இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, October 22, 2011

கோர வேட்டை

oppression

 கோர வேட்டை தான்டவமாடும்
கொடூர நாட்கள் – நம்மை
கொஞ்சம் கொஞ்சமாய் சல்லடை போடுகின்றன!
பாலஸ்தீன மண்ணின் மைந்தகளை
பச்சை பச்சையாய் நிரந்தர பள்ளிக்கு
பல்லக் கேற்றுகிறது – இஸ்ரேலியக் கரடிகள்!
காஸாவின் விடியல் கீற்றுகள்
கண்சிமிட்டுவதை – உலகம்
கண்டு கொள்ளும் தருணம் -இன்னும்
தொலைவில் இல்லை…
நேசக் கரங்கள் உயரும் போதெல்லாம்
அங்கே – ஒரு இறை படையொன்று
அனிவகுத்துக் கொண்டிருக்கின்றது – அவை
இறைவனின் அனுமதிக்காய் காத்துக்கிடக்கின்றன!
நாளைய விடியலை நோக்கி
நகரட்டும் – நம் நகர்வுகள்
தகரட்டும் அந்நியக் கனவுகள்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites