இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 7, 2011

பெங்களூரு லால்பார்க்

பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் வருடம் தோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்படும் மலர் கண்காட்சி பரபரப்பானது. இவ்வருடமும் 20ஆம்தேதி ஆரம்பித்து, கடந்த ஒருவாரமாக எட்டு லட்சம் பார்வையாளர்களை எதிர்கொண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்த வருடத்தின் சிறப்பாக பலவண்ண ரோஜாக்களால் உருவாக்கப்பட்ட சுமார் 25 அடி உயர காவேரி மாதாவும், 40 அடிக்கு எழும்பி நின்ற குதுப்மினாரும், எண்ணத்தில் தேச ஒற்றுமையை வளர்க்கும் விதமாக அத்தனை சமயத்தினரின் பண்டிகைகளையும் சித்தரிக்கும் மலர் காட்சிகளும் அமைந்திருந்தன.


அன்னை காவேரி

வளம் பெருக வரம் தரும் தாயே
நீ வரும்வழி பார்த்துக் காத்திருக்கும்..

எங்களையும் திரும்பிப் பார்த்திடுவாயே!
***

குதுப்மினார்
லட்சத்து இருபதாயிரம் ரோஜாக்களால் கோபுரத்தை வடிவமைத்த பூ அலங்கார வல்லுநர் காளிதாஸுக்கு பாராட்டுக்கள். [இன்னும் அருகாமையில் ரசிக்க விரும்பினால் படத்தைச் சுட்டுங்கள்!]
***
ஒவ்வொரு தூணிலும் மெகா பூப்பந்து

***



‘மிலே சுர் மேரா துமாரா’
‘மிலே சுர் மேரா துமாரா’அனைவரும் அறிந்த தேசிய ஒருமைப்பாட்டு பாடல். நேற்று ஜூம் டிவியில் அவர்களும் டைம்ஸ் க்ரூப்பும் சேர்ந்து தயாரித்த இதன் புதிய ரீமிக்ஸினை அடிக்கடி ஒளிபரப்பினார்கள். பாடல் காட்சியைக் காண விரும்புவோருக்கு சர்வேசனின் பகிர்வு இங்கே!


“இசைந்தால் நம் இருவரின் சுரமும் நமதாகும்!
திசைவேறானாலும்..
ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவதுபோல்..
இசை..நம் இசை”


இசை மட்டும்தானா


இசைந்தால் பண்டிகைகளும்.. அன்பைக் கூடிப் பகிர்வதால் கொண்டாட்டங்களும்.. கூட நமதாகும்!


கிறுஸ்துமஸ்
***

ரம்ஜான்
***

புத்த பூர்ணிமா
***

தசரா
***

ஹோலி
***

வரலெட்சுமி
***




பூப்பூவா பூத்திருக்கு

மெத்து மெத்து மலர்கள் மொத்த மொத்தமாய்..


எண்ணம் நிறைக்கும் வண்ணங்களில்..


கண்ணைப் பறிக்கும் நிறங்களில்..


அழகாய் அணிவகுத்து..


க்ளாஸ் ஹவுஸ்
கண்டு களித்தோரும் காணச் செல்வோரும்..
குடியரசு தினத்தன்றே சென்றிருந்தேன். கூட்டத்துக்கு கேட்க வேண்டுமா? கோணம் பார்த்து வாகாய் பிடித்து க்ளிக்கிடப் போகையில் கையைத் தட்டி விடும் நெரிசல், காட்சிக்கு குறுக்கே வரும் நபர்கள், நகரச் சொல்லி அவசரப் படுத்தும் காவலர்கள் கெடுபிடி இவற்றிற்கிடையே இவ்வளவுதாங்க முடிந்தது.

அனைத்துப் படங்களும் க்ளாஸ் ஹவுஸ் உள்ளே மட்டுமே எடுக்கப் பட்டவை. தவிரவும் தோட்டம் எங்கிலும் காட்சிக்காக வைக்கப் பட்டிருந்த பல்வேறுரக பூச்செடிகள் மிதமான வெயிலிலும் இதமான காற்றிலும் வருகிறவர்களைப் பார்த்து சளைக்காமல் மலர்ச்சியுடன் தலையசைத்துக் கொண்டேயிருந்தன.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites