பார்த்த நொடியில் கவனம் ஈர்க்கின்றன சாந்தி செய்கிற மெழுகு பொம்மைகள். பரிசளிக்கவும் அலங்காரமாக வைக்கவும் ஏற்ற வகையில் மிக்கி மவுஸ், பிள்ளையார் என விதம்விதமான உருவங்களில் அசத்துகின்றன அத்தனையும். குறைந்த முதலீடும் குறைந்த நேர உழைப்பும் தேவைப்படுகிற மெழுகு பொம்மை தயாரிப்பு, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்குக் கணிசமான லாபம் தரும் என்கிறார் சாந்தி.
‘‘ஒரு எக்சிபிஷன்ல இதே மாதிரி பொம்மைகளைப் பார்த்தேன். அதைப் பண்றவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கத்துக்கிட்டேன். வீட்டுக்கு வர்றவங்களுக்கு அதை அன்பளிப்பா கொடுக்க ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு பிறந்த நாள் பார்ட்டில கொடுக்கிறதுக்கும், கொலுவுக்கும் மொத்தமா ஆர்டர் வர ஆரம்பிச்சது. அப்படியே வளர்ந்து, இன்னிக்கு கடைகளுக்கும் சப்ளை பண்றேன். இதைச் செய்யறது ரொம்ப சிம்பிள். பெரிய உடலுழைப்பு தேவையில்லை. ஆனா, திருப்தியான லாபம் நிச்சயம்’’ என்கிறவர்,...