ஒட்டகசிவிங்கி உலகத்தில் பிறப்பது என்பது மிகவும் கடினமான ஒருக் காரியமாம். ஒருக் குட்டி ஒட்டகசிவிங்கி, 10 அடி உயரத்தில் இருக்கிற தாயின் கருவறையில் இருந்து பூமியின் மீது விழுகிறதாம். அது பெரும்பாலும் தன் முதுகு புறம் பூமியில் படும்படியாகவே விழுகிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் அது கால்களை மடக்கி தன் உடம்போடு இணைத்துக் கொண்டு இந்த பூமியை முதன்முறை பார்க்கும். அது தன் கண்களில, காதிகளில தங்கி இருக்கிற கர்பபை நீரை நீக்க, உதறிக்கொள்கிறது. அதற்குப் பிறகு, தாய்ஒட்டகசிவிங்கி குட்டிக்கு வாழ்வின் நிதர்சனமான உண்மையினை அறிமுகபடுத்துகிறது. அது எப்படின்னு நீங்களே பாருங்க!
A View from the Zoo என்கின்ற புத்தகத்தில் கேரி ரிச்மெண்ட் (Gary Richmond) பிறந்த சிசுவாயிருக்கிற ஒட்டகசிவிங்கியின் குட்டி எப்படி தன்னுடைய முதல் பாடத்தை கற்றுக்கொள்கிறது என்பதைப் பற்றி எழுதியுள்ளார்.
குட்டி பிறந்தவுடனே தாய் ஒட்டகசிவிங்கி, தன் தலையை போதுமானபடி தாழ்த்தி குட்டியை பார்க்குமாம். அது குட்டிக்கு நேராக அருகில் இருக்கும்படியான ஒரு நிலையில் நின்றுக்கொண்டு சில நொடிகள் அந்தக் குட்டியைப் பார்த்துக்கொண்டிருக்குமாம். பின் தன் நீண்ட கால்களை வீசி தன் குட்டியை எட்டி ஒரே உதை உதைக்குமாம். அந்த உதைக்கு அந்த குட்டி தலைக்குப்புற பல்டி அடித்து வீழ்ந்துப் புரலுமாம்.
அந்த குட்டி இந்த உதைக்கு எழுந்து நிற்காமல் போனால், திரும்ப திரும்ப இந்த வன்செயல் தொடர்ந்தபடியே இருக்கும். குட்டியும் எழுந்து நிற்க முயன்று முயன்று, மறுபடி மறுபடி கீழே வீழ்ந்துக்கொண்டிருக்கும். அது சோர்ந்துவிடும் போது, தாய் சும்மா இருக்காது. மறுபடியும் ஓங்கி ஒரு உதை! அதனுடைய முயற்சியைக் கூட்ட இவ்வாறு செய்கிறதாம். முடிவாக அந்த கன்று தன் ஆட்டம் போடும் கால்களைக் கொண்டு எழுந்து நிற்கும்.
இப்போது தாயானவள் ஒரு அதிசியதக்க காரியம் ஒன்று செய்கிறாள். எழுந்து நின்றக் குட்டியை எட்டி உதைத்து கீழே விழவைக்கின்றாள். ஏன்? ஏன் இப்படி செய்கிறாள் என்று எண்ணத்தோன்றுகிறது அல்லவா நண்பர்களே? அது ஏன்னென்றால், அந்த குட்டி தான் எப்படி எழுந்து நின்றது என்பதனை மறக்காமல் இருக்கத்தானாம். காட்டில் குட்டி ஒட்டகசிவிங்கிகள் தன் கூட்டத்தோடு இணைந்து பாதுகாப்பான இடத்தில் இருக்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவைகள் எழுந்து நிற்க வேண்டியது அவசியமாம். சிங்கங்கள், கழுதைப்புலிகள், சிறுத்தைகள், வேட்டைநாய்கள் என்று எல்லா விலங்குகளுக்கும் குட்டி ஒட்டகசிவிங்கிகள் விருந்தாகிப் போகிற வாய்ப்பு இருக்கிறது. அந்த தாயானவள் தன் குட்டிக்கு சீக்கிரத்தில் எழுந்து நிற்கும் பாடத்தினை கற்பிக்காதுப் போனால், கண்டிப்பாக இது நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.
மறைந்த எழுத்தாளர் இர்விங் ஸ்டோன் (Irving Stone) இந்தக் கருத்தினை நன்கு புரிந்துக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் மேன்மையைப் பற்றி படிப்பதிலேயே செலவிட்டவர் அவர். மைக்கேலாஞ்சிலோ (Michelangelo), வின்சண்ட் வேன் கோ (Vincent van Gogh), சிக்மெண்ட் ப்ராய்ட் (Sigmund Freud), மற்றும் சார்லஸ் டார்வின் (Charles Darwin) போன்ற பிரபல மனிதர்களைப் பற்றிய வாழ்க்கை சரிதங்களை கதைவடிவில் எழுதியவர்.
இர்விங் ஸ்டோன் அவர்களை ஒருமுறை ஒருக்கேள்விக் கேட்கப்பட்டது. அது என்னவெனில், அவர் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்த வரையில் ஏதாவது ஒரு அம்சம் எல்லோருக்கும் பொருந்தும் அம்சமாக இருந்திருக்கிறதை கண்டாரா என்றுக் கேட்கப்பட்டது.
அதற்கு அவரின் பதில், அவர்கள் எல்லோரும் பல பயங்கரமான தோல்விகளை தங்களின் வாழ்வில் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் பல ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அவர்கள் பல பல வருடங்களுக்கு ஒன்றும் உறுப்படாத நிலையிலேயே தேங்கியிருந்தவர்கள். ஆனால் எப்போதெல்லாம் அவர்கள் பலமாக அடிவாங்கி சறுக்குகிறார்களோ, அப்போதெல்லாம் எழுந்து நின்றார்கள். அவர்களை அழிக்கவே முடியாது. அவர்களின் வாழ்வின் முடிவில், அவர்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்களோ, அதில் மதிக்க தக்க அளவு சாதித்திருந்தார்கள்.
நண்பர்களே! ஒட்டகசிவிங்கி மனிதர்கள் எப்போதும் தோற்பதில்லை. அவர்கள் தோற்பதுப் போன்று தோற்றம் காணப்படினும் அது தற்காலிக தோல்வி தான். அவர்கள் அந்த தற்காலிக தோல்வியின் நிலையில் இருந்து சோர்வின்றி பயணம் தொடர்ந்து நிரந்தர வெற்றி என்கின்ற மலை உச்சியை சேர்ந்துக்கொள்கிறார்கள்.
அதனால் வெற்றி தேவதை, ஒரேக் கண்கொண்டு தான் எல்லோரையும் பார்க்கிறாள் என்று புரிந்துக் கொண்டு செயலாற்றுவோம். சோர்வின்றி இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வோம். நாம் கவனிக்க வேண்டியது நமது இலக்கு நமக்கும் நல்லதாக, ஊருக்கும் நல்லதாக இருக்கிறதா என்பதனை மட்டுமே. என் வாழ்வு மற்றவர்களின் தாழ்வு என்று இருக்குமானால் அந்த வெற்றி அடைந்தும் பயனில்லை. என் வளர்ச்சி ஊருக்கும் உலகத்திற்கும் கூட நன்மையே என்கின்ற நிலையில் இலக்கை முடிவு செய்வோம். செம்மையாக வாழ்வோம்!
0 comments:
Post a Comment