இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, December 14, 2012

நாங்களும் தொழிலதிபர்தான் நாப்கின் தயாரிப்பில் கலக்கும் சகோதரி
சுய உதவிக்குழு ஆரம்பித்தால் பணம் எல்லாம் கொடுப்பாங்க...வட்டிக்கு கொடுத்து பெருக்கலாம். பங்கு போட்டு பிரித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தான் 12 பேருடன் இதை துவக்கினோம். இப்போது நாங்கள் 16 பேர் சகோதரிகள்(சுய உதவி குழுவின் பெயரும் சகோதரி தான்). ஆனால் இப்போது எங்களாலும் பெரிய தொழிலதிபராக முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்கிறார் ஜெயந்தி. ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஜெயந்தி, சுய உதவிக்குழு துவங்குவதற்கு முன் சொந்தமாக தையல் தொழில் செய்து வந்தார்.

சுய உதவிக்குழு தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் சொந்த தொழில் தொடங்கி ஒவ்வொரு உறுப்பினரும் கை நிறைய ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சகோதரியை பெரிய நிறுவனமாக மாற்றுவதே எங்கள் லட்சியம் என 16 பேரும் உறுதி பூண்டுள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் பெரும்பாலானோர் மெழுகுவர்த்தி உற்பத்தி, மசாலா உற்பத்தி, பொம்மைகள் தயாரிப்பு, கைவினை பொருட்கள் தயாரிப்பு, எம்ப்ராய்டரி டிசைனிங், ஆடை தயாரிப்பு என பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர்.

ஆனால் இவர்களது இலக்கு குறைந்த முதலீடு, எளிதான வியாபாரம், கை நிறைய சம்பாத்தியம் என்பது தான். பெண்களை சார்ந்த வர்த்தகமாக இருந்தால், சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என நம்பினர். அதன் வெளிப்பாடு தான் நாப்கின் தயாரிப்பில் இறங்கியது. இதுபற்றி சகோதரி மகளிர் சுய உதவிக்குழு ஊக்குநர் மலர்கொடி, பிரதிநிதிகள் ஜெயந்தி, அமராவதி, உறுப்பினர் இந்திரா ஆகியோர் கூறியதாவது:

புதுக்கோட்டை யில் மகளிர் சுயஉதவிக்குழுவின ருக்கு பல்வேறு தொழி ல்கள் துவங்குவதற்கான பயிற்சியும், அதற் கான இயந்திரங்களையும் மானிய விலையில் வழங்கவும், அதற்கு தேவையான நிதியை வங்கியில் இருந்து கடனாக பெற்று தருவதாகவும் மகளிர் திட்ட அலுவலர் உறுதியளித்தார். அதன்படி எங்களது சுய உதவிக்குழுவில் இருந்து 3 நபர்களை பயிற்சி பெற்று வருவதற்காக அனுப்பி வைத்தோம். சானிடரி நாப்கின்களுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளதால் அவற்றை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சியை பெறுவது என முடிவு செய்தோம்.

அதன்படி சானிடரி நாப்கின் தயாரிப்பது எப்படி என்பது குறித்து எங்கள் குழுவை சேர்ந்த 3 பெண்களும் பயிற்சி பெற்று வந்தனர். அவர்கள் மூலம் மற்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்ததும் புதுக்கோட்டையில் இருந்தே சானிடரி நாப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தையும் வழங்கினர். சானிடரி நாப்கின் தயாரிப்பு தொழில் துவங்க ரூ.2.5 லட்சம் வங்கியிலிருந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் ரூ.1.98 லட்சம் செலவில் புதிதாக சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரமும், நாப்கின் தயாரிப்பதற்கான லேசான துணியையும், பஞ்சு போன்ற உபபொருட்களையும் வாங்கினோம்.

இந்த இயந்திரம் மூலம் ஒரே அச்சு மூலமாக 10 நிமிடத்தில் 15 பேடுகளை தயார் செய்ய முடியும். ஒரு மணி நேரத்தில் 100 பேடு வரையிலும் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 2 பேர் மட்டுமே போதுமானது. இப்போது அனைவருக்கும் தொழில் தெரியும். உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் போக மீதி 14 பேரும் சந்தைப்படுத்துதலில் ஈடுபடுகிறோம். நாங்களே நேரடியாக சென்று ஆர்டர் பிடிப்பதால் இதில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல வர்த்தக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

முன்பெல்லாம் வங்கியில் இருந்து வாங்கும் கடனை எப்படி தவணை மாறாமல் கட்டுவது என்ற கவலை எங்களுக்கு இருக்கும். இப்போது நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு தொழிலதிபர்களாக உணர்வதாலும், சொந்த காலில் நிற்பதாலும் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே சானிடரி நாப்கின் தயாரிப்பு தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. எப்படியும் ஒரு நாள் நாங்களும் இந்த தொழிலில் முத்திரை பதிப்போம். இவ்வாறு நம்பிக்கையுடன் கூறினர்.

இவர்களது இலக்கு குறைந்த முதலீடு, எளிதான வியாபாரம், கை நிறைய சம்பாத்தியம் என்பது தான். பெண்களை சார்ந்த வர்த்தகமாக இருந்தால், சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என நம்பினர். அதன் வெளிப்பாடு தான் நாப்கின் தயாரிப்பில் இறங்கியது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites