இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, February 7, 2012

டி சர்ட்டில் ஸ்கர்ட்

டி சர்ட்டில் ஸ்கர்ட்
தேவையானவை
டி சர்ட் 1 [பனியன்கிளாத்]
பூனம் துணியில் 1 யாட் [2 முழம்]
நூல்
கத்த்ரிக்கோல்
தையல் மிசின் [இதில்லாம எப்புடிதைக்கமுடியும் ஹி ஹி கையாலும் தைக்கலாம்]
டி சர்ட்டை  இதுபோல் கீழ்பாகத்தில் நறுக்கவும் அதாவது இடுப்புபட்டிக்கு தேவையானைதை
அதோடு பூனம் துணியை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும் அடுக்கு கொசுவம் வைப்பதற்கு தோதாக[ஏதுவாக]
இது  ஸ்கர்ட்டுக்கு இடுப்பளவுக்கு தேவையான பட்டி
இடுப்புபகுதிக்கு எளாஸ்டிக்கும் வைக்கலாம். ஜிப்பும் வைக்கலாம்.
அதை ஒருபுறம் இணைக்கவும்
இதேபோல் இணைத்துக்கொண்டு

பூனம்துணியை இரண்டாக மடித்து அந்த இடுப்புப்பட்டியில் சேர்த்து அடுக்கியதுபோல் கொசுவம் வைத்து  தைக்கவும்

தைத்ததும் மறுபுறமும் இணைத்தது திருப்பினால் இதுபோல் வரும்

இது மேல்கவுனுக்கு
அதில் காலியாக இருக்கும் கழுதின் கீழ் இதுபோல் திருடி கலர்ஸ் வைத்து டிசைன் செய்துக்கொள்ளலாம் பார்க்க அழகாகயிருக்கும். இந்த டிசைன் செய்து 1 மணிநேரம் காயவிடனும். தைத்திவிட்டும் செய்யலாம்.

 மேல்கவுனுக்குக்கும் அதன் ஒருபுறத்தை முதலில் தைத்துஇணைத்துவிட்டு, அதேபோல் அடுக்கி தைக்கவும்
இதற்கு தாங்களின் இஸ்டத்திற்கு தகுந்தார்போல் இரு அடுக்கு.
 ஒரு அடுக்கு எனத் தைக்கலாம்

நான் தைத்திருப்பது இரு அடுக்கு.

இப்போது மினி ஸ்கர்ட் அன் கவுன் ரெடி.

இதை தத்தித்ததி நடக்கும் அழகுகுட்டிகளுக்கு போட்டால் அழகு டபுளாகும்.
 சிறிதாக ஆகிவிட்ட டிசர்ட்டில்கூட[ புதிதாக இருந்தால்]0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites