இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, December 2, 2011

வரிவிதிப்பு அலுவலத்திற்குள் விஷம்கக்கும் பாம்பினை விட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பாட்டி


இந்தியாவின் உத்திர பிரேதேச மாநிலத்தில் நிலம் பிரச்சனை காரணமாக பாம்பாட்டி ஒருவர் உள்ளுர் வரிவிதிப்பு அலுவலகத்திற்குள் விஷம்கக்கும் கோப்ரா பாம்பினை விட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இரண்டு மூன்று பைகள் நிரம்பிய விஷப்பாம்பினை வெளியிட்டு அங்குள்ள மக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த பாம்பாட்டியின் பெயர் காகூல்(Hakkul). இவர் தனது பாம்புகளை பராமரிக்க இடம் வேண்டி முறையாக அரசு நில அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளார். அதிகாரிகளும் காகூலிற்கு(Hakkul) நிலம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

தனது பாம்புகளை பாராமரிக்கும் ஆசையில் இரண்டு வருடங்களாக மிகவும் பொறுமையுடன் காத்திருந்த காகூல்(Hakkul) அதிகாரிகள் தன்னை ஏமாற்றுவதை அறிந்த பின்னரே உள்ளுர் வரிவிதிப்பு அலுவலகத்திற்குள் அதிகாரி அமரும் இருக்கை மற்றும் மேசையின் மீது விஷம் கக்கும் கோப்ரா பாம்பினை விட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தின் நிலவருவாய் அதிகாரியான (Subhash Mani Tripathi) சுபாஷ் மணி திருப்பதி கூறுகையில் வணிக நோக்கில் செயல்படநினைக்கும் இது போன்ற விண்ணப்பங்களுக்கு அரசு எழுத்துப்பூர்வமான பதில்களை எதிர்பார்க்கும். இதனை அறியாத காகூல் அலுவலகத்திற்குள் பாம்பினை விட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எ.எப்.பி(A.F.P) என்ற செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அலுவலகத்தில் உள்ள பாம்பினை ஒவ்வொன்றாக தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites