இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, September 17, 2014

5 ஜம் ஜம் ஜாம்!



5 Jum Jum Jam!


நீங்கதான் முதலாளியம்மா!

குழந்தைகளைப் பழங்கள் சாப்பிட வைப்பதென்பது அனேக அம்மாக்களுக்கு சவாலான காரியம். ஜூஸாக, மில்க் ஷேக்காக, சாலட்டாக - இன்னும் எப்படிக் கொடுத்தாலும் பழங்களைச் சாப்பிட ‘பெப்பே’ காட்டும் குழந்தைகளை என்னதான் செய்ய? ‘‘ஜாம் செய்து கொடுத்துப் பாருங்க... ஜம்முனு சாப்பிடுவாங்க...’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த வி.சுமதி. இரண்டு, மூன்று வகையான ஜாம்களை பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருக்கும் நமக்கு, வி.சுமதியின் கைவண்ணத்தில் தயாராகிற விதம் விதமான ஜாம்கள், எந்தக் குழந்தையையும் பழம் சாப்பிடப் பழக்கும் என்பது நிஜம்!

‘‘எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். டியூஷன் எடுக்கிறது, கேட்டரிங்னு பல வேலைகளைச் செய்யறேன். ஜாம் தயாரிப்பும் அதுல ஒன்று. ஒரு கேட்டரிங் ஆர்டருக்கு சும்மா ஆர்வத்தின் பேர்ல வித்தியாசமான சுவையில நான் செய்து கொடுத்த ஜாம், மிகப்பெரிய பாராட்டை வாங்கித் தந்தது. அது அப்படியே வாய்வழி விளம்பரமாகி, ஜாமுக்கான ஆர்டர் குவிய ஆரம்பிச்சது. கடைகள்ல மிக்ஸட் ஃப்ரூட் ஜாம், மாம்பழ ஜாம், ஆப்பிள் ஜாம்னு குறிப்பிட்ட சில டேஸ்ட்லதான் ஜாம் கிடைக்கும்.

நான் வாழைப்பழம், பலாப்பழம், பப்பாளி, கிர்ணி, கொய்யானு சதைப்பற்றுள்ள எல்லா பழங்கள்லயும் ஜாம் தயாரிக்கிறேன். குழந்தைகளுக்கான தயாரிப்புங்கிற தால, அதிக கெமிக்கல் சேர்க்கிறதில்லை...’’ - ஆர்வம் கிளப்புகிற சுமதி, 1 கிலோ ஜாம் தயாரிப்புக்கு 500 ரூபாய் முதலீடு போதுமானது என்கிறார்.‘‘நீர்ச்சத்து நிறைஞ்சது தவிர்த்து, சதைப்பற்றுள்ள எந்தப் பழத்துலயும் ஜாம் செய்யலாம். சீசனுக்கேத்த பழங்கள், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், பிரிசர்வேட்டிவ், ஸ்டெரிலைஸ் செய்த பாட்டில்கள்...

இவைதான் தேவையான பொருட்கள். வாடிக்கையாளர்கள் எந்த பழத்துல ஜாம் கேட்கறாங்களோ, அதுக்கேத்தபடி பொருட்களை வாங்கிக்கலாம். கடைகள்ல விற்கறதைவிட, 10 - 20 ரூபாய் குறைச்சுக் கொடுத்தா, பிசினஸ் சீக்கிரம் வளரும். சுத்தத்துலயும் தரத்துலயும் கவனமா இருந்தா 40 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்கிற வி.சுமதியிடம், ஒரே நாளில் 5 ஜாம் வகை களைக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய்.(93802 32286)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites