இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 18, 2011

தோல் பொருள்கள் தயாரிப்பது எப்படி

இன்று அதிகமாக ஏற்றுமதி செய்யும் தோல் பொருட்களில் தோல் ஷூ மற்றும் தோல் ஜாக்கெட் ஆகியன முதலிடம் பெறுகின்றன. தோல் பேக், தோல் பெல்ட், மணிபர்ஸ் போன்ற பொருட்களும் ஏற்றுமதியில் இடம் பெறுகின்றன.

தோல் ஜாக்கெட்
     
   இவை மாட்டு தோல் மற்றும் ஆட்டு தோல் இந்த இரண்டிலும் தயாரிக்கின்றார்கள்.



பெரிய நிறுவனங்கள் அவற்றிற்கு தேவையான தோல்களை அவர்களே தங்களுடைய சொந்த தொழிற்சாலையில் தேவைக்கு ஏற்றார் போல் தயாரித்து கொள்வார்கள், இதனால் இவர்கள் இலாபத்தை அதிகமாக பார்க்க முடிகிறது. தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாத

சிறிய நிறுவனம், (சென்னை) பெரியமேட்டில் உள்ள தோல் விற்பனையாளர்களிடம் சென்று ,அவர்களுக்கு வேண்டிய தரத்தை உடைய தோலை கொள்முதல் செய்வார்கள்.

தோல் ஜாக்கெட் தயாரிக்க தையல் தெரிந்தவர்களும், தையல் மெஷினும் (இயந்திரமும்) முக்கியம்.இந்த நிறுவனத்தை நடத்துபவர்கள் ,தோல் பற்றி அறிந்து இருப்பது நன்று. இவர்கள் தனக்கு கிடைத்த ஆர்டருக்கு ஏற்றாற்போல் பல மாடல்களை தயாரிக்கின்றனர். இந்த தொழிலை யாரும் தொடங்கலாம்.

தோல்  ஷூ


இந்த தொழில், நவீன தொழில் நுட்பத்தை மையமாக கொண்டது. இதை தயாரிக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் அவசியம். அப்பர் தனியாகவும் லைனிங் தனியாகவும் பாட்டம் தனியாகவும்
தயாரிக்கப்பட்டு ,பிறகு மூன்றையும் ஒன்றாக இணைத்து,
ஷூவை முழுமை அடைய செய்கிறார்கள். சிறிய நிறுவனங்கள் லைனிங் மற்றும் பாட்டங்கள் தயாரித்து இவர்களுக்கு சப்ளை செய்கிறார்கள். பெரும்பான்மையான இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த தொழிலை தொடங்க அதிக முதலீடு தேவை படுகிறது. தொழில் நடத்துபவர் தோலை பற்றியும், அதன் தரம் பற்றியும் அறிந்து இருக்க வேண்டும்.


இந்த தொழிற்சாலைகளில் பேட்டன் எடுத்து கட்டிங் செய்து கொடுக்கும் மாஸ்டர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சரியான முறையில் பேட்டன் செய்து கொடுக்க வேண்டும்.


தோல் வேஸ்ட் ஆகாமல் கட்டிங் செய்து கொடுப்பது மூலம், அந்த நிறுவனம் எந்த சேதாரமும் இல்லாமல், தன்னுடைய இலாபத்தை பார்க்க முடியும். இது அல்லாமல் கட்டிங் செய்யும் போது, கழியும் சிறு சிறு தோல்களை எடுத்து அவற்றை கொண்டு ,கீ செயின்
மற்றும் சிறிய பர்ஸ் போன்ற சில பொருள்கள் செய்து பயன் அடையலாம். பெரும்பான்மையான தோல் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாட்டிற்கு அந்நிய செலவாணி கிடைக்கின்றது.

கழிவு நீர்

      கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி விவரிக்க சொல்லி இருந்தார்கள். இந்த இடத்தில் அது பற்றி கொஞ்சம் கூற கடமை பட்டுள்ளேன். வெளியேறும் கழிவு நீரை பெரிய தொட்டியில்
சேகரித்து, அவற்றை இயந்திரத்தின் உதவியுடன் சுத்திகரித்து ,பிறகு அவற்றை அதற்கு என ஒதுக்கப்பட்ட
தொட்டியில் சேகரித்து ,அந்த தண்ணிரை மீண்டும் உபயயோகப்படுத்துகிறார்கள். சுத்திகரிப்பு நிலையத்தை
உருவாக்குவதற்கு மட்டும் இவர்களுக்கு பெரும் தொகை செலவு செய்யப்படுகிறது.
மேலும் விபரம் தெரிந்தால் எங்களுக்கு அனுப்பவும்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites