இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, February 20, 2012

அதிக வரவேற்புள்ள காலணி தொழில்நுட்ப துறை

பொதுவாக தோல் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் காலணி உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கின்றது.
சர்வதேச அளவில் தோல் தொடர்பான பொருட்கள் தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த காலணி உற்பத்தி என்பது, தோலை பதப்படுத்துதல், வடிவமைத்தல், நுணுக்கமான வேலைப்பாடுகளை செய்தல், காலணியாக தயாரித்தல் போன்ற எண்ணற்ற தொழில் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அமோக வரவேற்பு உள்ளது.
தோல் தொழில்நுட்பம் படித்தவர்களை விட பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர். நவீன பொருளாதாரச் சூழ்நிலையில் தோல் தொடர்பான படிப்புகளை முறையாக கற்று தொழில் தொடங்குபவர்கள் இந்த துறையில் அதிக இலாபத்தை ஈட்டும் நிலை உள்ளது.   
தோல் தொழில்நுட்பம் பயில விரும்பும் மாணவர்களுக்கு, புட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் (எப்டிடிஐ)ன் ஒருங்கிணைப்புடன், நொய்டா, சென்னை, கொல்கத்தா, ரோடக், ஜோத்பூர், சிந்த்வாரா ஆகிய இடங்களிலுள்ள எப்டிடிஐ பயிற்சி நிறுவனம் முழு நேர பயிற்சி அளிக்கின்றது. 
காலணி வடிவமைப்புத் துறையில் இக்னோ கடந்த ஆண்டு முதல் இளநிலை படிப்பாக பி.எஸ்சி., புட்வேர் டெக்னாலஜி, லெதர் கூட்ஸ் அண்ட் ஆக்ஸசரீஸ் டிசைன் ஆகிய படிப்புகளும் முதுநிலை படிப்பாக எம்.எஸ்சி (பேஷன் மெர்கண்டைசிங் அண்ட் ரீடைல் மேனஜ்மென்ட், புட்வேர் டெக்னாலஜி, கிரியேடிவ் டிசைனிங், லெதர் கூட்ஸ் அண்ட் அக்ஸசரீஸ் டிசைன்) போன்ற பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.  
இந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி நிறுவனத்துடன் (எப்.டி.டி.ஐ) இணைந்து துவக்கப்பட்ட இப்படிப்புகள் ஏற்கனவே இத்துறையில் பணிபுரிபவர்களின் அறிவு மேம்பாடு மற்றும் பாதி திறனுள்ள மற்றும் முழு திறனுள்ள பணியாளர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகள் மாணவர்களுக்கு புதிய வழிகாட்டியாக அமைவதுடன், இத்துறை சார்ந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பயிற்சியளிக்கப்பட்ட மனிதவளத்தை உருவாக்குதில் உதவி செய்கிறது.  
சென்னையில் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் சிப்காட் தொழில் பூங்காவில் காலணி தொழில் நுட்பக் கல்வியை வழங்கி வருகிறது, இக்கல்வி நிறுவனத்தில் காலணி செய்தல் மற்றும் தோலினால் வடிவமைக்கப்பட்ட இதர பொருட்களை உருவாக்குதல் உள்ளிட்ட நீண்டகால மற்றும் குறுகிய காலப் படிப்புகள் வழங்கப்படுகிறது. 
இளநிலை பட்டப்படிப்பில் பி.எஸ்சி., (புட்வேர் டெக்னாலஜி, பேஷன் மெர்கண்டைசிங் அண்ட் ரீடைல் மேனஜ்மென்ட் போன்ற படிப்புகளும் முதுநிலையில் கிரியேட்டிவ் டிசைன் கேட்/கேம், விசுவல் மர்கண்டைசிங் அண்ட் டிசைனிங் ஆகிய பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.  
இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளநிலை படிப்புக்கு +2 படிப்பில் தேர்ச்சியும், முதுநிலை படிப்புக்கு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். 
சிப்காட் தொழில் பூங்காவில் மாணவர்களுக்கு தேவையான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளான தங்கும் விடுதி ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக அமையப் பெற்றுள்ளது. மேலும் இத்துறை பற்றி விரிவாக கற்றுத்தர ஆய்வுக்கூட வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.  
இங்கு காலணித் தொழில்நுட்ப படிப்புகள் மட்டுமின்றி, நிர்வாக மேலாண்மை பயிற்சியும் கற்றுத்ததப்படுகிறது. எனவே படிப்பு முடித்தவுடன் தோல் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி இதர நிறுவனங்களான உற்பத்தி மேலாளர், நிர்வாக மேலாளர் மற்றும் கிடங்கு மேலாளர் போன்ற இடங்களில் பணிக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.  
காலணி தொழில்நுட்ப துறையில் பட்டம் பெறும் மாணவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். மேற்கொண்டு இத்துறையில் முதுகலைப் படிப்பையும் படிக்கலாம். தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள், முதலில் காலணி தொழில் நிறுவனங்களில் பணியாற்றி அந்த அனுபவத்தோடு சுயமாக தொழில் துவங்கி சாதனை படைக்கலாம்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites