இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 21, 2014

சீரகம் (ஃபியோனிகுலம் வல்கேர்)


ஏபியேசியே
சீரக செடி
இரகங்கள் :கோ 1, கோ 2, யூ எஃப் 32, பி ஃப் 35 மற்றும் குஜராத் சீரகம் 1
கோ 1
மண் : ஆழமான வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு செழித்து வளரும்.
தட்பவெப்பநிலை : குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலையில் நன்கு வளரும்.
பருவம் :
மலைப்பகுதிகளுக்கு : மே - ஜுன்,
சமவெளிப் பகுதிகளுக்கு : அக்டோபர் - நவம்பர்.  அதிக மழை பெய்யும் காலங்களில் பயிர் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
விதையளவு
நேரடி விதைப்பிற்கு எக்டருக்கு 9-12 கிலோ நாற்று விட்டு நடவு செய்ய 3-4 கிலோ, ஒரு எக்டர் நடவு செய்ய நாற்றாங்காலுக்கு 100 சதுர மீட்டர் அளவுள்ள பரப்பு தேவை.
நிலம்  தயார்படுத்துதல்
  • நடவு வயலை நன்றாக உழ வேண்டும்.
  • ஹெக்டருக்கு 10 கிலோ தொழுவுரம் கடைசி உழவின் போது இட வேண்டும்.
  • பாத்திகளை அமைக்க வேண்டும்.
  • முளைக்கும் முன் ஹெக்டருக்கு 1 கிலோ பென்டிமெத்திலின் தெளிக்க வேண்டும்.
நடவு : 5-6 வாரங்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 x  30 செ.மீ இடைவெளியில் நடவேண்டும்.
பயிர்க்கலைத்தல் :
நேரடி விதைப்பு முறையில் 4-5 வார வயதுள்ள நாற்றுகளை 25-30 செ.மீ இடைவெளியில் கலைத்தல் வேண்டும்.
நீர் நிர்வாகம் :
விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். பின்பு, 3 முதல் 4 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும். பிறகு மண்ணின் ஈரத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரமாக எக்டருக்கு தொழு உரம் 10 டன்கள், 25 கிலோ தழைச்சத்து, 10 கிலோ மணிச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.
மேலுரம் : செடிகள் பூ விடும் தருணத்தில் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.
பயிர்இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)இப்கோ டிஏபி, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)
தழைமணிசாம்பல்டிஏபியூரியா
சீரகம்அடியுரம்
25
10
0
22
46
மேலுரம்
25
0
0
0
55
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி :
களைகள் முளைக்கும் முன்னர் எக்டருக்கு ஒரு லிட்டர் பென்டிமித்திலின் களைக்கொல்லி தெளிக்கவேண்டும். பிறகு இரண்டு அல்லது மூன்று முறை கைக்கிளை எடுக்கவேண்டும். 3வது மாதத்தில் செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
அசுவினிப் பூச்சி : இப்பூச்சியைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30 இசி 2 மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
சாம்பல்நோய் : நோய் தோன்றும் போது எக்டருக்கு 25 கிலோ சல்பரை தூவ வேண்டும் அல்லது லிட்டருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
சீரக பூ
அறுவடை :
பயிர் 7-8 மாதத்திற்குள் அறுவடைக்குத் தயாராகிவிடும். 10-15 நாட்கள் இடைவெளியில் காய்ந்த பூங்கொத்துக்களை அறுவடை செய்யவேண்டும். பிறகு இவற்றை வெய்யிலில் 4-5 நாட்கள் உலர்த்தி, பின் குச்சியில் தட்டி விதைகளைத் தனியாகப் பிரித்து எடுக்கவேண்டும்.
சீரக விதைகள்

மகசூல் : எக்டரிலிருந்து 500-750 கிலோ விதைகள் ஒரு வருடத்திற்கு.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites