இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, June 7, 2012

பிரியாணி பார்சல் செய்து விற்கலாம்

கல்யாணமோ, காது குத்தோ, பார்ட்டியோ... ‘பிரியாணி உண்டா?’ என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. வேறு எந்த விருந்திலும் திருப்தியாகாத பலரும் ஒரு பிளேட் பிரியாணியில் சமாதானமடைந்து விடுவதைப் பார்க்கலாம். அதிலும் இஸ்லாமியர் செய்கிற பிரியாணிக்கு மவுசே தனி! சைவ, அசைவ பிரியாணி செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபாத்தி முத்து ஜோஹரா.

‘‘எட்டாவதுக்கு மேல படிக்கலை. கல்யாணத்துக்குப் பிறகு கணவரோட சம்பளத்துல குடும்பம் நடத்தறது சிரமமா இருந்தது. எங்க இனத்துல சின்ன விசேஷத்துலேர்ந்து நிக்ஹா வரைக்கும் எல்லாத்துக்கும் பிரியாணிதான். சுயஉதவிக் குழுவுல சேர்ந்தப்ப, அங்க யார் வீட்ல என்ன விசேஷம்னாலும், ‘நீங்க பண்ற பிரியாணி சூப்பரா இருக்குமே... செய்து தர்றீங்களா’னு கேட்பாங்க. நிறைய ஆர்டர் வருதே... இதையே ஏன் பிசினஸா பண்ணக் கூடாதுனு தோணுச்சு... அப்படி ஆரம்பிச்சதுதான்’’ என்கிற ஃபாத்திமுத்து, பிரியாணி செய்வதைக் கற்றுக்கொண்டு தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

 என்னென்ன தேவை?

‘‘சைவத்துக்குத் தனியா, அசைவத்துக்குத் தனியா பாத்திரங்கள், பாசுமதி அரிசி, மசாலா பொருள்கள், காய்கறி, சிக்கன், மட்டன், மளிகை சாமான்கள்... ஆரம்பத்துல 500 ரூபாய் முதலீடு இருந்தாலே போதும்.’’

என்ன ஸ்பெஷல்?

‘‘பிரியாணிங்கிறது எங்களுடைய பாரம்பரிய உணவு. என்னதான் ஸ்டார் ஓட்டல்ல சாப்பிட்டாலும், நாங்க வீட்ல பண்ற பிரியாணிக்கு எதுவுமே ஈடாகாது. அந்த சுவைதான் ஸ்பெஷல்... பிரியாணிக்குத் தொட்டுக்க செய்யற கத்தரிக்காய் பச்சடி... அதுவும் எல்லாருக்கும் அதே சுவைல வந்துடாது.’’

ஒரு நாளைக்கு எவ்வளவு? பிசினஸ் வாய்ப்பு?

‘‘செய்முறை பழகி, கைப்பக்குவம் வந்துட்டா, ஒரு நாளைக்கு ஒருத்தரே 10 கிலோ வரை செய்யலாம். பிசினஸா செய்ய நினைக்கிறவங்க, முதல்ல அக்கம்பக்கத்து வீடுகளுக்கு கொஞ்சம் சாம்பிள் கொடுத்துப் பார்க்கலாம். அப்புறம் அவங்கவங்க வீட்ல நடக்கிற சின்னச் சின்ன விசேஷங்களுக்கு 1 கிலோ, 2 கிலோனு ஆர்டர் எடுத்து செய்து தரலாம். அப்படியே பழகிட்டா, அப்புறம் கல்யாண ஆர்டர் எடுத்துச் செய்யற அளவுக்கு பக்குவம் தானா வரும்.’’

லாபம்?

‘‘இடம் அல்லது விழாவுக்குத் தகுந்தாற்போல விலை நிர்ணயிக்கலாம். வெஜிடபுள் பிரியாணி ஒரு பிளேட் 100 ரூபாய்க்கும், சிக்கன் பிரியாணி 130 ரூபாய்க்கும், மட்டன் பிரியாணி 160 ரூபாய் வரையும் விற்கலாம். தொட்டுக்க கத்தரிக்காய் பச்சடியும் தயிர் பச்சடியும் கொடுக்கணும். ரெண்டு மடங்கு லாபம் நிச்சயம்.’’
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மீன் பிரியாணி



தேவையான பொருட்கள்:

மீன் - 1 KG (முள்ளு இல்லாத எந்த மீனாக இருந்தாலும்)
பாசுமதி அரிசி –  1 KG
தக்காளி  - 1/2 KG
பெ..வெங்கயம் – 1/4 KG
தயிர் – 1/2 CUP
பச்சைமிளகாய் – 5
நெய் – 1/4 CUP
எண்ணெய் – 1 CUP
எலுமிச்சம்பழம் – 2 
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன் 
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் 
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு,பட்டை,விழுது – 5 ஸ்பூன் 
பிரிஞ்சி இலை – சிறிது 
சோம்பு,கசகசா – 3 ஸ்பூன் 
ஜாதிக்காய்,ஜாதிரம்,ஜாதிபத்ரி – 10 gm
முந்திரி,திராட்சை – 20 gm
ஏலக்காய் – 5 
உப்பு – தேவைக்கு 
கறிவேப்பிலை,புதினா,மல்லிதழை – தலா 1 கைப்பிடி 

செய்முறை:-

மீன் தயாரிக்க முதலில் மீனை சுத்தம் செய்து துண்டு போடவும், பின் அதில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுத்து முள் நீக்கி பிசிறி வைக்கவும்.

நெய் சாதம் தயாரிக்க பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து உப்பு.பட்டை,கிராம்பு,ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.

(குக்கரிலும் வைக்கலாம்)அரைக்க வேண்டியவை இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து அரைக்கவும்.சோம்பு, கசகசா  இரண்டையும் அரைக்கவும். ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்து பொடி செய்து கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும். 

மசாலா தயாரிக்க வணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி.அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி,பூண்டு,பட்டை விழுது சேர்த்து வதக்கவும். 

அத்துடன் கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி, போட்டு அத்துடன் பச்சைமிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும்.


முந்திரி,திராட்சையை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்.

பிரியாணி கலக்க குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்பு மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக பிசிறி விடவும்.

அடுத்து சாத்தை எடுத்து கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும்.இதேபோல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும்.பின்பு குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும், ஒரு விசில் வரும் முன்னே அடுப்பை அனைத்து விடவும்.

சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறலாம்.அல்லது சாதம் தனி மசாலா தனி என இரு வேறு பாத்திரத்தில் எடுத்து பரிமாறலாம்.சுவையான மீன் பிரியாணி தயார்!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


சிக்கன் பிரியாணி
விரைவில் தொடரும்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites