இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 21, 2014

வெனிலா (வெனிலா பிளானிபோலியா)


ஆர்கிடேசியே
வெனிலா தோப்பு
மண்  
அங்ககச்சத்து நிறைந்த நல்ல வடிகால் வசதியுடைய மண் சாகுபடிக்கு ஏற்றதாகும்.

தட்பவெப்பநிலை 
சிறந்த வளர்ச்சிக்கு 150-300 செ.மீ சராசரி வருட மழையளவு கொண்டிருத்தல்  வேண்டும். இந்த மழையளவு பயிர் வளர்ச்சியின் போது (9 மாதங்கள்) கொண்டிருக்க வேண்டும். மேலும் பூக்கும் தருணத்தில் (3 மாதங்கள்) மழையிருத்தல் கூடாது.
உயரம் : இப்பயிரினை கடல் மட்டத்திலிருந்து 700 முதல் 1500 மீட்டர் வரை உயரம் மற்றும் 100 வடக்கு மற்றும் 200 தெற்கு அட்சரேகை கொண்ட பகுதியில் சாகுபடி செய்யலாம்.
வெப்பநிலை: 210 செ – 320 செ.
கொடி படர துணை மரம் நடவு செய்தல்
கிளிரிசிடியா, கல்யாண முருங்கை, காட்டாமணக்கு, சம்பங்கி மற்றும் சவுக்கு போன்ற மரங்களை மழைக்காலங்களில் (மே மற்றும் ஜூன்) நடவு செய்யலாம்.
வெனிலா நடவு பருவம்
துணை மரங்கள் நட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு வெனிலா நடவு செய்ய வேண்டும். அதாவது செப்டம்பர் – அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.
பயிர்ப்பெருக்கம்
வேர்விடாத குச்சிகள் (60 - 120 செ.மீ)

இடைவெளி
  • சமவெளி பகுதி : 2.0 to 2.5 மீ X 1.2 – 1.5 மீ
  • மலைப்பகுதி : 1.5 x 1.5 மீ
நடவு 
தாங்கு மரம் மற்றும் வெண்ணிலா நடவு  செய்ய 30 x 30 x 30 செ.மீ குழிகள் எடுக்கவேண்டும். வேர்விடாத குச்சிகளை (60 - 120 செ.மீ)  தேர்வு செய்து நடவின்பொது குச்சிகள் மண்ணுள் புதையும்படி நடவு செய்யவேண்டும்.
வளர்ச்சி சீரமைப்பு 
கொடிகளை 1.2 - 1.5 மீட்டர் வளரச் செய்து பின் பற்று மரத்தாங்குகளில் கீழ்நோக்கி வளருமாறு சீரமைக்கவேண்டும். அவ்வாறு வளர்ந்த கொடிகள் மண்ணில் புதையச் செய்து வேரூட்டம் செய்யவேண்டும். வேர் ஊன்றிய பின்னர் மேல் நோக்கி வளரச் செய்து பற்று / தாங்கு மரங்களில் படரச் செய்யவேண்டும். இம்முறையினைத் தொடாந்து செய்தல்வேண்டும்.
உர நிர்வாகம் 
வெண்ணிலா வளர்ச்சிக்கு மக்கு உரங்களைப் பெருமளவில் பயன்படுத்தவேண்டும். எனவே வளர்ந்த தாவரப் பகுதிகளை கவாத்து செய்து வேர்ப்பகுதியிலிட்டு மக்கச்செய்யலாம். மேலும் ஒரு வருடத்திற்கு கொடி ஒன்றிற்கு 40-60 கிராம் தழைச்சத்து + 20-30 கிராம் மணிச்சத்து + 60-100 கிராம் சாம்பல் சத்து இடவேண்டும். இதனை 2 (அ) 3 முறை பிரித்து இடவேண்டும். சிறந்த வளர்ச்சிக்கு இலை வழியாக ஊட்டச்சத்துக்களை தெளிக்கவேண்டும்.  1 சதவீதம் 17:17:17 தழை, மணி, சாம்பல் சத்துக்கலவையினை மாதம் ஒரு முறை தெளிக்கவேண்டும்.
பூத்தல்
வெண்ணிலா நடவு செய்த மூன்றாவது வருடத்திலிருந்து பூக்கத் தொடங்கும். இப்பயிரானது டிசம்பர் - ஜனவரி மாதங்களில் பூக்கத் தொடங்கும்.  பூக்கும் தரணத்திற்கு 6-8 மாதத்திற்கு முன்பு நுனிப் பகுதியினை 7.5 – 10 செ.மீ அளவில் வெட்டி விடுதல்வேண்டும். இவ்வாறு பூக்கும் / அரும்பு முதிர்ந்த தண்டுகளைக் கவாத்து செய்தவன் மூலம் அதிக மொட்டுக்கள் கிடைக்கும். ஒவ்வொரு பூங்கொத்திலும் 15-20 பூக்களைக் கொண்டிருக்கும்.
வெனிலா பூக்கள்

மகரந்தச்சேர்க்கை 
மகரந்தச்சேர்க்கையினை மலர்ந்த அன்றே காலை 4.00 முதல் மதியம் 1.00 மணிக்குள் செய்து முடிக்கவேண்டும். ஒரு கொடியில் 10 முதல் 20 பூங்கொத்துகளை மகரந்தசேர்க்கை செய்தல்வேண்டும். பொதுவாக பூ கொத்தில் கீழ்ப் பகுதியிலுள்ள 5-6  பூக்களை மகரந்தச்சேர்க்கை செய்தல்வேண்டும். ஒரு பழக்கப்பட்ட / கைத்தேர்ந்த வேலையாள் நாளொன்றுக்கு 1000-1500 பூக்கள் மகரந்தச்சேர்க்கை செய்யலாம்.
வெனிலா முதிராத பீன்ஸ்
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
இலைத் தின்னும் புழுக்கள், உண்ணும் வண்டுகள் மற்றும் புழுக்கள்
குயினால்பாஸ் 0.05 % தெளிக்கவும்.
நோய்கள்
புசேரியம் வாடல் நோய்
  • இதனை கட்டுப்படுத்த 0.1 சதவீதம் கார்ப்னடாசிம் வேர்ப்பகுதி நனையுமாறு ஊற்றவேண்டும். மேலும் அதே அளவினை இலையின் மீது தெளிக்கவேண்டும்.
பைடோப்தோரா அழுகல் நோய் 
இந்நோயினை கட்டுப்படுத்த 1 சதவீதம் போர்டோக்கலவையினை தெளிக்கவேண்டும். மேலும் 0.2 சதவீதம் காப்பர் ஆக்சிகுளோரைடை வேர்ப்பாகத்தில் கரைத்து ஊற்றவேண்டும்.
நுனி அழுகல் மற்றும் ஸ்கிளோர்சியம் அழுகல் நோய் 
0.1 % கார்பன்டாசிம் கொண்டு மண்ணை நனைக்க வேண்டும்.
அறுவடை
காய்கள் / பீன்ஸ் மலர்ந்த 6 முதல் 9 மாதங்களில் அறுவடை செய்யலாம். முதிர்ந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இள மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அறுவடை செய்யவேண்டும். தினசரி முதிர்ந்த காய்களை கத்தியினைக் கொண்டு அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்
  • ஒரு வருடத்தில் ஒரு எக்டரலிருந்து 300-600 கிலோ பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் கிடைக்கும்.
  • 1 கிலோ பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் கிடைக்க 6 கிலோ பச்சை பீன்ஸ் தேவைப்படும்.
  • இலாபகரமான மகசூலுக்கு கொடிகளை 12-14 வருடம் வரை வளர்க்கலாம்.
பதப்படுத்தப்பட்ட பீன்ஸ்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites