இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, December 20, 2011

இலங்கை தமிழர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

மிகவும் வேதனை தரும் மற்றும் வேடிக்கை ஒன்றை நிகழ்த்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தனது தலையில் உள்ள மயிரை பயன்படுத்தி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரங்கமாக தொங்கி அவர் இந்த ஆபத்தான, வேடிக்கையான சாதனையை படைத்துள்ளார்.
எனது தலைமயிர் மிகவும் வலிமையானது. காரணம் நான் இயற்கை எண்ணெய் பயன்படுத்துகிறேன் என கின்னஸ் சாதனையை படைத்துள்ள இலங்கை பிரஜையான சுதாகரன் சிவஞானதுறை தெரிவித்துள்ளார்.

இந்த கின்னஸ் சாதனையை படைக்கும்போது தனக்கு தலையில் வலி ஏற்பட்டதாகவும் ஆனால் அது பெரிதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு சாதனையை இதற்கு முன்னர் எவரும் படைத்திருக்கவில்லை. 57 கிலோ கிராம் நிறையுடைய சுதாகரன் சிவஞானதுறை யோகா பயிற்சிகளையும் செய்து வந்துள்ளதோடு, இந்த சாதனையை செய்ய பயிற்சி செய்தும் வந்துள்ளார்.
சுதாகரன் சிவஞானதுறை இலங்கையில் இருந்தபோது ஸ்டண்ட் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் இருந்த போது முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அங்கு வசித்தபோதே இவ்வாறு தலைமயிரை பயன்படுத்தி அந்தரத்தில் தொங்கி சாதனை படைக்க வேண்டும் என்ற அவா, ஆதங்கம் ஏற்பட்டதாகவும் சுதாகரன் சிவஞானதுறை கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் ஒருவரால் அவுஸ்திரேலியாவுக்குப் பெருமை என அவுஸ்திரேலிய தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளமை பாராட்டத்தக்க விடையமாகும்.


0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites