இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 21, 2014

மஞ்சள் (குர்குமா லாங்கா)


ஜின்ஜிபெரேசியே
இரகங்கள் : கோ 1, பிஎஸ்ஆர் 1,2 (பவானிசாகர் 1,2) ரோமா, ஸ்வெர்ணா, சுதர்ஷனா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா விரலி மஞ்சள்,ஐஐஎஸ்ஆர் பிரபா, ஐஐஎஸ்ஆர் பிரதீபா, ஐஐஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும் ஐஐஎஸ்ஆர் கெடாரம்.
உள்ளூர் வகைகள் : ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள் முக்கிய நாட்டு வகைகள் ஆகும்.
கோ 1
பிஎஸ்ஆர் 1
பிஎஸ்ஆர் 2
மண் மற்றும் தட்பவெப்ப நிலை: மஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும். நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் இருபண்பாடு நிலம் மிகவும் உகந்தது. மஞ்சள் பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது, ஆண்டு ஒன்றுக்கு சராசரி மழை 1500 மி.மீ மேல் உள்ள பகுதிகளில் மஞ்சளை மானாவாரியாக பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களிலும் சாகுபடி செய்யலாம்.
மஞ்சள் வயல்மஞ்சள் பூ
பருவம் : தமிழ்நாட்டில் மே - ஜூன் மாதம் மிகவும் ஏற்ற பருவமாகும்.
விதை நேர்த்தி
  • விதை கிழங்குகளை போசலோன் 35 EC 2 மிலி/ லிட்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 WSC 1.5 மிலி/லிட்டர் நீரில் நனைக்க வேண்டும். 0.3% காப்பர் ஆக்ஸி குளோரைடு கொண்டு 30 நிமிடங்களில் ஊற வைக்க வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் 10 கிராம் மற்றும் டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விரலி மஞ்சள் கிழங்குகள்
பயிர்ப் பெருக்கம் :
தாய் கிழங்கு மற்றும் விரலி கிழங்குகளை கொண்டு பயிர்ப்பெருக்கம் செய்யலாம்.
விதையளவு - 2000 கிலோ / எக்டர் (விரலி கிழங்கு).                                                                                                        
நடவு வயல் தயார்படுத்துதல் :உளிக்கலப்பை மற்றும் சட்டிக் கலப்பை கொண்டு வயலை உழ வேண்டும். அதன்பிறகு சிறு கலப்பை கொண்டு இரண்டு முறை உழ வேண்டும். வரப்பு மற்றும் வாய்க்கால்களை 45 செ.மீ இடைவெளியில் அமைக்க வேண்டும் (அ) மேட்டுப் பாத்திகளை 120 செ.மீ அகலத்தில் 30 செ.மீ இடைவெளியில் அமைக்க வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தை கொண்டு, படுக்கைகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் 8-12 மணி நேரம் நீர் பாய்ச்ச வேண்டும்.
இடைவெளி : 45 x 15 செ.மீ 20-30 கிராம் எடையுள்ள விதைக் கிழங்குகளை 4 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும்.
அடியுரம்: எக்டருக்கு 25 டன் தொழுஉரம், 200 கிலோ வேப்பம் (அ) கடலை புண்ணாக்கு, 25:60:108 கிலோ NPK, 30 கிலோ பெரஸ் சல்பேட் மற்றும் 15 கிலோ ஜிங்க் சல்பேட், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை நடவின் போது இட வேண்டும்.

மேலுரம் : எக்டருக்கு 25:108 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்தினை நட்ட 30, 60, 120 மற்றும் 150வது நாளில் இட வேண்டும்.
நுண் ஊட்டச்சத்து பயன்பாடு
போரான், இரும்பு மற்றும் துத்தநாகம் ஒவ்வொன்றையும் போராக்ஸ், பெரஸ் சல்பேட், துத்தநாக சல்பேட்டாக யூரியாவை 375 கிராம் என்ற அளவில் எக்டருக்கு 250 லிட்டர் தண்ணீரில் கலந்து கிழங்கின் வளர்ச்சிப் பருவத்தில் தெளிக்கவும். இதனை 25 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள நுண் ஊட்டச்சத்துக்களை சூப்பர் பாஸ்பேட் கூழ் மருந்தில் கலக்க வேண்டும் (15 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை 25 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து பின்பு 250 லிட்டர் தெளிந்த நீர்மமாக இந்த சூப்பர் பாஸ்பேட் கூழ்மருந்து தயாரிக்கப்படுகிறது).
நீர்வழி உரமிடுதல் : 
நீர்வழி உரமிடுதல் மூலம் 150:60:108 NPK / எக்டர் என்ற பரிந்துரைக்கப்பட்ட உர அளவினை பயிர்க்காலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 75 சத மணிச்சத்தினை அடியுரமாக அளித்தல் வேண்டும். நீரில் கரையக் கூடிய உரங்களான 19:19:19, மோனோ அம்மோனியம் பாஸ்போட்டை (12:61:0), மல்டி பொட்டாசியம் (13:0:45) மற்றும் யூரியாவை பயன்படுத்தலாம்.

மஞ்சளுக்கு நீர்வழி உரமிடுதலின் அட்டவணை :
பயிர் பருவம்
கால அளவு
(நாட்கள்)
தேவையான
ஊட்டச்சத்து (%)
பயன்படுத்தும் அளவு (கிலோ/எக்டர்)
நடவு முதல் உருவாகும் பருவம் வரை
15
10
20
10
19:19:19
மல்டி பொட்டாசியம்
யூரியா
15.78
17.33
21.20
வளர்ச்சிப் பருவம்
60
40
30
20
19:19:19
மல்டி பொட்டாசியம்
யூரியா
9.83
96.00
100.57
கிழங்கு உருவாகும் பருவம்
60
30
30
30
19:19:19
மல்டி பொட்டாசியம்
யூரியா
4.91
71.28
76.29
கிழங்கு முதிர்வு பருவம்
135
20
20
40
19:19:19
மல்டி பொட்டாசியம்
யூரியா
15.78
40.42
47.06
மொத்த கால அளவு
270
100
100
100
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
களை நிர்வாகம் : நட்ட மூன்றாவது நாளில் பேஸலின் களைக் கொல்லி 2 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். நடவு செய்த 30வது நாளில் முதல் களையும், பின் 50,120 மற்றும் 150 நாட்களிலும் களை எடுக்கவேண்டும்.
ஊடுபயிர் : மஞ்சளை இளந் தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக பயிர் செய்யலாம். மஞ்சள் தோட்டத்தில் கொத்தமல்லி, வெந்தயம், மிளகாய், பயறுவகைகள் போன்ற பயிர்களை அகன்ற இடைவெளியில் பயிருக்கு தக்கவாறு ஊடுபயிராகப் பயிரிடலாம். மஞ்சளை சிறிதளவு நிழலிலும் சாகுபடி செய்யலாம். நிழல் ஒழுங்கு படுத்தும் பயிராக அகத்தி மற்றும் ஆமணக்கு போன்ற பயிர்களைப் பயிரிடலாம்.
சின்ன வெங்காயத்தை ஊடுபயிராகப் பயிர்  செய்வதாக இருந்தால், பேஸலின் மருந்தை சின்ன வெங்காயம் விதைப்பு செய்தவுடன் மண்ணின் மீது தெளிக்கவேண்டும். பேஸலின் தெளித்த பகுதிகளில் நடக்கக்கூடாது. நடந்தால் மருந்து காலில் ஒட்டிக்கொள்ளும். அந்த இடத்தில் களைகள் முளைத்துவிடும். எனவே, களைக்கொல்லி தெளிக்கும் போது பின்நோக்கி நடக்கவேண்டும். அல்லது பக்கவாட்டில் நடக்கவேண்டும். நீர்ப்பாசனம் செய்த பின்னர் தான் நிலத்தில் நடக்கவேண்டும். பெல்லாரி வெங்காயம் நடவு செய்யவேண்டும் எனில் களைக்கொல்லி தெளித்து நீர்ப்பாசனம் செய்த பின் நடவு செய்யவேண்டும்.
மஞ்சள் ஊடுபயிரில் சொட்டு நீர்ப்பாசனம்

மஞ்சள் + மிளகாய்மஞ்சள் + வெங்காயம்மஞ்சள் + வெங்காயம் + வெண்டை
மண் அணைத்தல் : இரண்டாவது மேலுரம் மற்றும் நான்காவது மேலுரம் இடும்போது மண் அணைக்கவேண்டும்.
நீர் நிர்வாகம்
மஞ்சள் நடவுக்கு முன்பு, பிறகு நடவு செய்த மூன்றாம் நாளும் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
நடவுக்கு முந்தைய நேர்த்தி
விதைக் கிழங்குகளை 1 கிராம் / லிட்டர் கார்பன்டாசிம் மற்றும் போசலோன் 35 EC 2 மிலி/ லிட்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 WSC 1.5 மிலி/ லிட்டரில் ஊற வைப்பதன் மூலம் கிழங்கழுகல் மற்றும் செதில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

பூச்சிகள்
செதில் பூச்சி : இவை மஞ்சளின் கிழங்குப் பகுதியினைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும். இதனால் கிழங்குகள் சுருங்கி, பின் காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து, கிழங்குகளை நடவு செய்யவேண்டும். செதில் பூச்சியால் பாதிக்கப்படும் சேனைக்கிழங்கு போன்ற பயிர்களை மஞ்சள் பயிரிடும் நிலத்தில் பயிர்  செய்யக்கூடாது. நடவு செய்யப்பட்ட வயலில் செதில் பூச்சிகளை ஒழிக்க டைமீதோயேட் (ரோகார்) 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகம் நனையும்படி ஊற்றவேண்டும்.
தண்டுத் துளைப்பான் : எண்டோசல்பான் 0.1 சதம் தெளிக்கவேண்டும். தண்டுத் துளைப்பான் விரும்பி உண்ணும் ஆமணக்கு, மாதுளை, பலா, இஞ்சி போன்றவை மஞ்சள் தோட்டத்திற்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இலைப்பேன் : இலைகளில் சாறை உறிஞ்சி பயிர்களை வாடச்செய்யும். மெட்டாசிஸ்டாக்ஸ் மற்றும் டைமெத்ரான் 750 மில்லி , தெளிப்பதன் மூலம் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.
நூற்புழு : செம்மண் கலந்து மணற்பாங்கான இடங்களில் நூற்புழு தாக்குதல் தென்படும். இவை மஞ்சளைத் தவிர புகையிலை, மிளகாய், கத்தரி, வாழை, கனகாம்பரம் ஆகிய பயிர்களைத் தாக்கும். எனவே இவற்றை ஊடுபயிராகப் பயிரிடுவதைத் தவிர்க்கவேண்டும். செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம். நூற்புழுத் தாக்குதலைக் குறைக்க ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும். மீண்டும் யூரியா இடும்போது 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும். நட்ட 5வது மாதத்தில் ஒரு எக்டருக்கு 35 கிலோ கார்போபியூரான் குறுணையை செடியைச் சுற்றி 2-3 செ.மீ ஓரத்தில் இடவெண்டும். பின்பு மணல் கொண்டு மூடி நீர்ப்பாய்ச்சவேண்டும்.
நோய்கள்
கிழங்கழுகல் நோய்
  • விதை கிழங்குகளை 0.3% காப்பர் ஆக்ஸிகுளோரைடு கொண்டு 30 நிமிடங்கள் நேர்த்தி செய்ய வேண்டும் (அ) 1% போர்டோ கலவை (அ) 0.25% காப்பர் ஆக்ஸிகுளோரைடு (அ) 0.1% ரிடோமில் கொண்டு நனைக்க வேண்டும்.
  • சூடோமேனாஸ் ப்ளுரசன்ஸ் 10 கிராம் / கிலோ மற்றும் டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் ப்ளரசன்ஸ் மற்றும் 2.5 கிலோ டிரைகோடெர்மா விரிடியை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து அடியுரமாகவும் நட்ட 150வது நாளில் மேலுரமாகவும் அளிக்க வேண்டும்.
இலைத் தீயல்நோய்
பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எடுத்து எரித்துவிடவேண்டும். பின் காப்பர் ஆக்சி குளோரைடு 1250 கிராம் ஒரு எக்டருக்கு அல்லது மேன்கோசெப் 400 கிராம் ஒரு எக்டர் என்னும் அளவில் நோய் கண்டவுடன் தெளிக்கவும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து, இரண்டு அல்லது  மூன்று முறை 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
இலைத் தீயல்நோய்
இலைப்புள்ளி நோய்
இலைத்தீயல் நோய்க்கு உரிய மருந்துகளை இதற்கும் பயன்படுத்தி இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
பயிர்  மஞ்சாளதல், சாய்தல், உலர்ந்துவிடுதல் போன்றவை அறுவடைக்கான அறிகுறியாகும். கிழங்குகளை மண்வெட்டி அல்லது குழிதோண்டும் கருவி கொண்டு தோண்டி எடுக்க வேண்டும்.
அறுவடை மற்றும் கிழங்குளை சுத்தப்படுத்தல்
மகசூல்
பதப்படுத்தப்படாத கிழங்குகள்    :  25-30 டன்/எக்டர்
பதப்படுத்தப்பட்ட கிழங்குகள்      :   5-6 டன்/எக்டர்
விதைக் கிழங்குகளை சேமித்தல்:
விதைக் கிழங்குகளை பகுதி மூடப்பட்ட பந்தலின் கீழ் மணல் ஊடகத்தில் வைத்து சேமிக்க  வேண்டும்.

சந்தை தகவல்கள்
பயிரிடும் மாவட்டங்கள்கரூர், விழுப்புரம், கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு
முக்கிய சந்தைகள்ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், சேலம் மற்றும் தர்மபுரி
முன்னுரிமை இரகங்கள்ஈரோடு லோக்கல், பி. எஸ். ஆர், சேலம் இரகம்
தரம்பளிச்சென்ற மஞ்சள் நிறம், 3 செ.மீ க்கு மேலே நீளம், கடினமான, உடைத்தால் உலோக ஒலி கொடுக்கும், மென்மையான தோலுடைய, மாசு இல்லாத

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites