இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, February 19, 2012

நல்ல லாபம் தரும் “ரோலர் பாலிஷ்” தொழில்

 
ட்டு புடவைகள்,காட்டன் புடவைகள் மற்றும் விலை உயர்ந்த புடவைகளை வீட்டிலேயே சலவை செய்தால் அதன் நிறமோ தரமோ குறைய வாய்ப்புண்டு. எனவே ‘டிரை வாஷ் ‘ எனும் உலர் சலவை செய்து, ரோலர் பாலிஷ் மூலம் புடவைகளை புத்தம் புதியதாக்கிவிடுகிறார்கள். இதனால் புடவைகள் பளபளப்புடனும், மடிப்பு கலையாமலும் இருக்கிறது.
தேவையான முதலீடு:
ரோலர்களை வாங்குவதற்கு அதிகபட்சமாக 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை.
உலர்த்துவதற்கு தேவையான இடவசதி.
லாபம்:
20-25  சதவீதம் வரை.
சாதகமான அம்சங்கள்:
  • வீட்டிலேயே குடும்ப தொழிலாக இதை செய்யலாம்.
  • பெரிய தொழில்நுட்பங்கள் கிடையாது.
  • டிரை வாஷ் நிறுவனங்களே தேடி வந்து வேலை தரும்.
  • ஓய்வு நேரத்தில் கூட ஈடுபடலாம்.
  • அலைச்சல் இல்லை.
  • போட்டி இல்லை.
  • மார்கெடிங் செய்ய வேண்டியது இல்லை.
பாதகம்:
  • இதற்குரிய ரோலர்களை ஆர்டர் கொடுத்து தான் வாங்கவேண்டும்.
  • மழைக்காலம் என்றால் பாலிஷ் செய்த புடவையை உலர்துவதில் சிரமம் இருக்கும்.
குடும்ப தொழிலாக செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 100  புடவைகள் வரை ரோல் செய்யலாம். ஆர்டர்களுக்கேற்ப வருமானம் நிரந்தரமாக இருக்கும். பொதுவாக விலை வுயர்ந்த புடவைகளை யாரும் வீட்டிலேயே துவைப்பதில்லை. வெறுமனே டிரை வாஷ் செய்தால் சுருக்கங்கள் அப்படியே இருக்கும். எனவே டிரை வாஷ் செய்யும் நிறுவனங்களே உங்களை தேடிவந்து வேலை தருவார்கள். புடவைகள் புதியது போல சுருக்கம்கள் இல்லாமல் புதியது போல பளிச் என இருப்பதால் ரோலர் பாலிஷ்க்கு நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites