டியது அவசியம். அந்த பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவுக்கு கொதிக்கும் நீரை விட்டு அந்த கொதி நீரில் முக்கால் கிலோ அளவுக்கு ரோஜாப்பூ இதழ்களைப் போட வேண்டும். பிறகு அதை நன்றாகக் கிளறி விட வேண்டும்.
பெரும்பாலும் இந்தப் பணியை இரவு நேரத்தில் செய்வது நல்லது. ரோஜாப்பூ இதழ்களைக் கொதிநீரில் போட்டுக் கிளறிவிட்ட பிறகு அதை அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதே நிலையில் அது பனிரெண்டு மணி நேரம் இருக்க வேண்டும். முதல் நாள் இரவு ஒன்பது மணி வாக்கில் அதை மூடி வைத்து மறுநாள் காலை ஒன்பது மணி வாக்கில் அதைத் திறக்க வேண்டும். கைகளை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு நீரில் ஊறிக் கிடக்கும் ரோஜாப்பூ இதழ்களை கையினால் நன்றாக பிசைந்து குழம்பு போல் செய்ய வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் எழுநூறு கிராம் அளவு சர்க்கரையைப் போட்டு முன்னூறு மில்லி நீர் விட்டுக் கரைத்துக் காய்ச்ச வேண்டும். நீர் நன்றாகக் கொதித்து சர்க்கரை இளகி பாகுபதத்திற்கு வந்ததும் முன்பு தயார் செய்து வைத்திருக்கும் ரோஜா இதழ்நீரை அதில் விட்டு நன்றாக மறுபடியும் காய்ச்ச வேண்டும். பாகு தேன் பதத்திற்கு வந்ததும் அதனுடன் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரைக் கலந்துக் கொள்ள வேண்டும். பின்னர் இறக்கி ஆற வைத்து கண்ணாடி பாட¢டில¢கள¤ல¢ ஊற¢ற¤ மூடி விட வேண்டும்.
இதை இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு கண்ணாடி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அவசியமானால் ஐஸ் சேர்த்து பருகலாம். சர்பத்தை தண்ணீருக்கு பதில் காய்ச்சி ஆறிய பசுவின் பாலில் விட்டு சாப்பிட்டால் இன்னும் இனிமையாக இருப்பதுடன் மருத்துவப் பலனும் அதிகமாக கிடைக்கும்.
ரோஜா சர்பத்
தேவை
ரோஜா இதழ்கள்-11/2கப்
வெந்நீர்-3/4கப்
ஏலக்காய்விதை-1/4டீஸ்பூன்
சீனி-3/4கப்
எலுமிச்சம் ஜுஸ்-1/4கப்
ஐஸ் க்யூப்ஸ்-தேவையான அளவு
மாதுளம் ஜுஸ்-1/2கப்
செய்முறை
ரோஜா இதழ்களை இஞ்சி பூண்டு தட்டும் உரலில் போட்டு இடித்து, அதனுடன் வெந்நீர், ஏலக்காய் விதை சேர்த்து ஒரு சில்வர் டப்பாவில் ஊற்றி இரவு முழுவதும் ஊற விட வேண்டும். பின்னர் இதனை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி அதனுடன் சீனி எலுமிச்சம் ஜுஸ், மாதுளம் ஜுஸ், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ப்ளண்டரில் ஊற்றி ஒரு அடி அடித்து மேலே ரோஜா இதழ்களைத் தூவி பருகவும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites