இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, December 17, 2011

உயர வேண்டும

விறுவிறுப்பாய் போகும்
வேலை இயந்திரம் நான்
திங்கள் காலையில்
போர்வை திறந்து
முடுக்கிவிட்டால்,

பிறகென்ன.................
எரிபொருளில்லாமல்
எந்தச் சத்தமும் போடாமல்
வெள்ளிக் கிழமைவரை
வேகமாய்ச் சுழலும்
வேற்று இயந்திரம் நான்.


ஒரு நிமிடமாவது
ஓய்வெடுத்துக் கொள்வதற்கு
நான்
உள்ளூர் உற்பத்தி அல்ல!
இல்லை,
ஒளித்துப் பொய்சொல்லி
ஒன்றிரண்டை உடைத்து
ஓடாமல் நின்று விட
நான் ஒன்றும்,
பொய்ப் பகுதிகளை பொருத்தி,
போய் பிழைத்துக்கொள் என்று
கைகழுவிக் கப்பல்களில்
தள்ளிவிடப்பட்ட
தண்டனைக்குரியவனல்ல!

எந்தப் பிரச்சனையும்
இல்லாமல்
இலகுவாய் இயங்குவதால்
என்மீது
எரிச்சல் பொறாமை
இவர்களுக்கு!


என்
சொந்தச் சக்தியை
சூறையாடப் பார்க்கிறார்
இந்த இயந்திரம்
வேண்டாமென்று
ஏதேதோ சொல்கிறார்.

வந்தவழி திரும்பிப்போ
என்கிறார்.
உந்தச் சட்டம்
ஒழுங்கெல்லாம்
உனக்கில்லை
என்கிறார்.


இயலாத வேலைக்கெல்லாம்
நான்
இழுபட்டுப் போகிறேன்
இயங்கி விட்டாலோ
எதிலும்
எனை மறந்து
ஓடுகிறேன்.


புரியாத புதிரென்று
புகார் செய்கிறார்
புது இயந்திரம் வேண்டுமென்று
பொய் சொல்கிறார்.


சதிக்குணமிலா
அதிகாரி வருகிறார்
அதிசயமாய் பார்க்கிறார்
விதிவசத்தால்
எமக்கு நீ வேண்டும்
என்கிறார்!

அயராமல் உளைத்தால் தான்
அடுப்பெரியும்
என்ற நிலை
அடிவயிற்றில்
அன்றொருநாள்
அங்கு வைத்திருந்தோம்!


உயர வேண்டும்
எனும் உறுதி
உனக்குள் இருந்தால்
கொடுமையெல்லாம்
ஒரு தூசி என
நடப்பாய்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites