இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 21, 2014

இஞ்சி (ஜின்ஜிபெர் அப்பிசினேல்)


ஜின்ஜிபெரேசியே 
இஞ்சி செடி
 இரகங்கள்இடைவெளி
 மண் மற்றும் தட்பவெப்பநிலைஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
 பருவம்ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு
 விதையளவுஅறுவடை
 விதை நேர்த்திமகசூல்
 

இரகங்கள் :
ரியோ - டி – ஜெனிரோ, மாரன் நடன், சுருச்சி, சுபிரபா, சுரவி, ஐஐஎஸ்ஆர் ,வராதா, ஐஐஎஸ்ஆர் மகிமா,ஐஎஸ்ஆர் ,ரிஜாதா அதிரா மற்றும் கார்த்திகா. 


உள்நாட்டு தொகுப்புகள்
வ.எண்பயிரிடுதல்சிறப்பு பண்புகள்
1 அஸ்ஸாம் தடித்த தண்டு, நல்ல நறுமணம் மற்றும் சுவை
2 பர்த்வான் – 1 தடித்த தண்டு காரமானது.
3 எர்னாடு செர்நாடு தடித்த தண்டு காரமானது.
4 ஹிமாச்சல் பிரதேஷ் தடித்த தண்டு, எலுமிச்சை மணம், உலர்ந்த இஞ்சி
5 நாடியா மெல்லிய தண்டு, எலுமிச்சை மணம், உலர்ந்த இஞ்சி
6 வயநாடு தடித்தது, காரமானது மற்றும் குறைந்த  நார்ச்சத்துடையது.
7 துரா மெல்லிய தண்டு

மகசூல் மூலம் தேர்வு வகைகள்
வ.எண்தன்மை / பண்பியல்புபயிரிடு / இணைப்பு
1. அதிக மகசூல்
 (புதிய மற்றும் உலர்ந்த)
  யு.பி. ரியோ – டி – ஜெனிரோ, திங்க்புரி, காராக்கல் /சுப்பிரபா / அனாமிகா< /td>
 எஸ்ஜி – 646, (கேரளா), எஸ்ஜி – 666 (ஹிமாச்சல் பிரதேஷ்)
 மாரன், நாடியா, நரஷபட்டினம், சுப்பிரபா,சுருச்சி
 வயநாடு, எர்னாடு செர்நாடு, வயநாடு, சைனா, எஸ்ஜி-876, எஸ்ஜி -882, எஸ்ஜி 705, எஸ்ஜி – 700
 ஹிம்கிரி, IISR வரதா, IISR ரெஜிதா, IISR மஹிமா
2. தடித்த தண்டு சைனா, டாபின்கிவா, பைசி, சைனா, எண்.117,35,15,27
 வரதா, குருபதன், எஸ்ஜி – 35
3. மெல்லிய தண்டு சுருச்சி, குண்டுளி லோக்கல்
4. குறுகிய காலம் செய்ரா - லியோன்

தரத்தின் அடிப்படையில் தேர்வு வகைகள்
வ.எண்தன்மை / பண்பியல்புவகைகள் /பயிரிடு இணைப்பு
1. உயர் உலர் மீட்பு டியூரா லோக்கல் (29%) டியூரா –(28%), தொடுபுழா (22%) குறும்பப்பாடி(23%),நாடியா(22%)
2. உயர் ஒலியோரெசின் அஸ்ஸாம் (9.3%), ரியோ – டி – ஜெனிரோ (10.5%), மாரன்(10%)
3. உயர் அத்தியாவசிய எண்ணெய் மன்னன்தோடி (2.2%), காராக்கல் (2.4%), எல்லக்கள்ளன் (2.6%)
4. குறைந்த நார் சத்து சைனா (3.4%), யுபி (3.7%) நாடியா (3.9%)
5. உயர் சுக்கு மகசூல்(டன்/ எக்டர்) ரியோ – டி – ஜெனிரோ, மாரன் (3.27), திங்க்புரா (2.79), மாரன் (4.4) நாடியா(3.8)
6. உயர் ஜின்ஜிபெரின் மற்றும் ஜின்ஜரால் பக்ரிகா மற்றும் அமராவதி
7. உப்பு இஞ்சி Acc.Nos. 35 & 37
மண் மற்றும் தட்பவெப்பநிலை : காற்றோட்டமான வடிகால் வசதியுள்ள, இருமண்பாடான நிலங்கள் மிகவும் உகந்தது. மழையளவு ஆண்டுக்கு 150 செ.மீ கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் உள்ள பகுதியில் இறவைப் பயிராகப் பயிரிடலாம்.
பருவம் :மே - ஜூன்.
விதையளவு : எக்டருக்கு 1500-1800 கிலோ இஞ்சிக் கிழங்குகள்.
விதை நேர்த்தி:
விதை கிழங்குகளை ஒரு லிட்டர் நீரில் 3 கிராம் மேன்கோசெப் (அ) காப்பர் ஆக்ஸி குளோரைடு (அ) 200 பி.பி.எம். ஸ்டெரெப்டோசைக்கிளின் கொண்டு 30 நிமிடங்கள் ஊர வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இடைவெளி :
பாசனப் பயிர் – 40 x 20 செ.மீ (பாத்திகளில்) மானாவாரிப் பயிர் - 20x20 செ.மீ (அ) 25x 25 செ.மீ (மேட்டுப் பாத்திகளில்)
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:
உரமிடுதல் 
அடியுரமாக தொழுஉரம் ஒரு எக்டருக்கு 40 டன் என்ற அளவில் கடைசி உழவு அல்லது முள் போடுவதற்கு முன் இடவேண்டும். பின்பு எக்டருக்கு 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்தை இட்டு நடவு செய்ய வேண்டும். மேலுரமாக எக்டருக்கு 37.5 கிலோ தழைச்சத்தையும் 12.5 கிலோ மணிச்சத்தையும் நடவு செய்த 45 மற்றும் 90 ஆவது நாட்களில் இட்டு மண் அணைக்க வேண்டும். இஞ்சி செடிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவுடன் 25 சதவீதம் நிழல் இருக்குமாறு பராமரிப்பதால்  மகசூல் திறனை அதிகரிக்கலாம்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
நடவு செய்தவுடன், பச்சை இலைகளைக் கொண்டு நிலப்போர்வை அமைக்கவேண்டும். மேலுரம் இடும்போது மண் அணைத்து நீர் தேங்காமல்  செய்யவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு:
பூச்சி
தண்டுத்துளைப்பான் : இதனைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 30 இசி, 2 மிலி/லிட்டர் தண்ணீர் அல்லது பாஸ்போமிடான் ஒரு மில்லி/லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
இலைச்சுருள் பூச்சி
கட்டுப்படுத்த கார்பரில் 50 சதம் நனையும் தூள் அல்லது குயினால்பாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.
நோய்கள்
இலைப்புள்ளி நோய் : இதனைக் கட்டுப்படுத்த 1 சதவீதம் போர்டோக் கலவை அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 0.2 சதம் தெளிக்கவேண்டும்.
கிழங்கு அழுகல் நோய்
வடிகால் வசதியை மேம்படுத்தியும் விதை உபயோகத்திற்காக நோய் தாக்காத விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்தும் விதைக்கிழங்குகளை மேன்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு என்ற பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் என்ற அளவில் தயாரித்த கரைசலில் 30 நிமிடம் ஊரவைத்து விதை நேர்த்தி செய்தும் கட்டுப்படுத்தலாம். சேமிப்பிற்கு முன் ஸ்ரெப்டோசைக்கிளின் 200 பி.பி.எம் (ஒரு லிட்டர் நீருக்கு 200 மி.கி.) கரைசலில் ஊரவைத்து சேமிப்பதாலும் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். தொழு உரத்தை அதிக அளவில் இடுவதன் மூலம் நோயின் தீவிரம் குறைவதோடு மட்டுமல்லாமல் மகசூலும் அதிகரிக்கிறது.
அறுவடை:
8-9 மாதங்களில் பயிர் அறுவடைக்கு வந்துவிடும். இலைகள் பழுப்படைவதும், காய்வதும் அறுவடைக்கான அறிகுறியாகும்.
இஞ்சிஉலர்ந்த இஞ்சி
மகசூல் : எக்டருக்கு 12-15 டன்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites