
![]() |
நுழைவுவாயில் |




இவைகளை விட பிரமாதங்கள் என்னவென்றால் இங்கு பல விலங்குகளின் உருவங்கள்,மனித பொம்மைகள்,சிலையாக செதுக்காமல் இயற்கை உருவ வடிவமைப்பு பெற்ற கற்களின் தொகுப்புகள், உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களாலான உருவங்கள்,பானைகள்,உடைந்த செராமிக் டைல்ஸ்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் பார்வையாளர்களை ஈர்த்தது.






![]() |
இது மின்சார வாரியத்தினால உபயோகிக்கப்பட்டு ஒதுக்கிவைத்தது சுவர்பதிப்பாக காட்சிதருகிறது. |








உடைந்த கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மீன் தொட்டிகளின் காட்சிகளும் இருந்தன.இயற்கை உருவ கற்களின் தொகுப்புகளை
நேக் சந்த் என்பவரின் முயற்சியிலும் ஆர்வத்திலும் உருவானதுதான் இந்த ராக் பார்க்.இவர் அரசாங்க அதிகாரியாக பணிபுரிந்தவராம்.இந்தியா சுதந்திரம் பெற்றபோது பாக்கிஸ்தானிலிருந்து சண்டிகருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.அப்போதே சண்டிகர் மாநிலம் சுவிச்சர்லாந்த் மற்றும் பிரான்சு கட்டிடக்கலைபடி வடிவமைக்கப்பட்டிருந்ததாம். அருகிலிருக்கும் மிகப்பெரிய ஏரிகளிலும்,நதிகளிலும் காணப்பட்ட அழகிய இயற்கையாகவே உருவம் பெற்றுள்ள கற்கள் நேக் சந்தை ஈர்த்துள்ளது.அவைகளை ஆர்வத்துடன் சேகரித்து காட்சிக்கு வைத்திருந்துருக்கிறார்.இங்குள்ள நீர்வீழ்ச்சிகளும் இவராலே வடிவமைக்கப்பட்டதாம்.
ஐம்பது வேலை ஆட்களுடன் சுக்னா ஏரிக்கு பக்கத்தில் இந்த ராக் பார்க்கை வடிவமைத்துள்ளார். இந்த காட்சியிடம் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டதாம்.சண்டிகரின் மருத்துவமனை, உணவகம், மின்சாரவாரியம், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின் நல்ல முழுமையான கழிவுப்பொருட்களை சேகரித்து விலங்கு மற்றும் மனித உருவ பொம்மைகள் செய்ய பயன்படுத்தியிருக்கிறார்.சைக்கிளின் உதிரிபாகங்களாலான பொம்மைகள் கூட சில இடங்களில் பார்த்த நினைவு உள்ளது.தாஜ்மகாலை அடுத்து இங்குதான் மக்களின் வருகை அதிகம் என சொல்லப்படுகிறது. வெளிநாட்டிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் நாள் ஒன்றுக்கு தோராயமாக ஐந்தாயிரம் பேர் வருகைபுரிவதாக கணக்கீடு உள்ளதாம். பஞ்சாப் மாநிலம் வந்தால் இந்த ராக் பார்க்கை பார்க்க மறந்திட வேண்டாம்.
0 comments:
Post a Comment