இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, October 1, 2011

வலியைப் போக்கும் மலிவான மருந்து

உங்களுக்கு அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறதா? என்னதான் மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் அந்த தொந்தரவு நீடிக்கிறதா? உங்களுக்காகவே விஞ்ஞானிகள் மலிவான மருந்து ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதற்கு விலை என்று எதுவும் கிடையாது. முற்றிலும் இலவசம்தான்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த மருந்து உங்களிடம்தான் இருக்கிறது. ஆம்… `ஆறுதல்’தான் அந்த மலிவான மருந்து.
பொதுவாக உடலில் வலி இருக்கும் இடத்தில் ஆறுதலாக யாராவது தடவிக் கொடுத்தால் அது இதமாகவும், வலியைக் குறைப்பதாகவும் தெரியும். இது பொய் அல்ல, நிஜம்தான் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
அதுபற்றி அவர்கள் கூறும்போது, `நாம் உடல் வலியால் அவதியுறும் ஒருவரை இதமாக வருடும்போது, அதனால் ஏற்படும் உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்வதற்கு என்றே தொடு உணர்வு நரம்புகள் தனியாக இருக்கின்றன. இந்த நரம்புகள், வலி இருக்கும் இடத்திலிருந்து, அந்த வலி உணர்வை கொண்டு செல்லும் நரம்புகளால் தடை செய்யப்படுவதில்லை. மாறாக, இந்த தொடு உணர்வு நரம்புகள் வலி நரம்புகளை தடை செய்கின்றன. அன்போடு இதமாகத் தொட்டு தடவிக் கொடுத்தால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் உடல் வலி பறந்துவிடும்…’ என்றார்கள்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites