இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, December 13, 2011

இஸ்லாமியர்களுக்கான ஓர் பிரத்தியேக மொபைல்

Enmac Quran Mobile

தினம் தினம் புதுமைகளை சந்தித்து கொண்டிருக்கிறது மொபைல் உலகம். அந்த புதுமைகள் வாடிக்கையாளர்களின் வசதிகளை நாளுக்கு நாள் பெருக்கி வருகிறது.
அதன் அடிப்படையில் இப்போது டோல்மோல்.காம் மற்றும் என்மேக் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து என்மேக் குரான் என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த மொபைல் முஸ்லிம் சமுதாய மக்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள ஓர் அற்புதமான வசதியின் மூலம் எங்கிருந்தாலும், குரான் வாசகங்களை எந்த நேரத்திலும் கேட்டு பயன் பெறலாம்.
இந்த குரான் 29 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் 29 மொழிகளில் குரானை கேட்கலாம்.
இதில் தொழுகை நேரத்தை குறித்துவிட்டால் போதும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த மொபைல் தானாகவே சைலன்ட் மோடிற்கு மாறிவிடும். இதனால் தொழுகை செய்யும்போது இடையூறு ஏற்படாது.
இந்த குரான் என்மேக் மொபைலில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ள உதவும் டியூவல் சிம் தொழில் நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
குரான் என்மேக் மொபைலின் கீப்பேடில் அரபிக் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரபி மொழியிலும் எளிதாக டைப் செய்யலாம்.
இந்த மொபைல் 150 நிமிடங்கள் டாக் டைமினையும், 4 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும். 2.0 இஞ்ச் திரையை கொண்டுள்ள இந்த மொபைலில் கேமராவையும் கொண்டிருக்கிறது.
இந்த மொபைல் ஏற்கனவே மலேஷியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites