மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலே இன்றைய இளைஞர்கள் மிகவும் யோசிக்கின்றனர்.
திருமணம் செய்து கொண்டவர்களும், `உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்’ என்று சலிப்பு வசனம் பேசுகிறார்கள். இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் அவர்களிடம் உள்ளது.
லிவிங்-டுகெதர்
திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் பலரும் கூட லிவிங்-டுகெதர் வாழ்க்கைக்கு சம்மதிக்கின்றனர். இதனால் குடும்பம் குறித்த சுமையில்லை, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருவரின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு தேவைப்படாவிட்டால் பிரிந்துவிடலாம் என்ற சூழ்நிலைக்கு வந்துவிட்டனர். இணைந்து வாழ்தல் என்றாலே உடனே காமம் மட்டும்தான் என்றால் அது அலுத்துபோகும் மனமொத்து போகாபட்சத்தில். இப்படியான வாழ்வில் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு என்று பயப்படுகின்றனர் பலர்.. இது நிஜம்..
லிவிங்-டுகெதரில் நுழைபவர்கள் 100% இல்லற வாழ்வை ஆயுசுக்கும் அதே நபரோடு தொடர வேண்டும் என்ற ஆவலில்தான் தொடங்குகின்றார்கள்.. விளையாட்டுக்கல்ல. அதுமட்டுமல்ல 50 வயதுக்கு மேலுள்ளவர்கள் , விவாகரத்தானவர்கள் ,துணையை இழந்தவர்கள், பல காரணத்துக்காக மேல்நாட்டில் இணைந்து வாழ்கின்றனர்..
திருமணம் குறித்த ஆய்வுகள்
அவ்வப்போது நடக்கும் ஆய்வுகளோ ஒவ்வொருவருக்கும் திருமணம் அவசியம். அதனால் உடல் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கிறது என்கிறது. இதேபோல் மனோரீதியாகவும் பல நன்மைகள் உண்டு என்கிறது சமீபத்திய ஆய்வு.
சர்வதேச நல அமைப்பான ஹூ ( WHO) வின் மனநலப் பிரிவு மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்…
மன ரீதியான நன்மைகள்
திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள். டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருக்கிறது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது.
தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். புயலும் சீற்றமும் இருக்கும் கடலிலே கப்பலோட்டக்கூடிய மாலுமியே சிறந்தவன்.. இன்றைய இளைய தலைமுறையினரும் இதனை உணர்ந்து கொள்ளவேண்டும்.
0 comments:
Post a Comment