இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, June 1, 2012

சேற்று நண்டு


சேற்று நண்டு
ஏற்றுமதி சந்தையில் அதிகம் தேவையிருப்பதால், சேற்று நண்டு, பிரபலமாகி வருகிறது. வர்த்தக ரீதியாக நண்டு வளர்ப்பு இப்பொழுது ஆந்திரம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் வேகம் பரவி வருகிறது.
சேற்று நண்டின் வகைகள்
கடலோர பகுதிகள், கழிமுகம் மற்றம் உப்பங்கழி ஆகிய பகுதிகளில், சில்லா (Scylla) என்ற வகை சேற்று நண்டுகள் காணப்படும்.
i. பெரிய இனங்கள் :
 • பெரிய வகை நண்டுகள் வட்டார மொழியில் 'பச்சை சேற்று நண்டு' என்ற அழைக்கப்படும்
 • இவை அதிகபட்சமாக 22 செ.மீ அகலமும், 2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை.
 • இவை சுதந்திரமாக வாழக்கூடியவை. இவைகளின் கால் போன்ற பகுதிகளில், பல கோண வடிவ வரிகள் காணலாம்.
ii. சிறிய வகைகள்:
 • சிறிய வகைகள், 'ரெட் கிளா' என்று அழைக்கப்படும்
 • இவை அதிகபட்சமாக 12.7 செ.மீ அகலமும், 1.2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை
 • இவைகளில் பல கோண வடிவ வரிகள் காணப்படாது. இவை மண் தோண்டும் பழக்கமுடையவை.
இரு வகைகளுக்கும், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தையில் அதிக தேவையுள்ளது.

              வளர்ந்த சேற்று நண்டு

வளர்ப்பு முறைகள்
சேற்று நண்டுகளை, இரு முறைகளில் வளர்க்கலாம்
i.குரோ - அவுட் முறை
 • இம் முறையில் இள நண்டுகள், தேவையான அளவு வளரும் வரை (5-ல் இருந்து 6 மாதம் வரை), வளர்க்கப்படும்.
 • இம்முறையில், நண்டுகள் வளர்ப்புக்கு, சாதாரணமாக குட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படலாம் அல்லது காணப்படாமலும் இருக்கலாம்.
 • குட்டையின் அளவு 0.5-லிருந்து 2 ஹெக்டெர் வரை இருக்கலாம். போதுமான வரப்பு மற்றும் கடல் நீர் மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.
 • குட்டை சிறியதாக இருப்பின், வேலிகள் இருக்க வேண்டும். இயற்கையான பெரிய குட்டைகளில், நீர் வெளியேறும் பகுதிகள் வலுவாக பாதுகாக்கப்பட வேண்டும்.
 • 10லிருந்து 100 கிராம் வரை அளவுடைய, இள காட்டு வகை நண்டுகளை விதை நண்டுகளாக வைத்துக் கொள்ளலாம்.
 • வளர்ப்பு காலம் 3ல் இருந்து 6 மாதங்கள் ஆகும்
 • ஒரு சதுர மீட்டருக்கு 1-லிருந்து மூன்று நண்டுகள் வரை இட்டு, துணை உணவு அளிக்க வேண்டும்.
 • பொதுவாக கழிவாகக் கருதப்படும் மீன்களுடன், வட்டாரத்தில் கிடைக்கும் ஏனைய உணவு வகைகள் நண்டுகளுக்கு உணவாக கொடுக்கப்படலாம். (உடல் எடையின் அளவின் 5 % எடை, ஒரு தினத்திற்கு உணவாக கொடுக்கப்பட வேண்டும்)
 • அடிக்கடி வளரும் நண்டினை எடுத்து, பொதுவான வளர்ச்சி மற்றும் உடல்நலத்தை கண்காணிக்க வேண்டும்.
 • மூன்றாவது மாதத்திலிருந்து தகுந்த எடையையுடைய நண்டினை அறுவைடை செய்யலாம். இந்த எண்ணிக்கை குறைப்பு மூலம், மற்ற நண்டுகள் நன்றாக வளர வாய்ப்பு உள்ளது.

ii. ஃபேட்டனிங்க (தடிமனாக்கம் ) முறை
மென் ஓடு நண்டுகளை, சில வாரங்கள், வெளி ஓடு தடிப்பு ஆகும் வரை வளர்க்கப்படும். இந்த கடின ஓடுடைய நண்டுகள், வட்டார வாக்கில் சேறு (சதை) என்று வழங்கப்படும். இவை சாதாரன மென் நண்டுகளை விட மூன்றில் இருந்து நான்கு மடங்க விலை அதிகமாக விற்கப்படும்
a. குட்டைகளில் தடிமனாக்கும் முறை
 • 1 - 1.5 மீ நீரின் ஆழம் கொண்ட, 0.025 - 0.2 ஹெக்டர் அளவுடைய கடலோர குட்டைகளில் தடிமனாக்கும் முறையை கையாளலாம்.
 • விதை மென் நண்டுகளை விடுவதற்கு முன்னர், குட்டையின் அடிப்புற நீரை வடிகட்டி, சூரியனால் உலர்த்தி, தேவையான அளவு சுண்ணாம்பை இட வேண்டும்.
 • குட்டையின் வரப்பை ஓட்டைகள், விரிசல்கள் இல்லாதவாறு, மொழுக வேண்டும். மதகு பகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இதன் வழியாக தான் நண்டுகள் தப்பிச் செல்லும்.
 • நுழைவாயில் பகுதியில், வரப்பை, மூங்கில் பாய்க் கொண்டு வலுவூட்ட வேண்டும்.
 • வரப்பினை மூங்கில் குச்சிகள் மற்றும் வலையினை கொண்டு சரியான முறையில் வேலியிட வேண்டும். நண்டு வெயியேறுவதை தவிர்க்க, இந்த வேலிகள், குட்டையில் உட்புறம் சாய்வலாக அமைய வேண்டும்.
 • மீனவர்கள் அல்லது நண்டு விற்பவர்களிடமிருந்து, விதை மென் நண்டினை வாங்கி, இதன் அளவை பொறுத்து, ஒரு சதுர மீட்டருக்கு 0.5-லிருந்து 2 வரை இட வேண்டும்.
 • சந்தையில், 550 கிராம் எடைக்கு மேல் உள்ள நண்டுகளுக்கு கிராக்கி அதிகம். எனவே இவ்வகை நண்டுகளை விதை நண்டாக விடுவது நல்லது. இவ்வாறு விடும் போது ஒரு சதுர மீட்டருக்கு ஒரு நண்டே இட வேண்டும்.
 • வட்டாரம் மற்றும் நீர் நண்டு கிடைப்பதை பொறுத்து, 6 - 8 தடிமனாக்கும் சுழற்சிகளை கையாளலாம்.
 • வளர்ப்பு குட்டை பெரியதாக இருப்பின், அதனை வெவ்வேறு பாத்திகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்து, வெவ்வேறு அளவுடைய நண்டினை வெவ்வேறு பாத்திகளில் விட்டு வளர்க்கலாம். இதனால் எளிதாக உணவு அளிப்பது, கண்கானிப்பது, அறுவடை செய்வது முடியும்
 • விதை நண்டு இடும் இடைவெளி அதிகமாக இருப்பின், ஒரே பாத்தியில் ஒரே மாதிரியான நண்டினை இடலாம்.
 • ஆண் நண்டு, பெண் நண்டினை தனித்தனி பாத்திகளில் வளர்ப்பதன் மூலம், வலிய ஆண் நண்டின் தாக்குதலை குறைக்க முடியும்.

b. அடைப்பு பகுதி மற்றும் கூண்டினில் நண்டினை தடிமனாக்கும் முறை
 • கழிமுக நீர் நிலைகளிலோ அல்லது பெரிய இறால் குட்டைகளிலோ, அடைப்புப்பகுதி, மிதக்கும் வலைக்கூண்டு அல்லது மூங்கில் கூண்டு ஆகியவற்றைக் கொண்டும் நண்டினை வளர்க்கலாம்.
 • நெட்லான் அல்லது மூங்கில் கம்புகள் கொண்டு வலைகளை உருவாக்கலாம்.
 • கூண்டின் அளவு 3மீ x 2மீ x 1மீ ஆகும்
 • வலைகளை வரிசையாக அடுக்குவதன் மூலம் உணவு அளிப்பது மற்றும் பராமரிப்பது எளிதாகம்.
 • ஒரு சதுர மீட்டர் கூண்டிற்கு, 10 நண்டுகளும், ஒரு சதுர மீட்டர் அடைப்பகுதிக்கு 5 நண்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கூண்டில் அதிகமான நணடுகள் இருப்பதால், நண்டின் கொடுக்கின் நுனியை கிள்ள வேண்டும். இதனால் தாக்குதல் குறைவு ஆகம்.
 • எனினும், குட்டைகளில் வளர்ப்பது போல் இம்முறை பிரபலம் ஆகபடவில்லை.
குரோ - அவுட் மற்றும் தடினமாக்கும் முறைகளை ஒப்பிடும் போது, தடிமனாக்கும் முறையிலேயே குறைந்த காலத்தில் அதிக இலாபம் கிடைக்கும். இந்தியாவில் நண்டு விதைகள் மற்றும் வர்த்தக ரீதியான உணவு கிடைக்காததால், குரோஅவுட் முறை பிரபலம் அடையவில்லை.

உணவு
Cநண்டுகளுக்கு தினமும் கழிவு மீன், வேகவைத்த கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றால், நண்டின் எடையளவில், 5-8% என்ற விகிதத்தில் உணவு அளிக்கப்படும். ஒரு நாளில், இருவேளை உணவு அளிக்கப்பட்டால், பெரும் பகுதியை சாயங்கால நேரத்தில் அளிக்க வேண்டும்.

நீர் தரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவு நீரீன் தரம் இருக்க வேண்டும்
உப்புத் தன்மை
15-25%
வெப்பம்
26-30 டிகிரி செல்சியஸ்
உயிர் வாயு
> 3 பி.பி.எம்
கார-அமில தன்மை
7.8-8.5

அறுவடை மற்றும் விற்பனை
 • ஒழுங்காக நண்டின் தடிப்பு தன்மையை கண்காணிக்க வேண்டும்.
 • அறுவடையை விடியற்காலையிலோ அல்லது சாயங்கால நேரங்களிலோ செய்ய வேண்டும்.
 • அறுவடை செய்யப்பட்ட நண்டுகளை நல்ல உவர்ப்பு நீரால் கழுவி அழுக்கு மற்றும் சேற்றை நீக்க வேண்டும். அவற்றின் கால்கள் ஒடியாதவாரு அவற்றை கட்ட வேண்டும்.
 • அறுவடை செய்யப்பட்ட நண்டுகளை ஈரப்பதம் உடைய சூழ்நிலையில் இட வேண்டும். அவற்றை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், சூரிய ஒளி நண்டுகளின் இறப்பை அதிகரிக்கும்

அறுவடை செய்யப்பட்ட நண்டு

  கடினமான சேற்று நண்டு 
அறுவடைக்கு பின்னர்

நண்டு வளர்ப்பின் பொருளாதாரம் - வருடத்திற்கு 6 வளர்ப்பு - (0.1 ஹெக்டர்கடற்கரையோர குட்டை)
வருடத்தின் நிலையான செலவு
ரூபாய்
குட்டை (குத்தகை செலவு)
10,000
மதகு வழி
5,000
குட்டை தயாரித்தல், வேலி அமைத்தல் மற்றும் இதர செலவுகள்
10,000


செயல்பாட்டு செலவு (ஒரு வளர்ப்புக்கு)

1. நீர் நண்டின் விலை (400 நண்டுகள், ரூ. 120/கிலோ ).
    120/kg)
36,000
2. உணவு செலவு
10,000
3. ஆட்கூலி
3,000
ஒரு வளர்ச்சிக்கு (மொத்தம்)
49,000
6 வளர்ச்சிக்கு மொத்தம்
2,94,000


.வருடாந்திர மொத்த செலவு
3,19,000


மகசூல் மற்றும் வறுமானம்

ஒரு சுழற்சியில் உற்பத்தியாகும் நண்டு
240 கிலோ
மொத்தம் 6 சுழற்சிக்கு (ரூ. 320/கிலோ)
4,60,800


நிகர வருமானம்
1,41,800

 • ஒரு சராசரியான குட்டைக்கு (ஒரு சிறு/குறு விவசாயினால் பராமரிக்க படகூடிய), பொருளாதார கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதை விடவும் சிறிய குட்டைகளிலும் வளர்க்கலாம்
 • நண்டின் அடர்த்தி குறைவு (ஒரு சதுர மீட்ருக்கு 0.4 எண்ணிக்கை) ஏனென்றால் பரிந்துரைக்கப்பட்ட அளவு 750 கிராம் ஆகும்.
 • முதல் வாரத்தில், நண்டின் எடையில் 10% என்ற விகிதத்தில் உணவும், பின்னர் 5% என்ற விகிதத்தில் உணவு அளிக்க வேண்டும். உணவு வீண் அடையாமல் இருக்கவும் மற்றும் தண்ணீரின் தரம் குறையாமல் இருக்கவும், உணவு தட்டுகளை பயன் படுத்தலாம்.
 • நன்றாக பராமரிக்கப்படும் குட்டைகளில், 8 முறை வளர்ச்சியை மேற்கொள்ளலாம் (80% - 85% உயிருடன் இருக்கும் நிலையில்) . ஆனால் இந்த கணக்கீட்டில் 75% உயிருடன் இருக்கும் நிலையில், 6 வளர்ச்சியே எடுக்கப்பட்டுள்ளது.

மூலம்: மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், கொச்சீன், கேரளா

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites