ஒரு மலைப்பாங்கான பகுதியிலுள்ள ஒடுங்கிய வெடிப்பினூடாக வான்குதிப்பினை மேற்கொண்டு சீனாவின் ஜெப் கோலிஸ் என்ற விமானி சாதனை படைத்துள்ளார்
6000 அடி உயரத்திலிருந்து ஓர் உலங்குவானூர்தியிலிருந்து குதித்த ஜெப் கோலிஸ் மணிக்கு 75 மைல் எனும் வேகத்தில் கீழ்நோக்கி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒடுங்கிய ரியான்மென் மலையிடுக்கு வழியே குதித்தார்.
இவரது பறப்பு ஆடை மெல்லிய இழைகளாலாக்கப்பட்டிருந்தது. இதுதான் அவரது குதிப்பினை மெதுமெதுவாகக் குறைத்துக்கொண்டிருந்தது.
இவர் தனது பரசூட்டினை விடுவிக்க முன்னர் 4265 அடி உயர மலையின் ஒடுங்கிய பகுதிக்குள்ளால் வெறுமனே விழுந்துகொண்டிருந்தார். இதன் ஒடுக்கம் வெறுமனே 100 அடிகளாகவே இருந்தன.
இவர் முன்பொரு முறை குதித்தபோது அவரது சிலிண்டர் புகைத்ததால் அதனைக் கைவிட்டிருந்தார்.
இவர் ஈபிள் கோபுரம் மற்றும் சுவிசின் அல்ப்ஸ் மலையிலிருந்தும் குதிப்பை மேற்கொண்டிருந்தார். எனினும் சீனாவின் ரியான்மென் மலையினூடாகக் குதித்தது இதுவே முதல் தடவையாகும்.
0 comments:
Post a Comment