நான் சில மாதங்களுக்கு முன்பு, ‘நாளை நமதா?’ என்ற தலைப்பில் சமுதாய மக்களை வெறும் வியாபாரிகளாக அல்லாமல் தொழில் முனைவர்களாகுங்கள் என்று எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையினைப் படித்து விட்டு கனடா நாட்டு தலைநகர் டொரண்டோவில் வாழும் சகோதரர் ஹ_சைன் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மலேசியா, சிங்கப்பூர், துபை, கனடா போன்ற நாடுகளில் பெரும்பாலான வாழ்க்கையினை அடுத்தவர்களுக்கு வேலை பார்த்து தொழிலாளியாக இருந்து விட்டேன், தனக்கு வயது 45 ஆகிறது, இனிமேல் இருக்கிற சேமிப்பினை வைத்து ஏதாவது ஒரு தொழில் தமிழத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரிலோ அல்லது பக்கத்திலுள்ள பெரிய நகரிலோ ஆரம்பிக்கலாம் என்று நினைப்பதாகவும் ஒரு ஆலோசனை சொல்லுங்கள் என்றார். அவருக்கு சில ஆலோசனை வழங்கினேன். அவருடைய உணர்வினைப் பாராட்ட வேண்டும். காலம் முழுவதும் கசக்கி பிழியப்பட்டு, கைகட்டி நிற்கும் வேலைக்காரனாக இருப்பதினை விட்டு விட்டு கம்பீரமாக...