இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, December 17, 2011

பண்ணைக் கழிவுகளிலிருந்து காகித அட்டை தயாரித்தல்


பண்ணைக் கழிவுகளிலிருந்து காகித அட்டை தயாரித்தல்
பயன்
:
நார்த்தன்மைக் கழிவுகளிலிருந்து காகித அட்டை தயாரித்தல்.
திறன்
:
அமைக்கும் ஆலையைப் பொறுத்தது.
விலை
:
ரூ. 5 இலட்சம் வரை முதலீடு தேவைப்படும்.

அமைப்பு
:
வாழைத்தண்டு, பருத்திமார் போன்ற பண்ணைக் கழிவுகளில் நார்த்தன்மை அதிகம் உள்ளது. இவை காகிதம் மற்றும் காகித அடடை தயாரிப்பதற்கு ஏற்றது. இத்தகைய பண்ணைக்கழிவுகள் கொதிகலன்களில் வேகவைத்து, பழைய காகிதத்துடன் 3:1 என்ற விகிதத்தில் அரைத்து கூழாக்கப்படுகிறது. இந்தக்கூழை நைலான் வலையிட்ட சட்டங்களில் இட்டு தேவையான அளவிற்கு காகித அட்டையாக வார்க்கப்படுகிறது. வார்க்ப்பட்ட காகித அட்டைகள் நன்கு உலரவைத்து, சுறுக்கம் நீக்கப்பட்ட கோப்புகள் மற்றும் காகித அட்டைப்பெட்டிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
:
பண்ணைக் கழிவுகள் காகித அட்டை தயாரிக்க மிகவும் ஏற்றது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட காகித அட்டைப்பொருட்கள் சுற்றுப்புறச்சூழலோடு ஒத்துச்செல்பவையாகும்.


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites