
டுரியானை சந்தோஷமாக தூக்கி செல்லும் ஓர் இளைஞர்பழங்களின் அரசனின் அலைகள் இன்னும் ஓயவில்லை. டுரியான் பழத்தை துர்கா சென்ற வாரம் உங்களுக்கு அறிமுகப் படுத்தினார். பின்னூட்ட கேள்விகள் மழையாக கொட்டியிருப்பதை பார்த்தவுடன் இன்னொரு பதிவு இந்த அரசனுக்கு அளிக்க வேண்டும் என்று தோன்றியது.
இதோ உங்கள் கேள்விகளின் பதில்கள்:
விருபா: நீங்கள் டுரியான் பழத்தை அரசன் என்கிறீர்கள், அண்மையில் மலேசியாவிற்கு வந்திருந்த போது தங்கியிருந்த விடுதியில் டுரியான் பழத்தை உள்ளே எடுத்து வந்தால் 200 ரிங்கிட்ம் என்று அறிவிப்பு வைத்திருந்தார்கள்.டுரியான் அரசன்தான். ஆனால், இவன் தெற்கிழக்காசியாவின் அரசன். தெற்கிழக்காசியாவின் (தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனிசியா) தற்பவெப்பங்களுக்கு...