இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, June 9, 2012

தட்டில் பெயிண்ட்டிங் செய்து விற்கலாம்



















உடையிலிருந்து வீடு வரை இன்று எல்லாவற்றிலும் டிசைனர் மோகம்! நம்மிடம் இருப்பதைப் போல இன்னொருவரிடம் இருக்கக்கூடாது என்பதுதான் டிசைனர் ஸ்பெஷல்! அன்றாடம் வீட்டில் உபயோகிக்கிற பொருள்கள் வரை அந்த மோகத்தை எல்லாவற்றிலும் பார்க்க முடிகிறது.

ஞானமுத்ரா ராணி, விதம்விதமான டிசைனர் தட்டுகள் செய்வதில் நிபுணி! விருந்தினர்களை உபசரிக்க உதவும் ஜூஸ் தட்டு முதல், விசேஷங்களுக்கு உபயோகிக்கிற அலங்காரத் தட்டு, தாம்பூலத் தட்டு வரை பலவித தட்டுகள் செய்கிற இவர், பி.ஏ. பொருளாதாரம் முடித்துவிட்டு, பள்ளியொன்றில் கைவினைக்கலை ஆசிரியராக இருக்கிறார்.

''எங்கப்பா ஒரு சிற்பி. அவரைப் பார்த்து வளர்ந்ததால நிறைய கைவினைக்கலைகள் செய்யத் தெரியும். வீடுகள்ல தாம்பாளத் தட்டு வச்சிருப்போம். வீட்டுக்கு வர்றவங்களுக்கு காபி, டீ கொடுக்கிறதுலேர்ந்து, பூஜை வரைக்கும் அதையே உபயோகிக்க வேண்டியிருக்கும். எனக்கு ஆரத்தித் தட்டு செய்யத் தெரியும். கல்யாணங்களுக்கு ஆர்டர் எடுக்கிறவங்க, வீடியோல கலர்ஃபுல்லா தெரியற மாதிரி புதுவிதமான தட்டுகள் வேணும்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் டிசைனர் பிளேட்கள் செய்யறதுல ஆர்வம் அதிகமாச்சு. இப்ப வீட்டு உபயோகத்துக்கே வித்தியாசமான தட்டுகள் கேட்கறாங்க’’ என்கிற ஞானமுத்ரா, டிசைனர் பிளேட்கள் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘பிளைவுட் கட்டிங்ஸ், அக்ரிலிக் கலர்கள், குந்தன் ஸ்டோன், பசை, எம் சீல்... பிளைவுட் கட்டிங்குகளை ஷீட் கணக்குல வாங்கலாம். ஒரு ஷீட் 800 ரூபாய். 6க்கு 8 அளவுள்ள ஷீட்ல 22 தட்டுகள் வரை பண்ணலாம். ஷீட்களை வாங்கி, கார்பென்டர்கிட்ட கொடுத்துதான் வெட்டி வாங்கணும். ஒரு பீஸுக்கான கட்டிங் சார்ஜ், டிசைனை பொறுத்து 30 முதல் 50 ரூபாய் வரை. மொத்த முதலீடு ரூ.3 ஆயிரத்து 500.’’

எத்தனை மாடல்? ஒரு நாளைக்கு எத்தனை?

‘‘ஓவல், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், மாங்காய் வடிவம்னு கற்பனைக்கு எல்லையே இல்லை. ஒரு நாளைக்கு 8 முதல் 10 தட்டுகள் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘ஒரு தட்டுக்கான செலவு 80 ரூபாய்னா, அதை 200 ரூபாய் வரை விற்கலாம். 25 முதல் 75 ரூபாய் வரைக்கும் தின வாடகைக்கும் விடலாம்.’’

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites