இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, December 10, 2011

தினமும் ஒரே மாதிரியா 'இருப்பது' போரடிக்குதா



சூழலை கையாண்டால் அது இருவருக்குமே போரடிக்கும் சமாச்சாரமாகிவிடும். உப்புச்சப்பில்லாமல் ஏனோதானோ வென்றுதான் இருக்கும் வாழ்க்கையும். வாழ்க்கை உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? மேற்கொண்டு படியுங்கள்.

மனதை உற்சாகப்படுத்தும் பெட்ரூம்

உங்களுடைய படுக்கையறையை தினம் தினம் புதிதாக உற்சாகமூட்டும் வகையில் அலங்கரிக்கலாம். உள் அலங்காரம், மின்விளக்குகள், அறையில் உள்ள படுக்கைகள் என இடம் மாற்றி அலங்கரிக்கலாம். இதனால் புதிதாக ஒரு இடத்தில் இருப்பதைப்போன்ற எண்ணம் ஏற்படும்.

பிஸியில் மறந்துவிட வேண்டாம்

எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்து விட்டு துணையை கவனிக்க முடியலையே என்று கவலைப்பட வேண்டாம். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினாலே துணையை சந்தோஷப்படுத்த முடியும். அவ்வப்போது ரொமான்ஸ் மூடு ஏற்படும் வகையில் சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடலாம். இது இரவு நேர விளையாட்டிற்கு ஒத்திகை பார்த்ததைப் போல இருக்கும்.

புதிய இடம் புதிய வாழ்க்கை

தினமும் ஒரே அறையில் இருப்பது போராடிக்கத்தான் செய்யும். எனவே இடத்தையும், ஊரையும் மாற்றுங்கள். ஹோட்டல் அறையில் புதிய சூழலில் உறவில் ஈடுபடும் போது உற்சாகம் அள்ளிக்கொண்டு போகும்.

துணையை உற்சாகப்படுத்தலாம்

இயந்திரத்தனமாக ஈடுபடுவதை விட அவ்வப்போது துணையை உற்சாகப்படுத்த கொஞ்சம் கற்பனாசக்தியை பயன்படுத்துங்கள். இது உங்கள் துணையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உறவின் போது ஒரே மாதிரியாக செயல்படுவதை விட துணையை ஊக்கப்படுத்தி அவருடைய செயல்படுகளுக்கு உற்சாகம் அளிக்கவேண்டும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites