இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, December 13, 2012

கிராஃப்ட்- முத்துமணி மாலை!



``இந்தப் பூமி இருக்கிறவரை, அதில் பெண்கள் இருக்கிற வரை ஃபேஷன் ஜுவல்லரியும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் வித்தியாசமாக விதவிதமாக தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, அணிந்திருக்கிறவர்களையும் ஜொலிக்க வைக்கும்`` என்று வார்த்தைக்கு வார்த்தை ஃபேஷன் ஜுவல்லரியின் பெருமை பேசுகிறார் சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த சாய்நாமகிரி. பாராதியார் பணிபுரிந்த மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் டிராயிங் டீச்சராக அறியப்பட்டவர், தன் கலைத்திறமையால் கிராஃப்ட் டீச்சராகவும் பெயர் வாங்கியிருக்கிறார். மகளிர் தின கொண்டாட்டத்துக்கு மேலும் சுவைகூட்டும் வகையில் இந்த இதழில் ஃபேஷன் நகைகள் செய்யக் கற்றுத்தருகிறார். ஆன்ட்டிக் அழகுட மிளிரும் முத்துமணி மாலையும் அதற்கு மேட்ச்சிங்கான கம்மலும் செய்யக் கற்றுத்தருகிறார் சாய்நாமகிரி! 

தேவையான பொருட்கள்
கட்டர், டைட்டர், கியர் ஒயர், கியர் லாக், க்ளோஸ்டு ரிங், செயின் ஹூக், இரண்டு நிறங்களில் முத்து மணிகள், தங்க நிற மணிகள், ஸ்பிரிங் ரிங், டாலர்.

 
 
 
செய்முறை:
  • ந்த முத்து மாலையை கழுத்துக்கு நெருக்கமாகப் போட்டால்தான் அழகாக இருக்கும். அதனால் அந்த அளவுக்கு ஏற்ப கியர் ஒயரை 24 இன்ச் அளவுக்கு கட் செய்யவும். அதன் ஒரு முனையில் க்ளோஸ்டு ரிங் வைத்து முடிக்கவும். பின்பு கியர் லாக்கை வைத்து பிளேயரால் இறுக்கவும் (படம் 1). 
  • கியர் ஒயரில் 15 மெரூன் நிற மணிகளைக் கோர்க்கவும் (படம் 2). 
  • அதைத் தொடர்ந்து 3 பச்சை நிற மணி, 1 தங்க நிற மணி, 3 பச்சை நிற மணி, 1 தங்க மணி என வரிசையாகக் கோர்க்கவும் (படங்கள் 3, 4). 
  • இப்போது இதேபோல மெரூன் மணிகளைக் கோர்க்கவும் (படம் 5). 
  • மெரூன் மணிகளைத் தொடர்ந்து ஆறு பச்சை நிற மணி, மூன்று மெரூன் மணிகளைக் கோர்த்ததும் டாலரைக் கோர்க்கவும் (படம் 6). 
  • ஒரு பக்கம் முடிந்தது. இதேபோல டாலருக்கு அடுத்த பக்கமும் வரிசையாக மெரூன், பச்சை மற்றும் தங்கநிற மணிகளை மாற்றி மாற்றி கோர்க்கவும். முடிவில் க்ளோஸ்டு ரிங்கை நுழைத்து முடிச்சு போடவும் (படம் 7). 
  • பிறகு கியர் லாக்கை நுழைத்து லாக் செய்து, மீதியுள்ள ஒயரை வெட்டவும் (படங்கள் 8, 9). 
  • செயினின் இருபுறம் இருக்கும் க்ளோஸ்டு ரிங்கில் ஒருபுறம் ஸ்பிரிங்கையும் இன்னொரு புறம் செயின் ஹூக்கையும் கோர்த்து விட்டால் கழுத்துக்குக் கச்சிதமான மணிமாலை தயார் (படம் 10).
  • கோல்டன் ஊசியில் மெரூன் நிற மணி, தங்க நிற மணி, பச்சை நிற மணியை வரிசையாகக் கோர்க்கவும் (படம் 11). 
  • மணிகளைக் கோர்த்ததும் டைட்டர் வைத்து கம்பியை ரிங் வடிவில் வளைக்கவும் (படங்கள் 12, 13). 
  • இந்த வளையத்தினுள் கம்மல் ஹூக்குடன் இணைத்துவிட்டால் கம்மல் தயார் (படம் 14). 

இதேபோல இன்னொரு கம்மலையும் செய்யவும்.
 
புடவைக்கு மட்டுமல்லாமல், மாடர்ன் உடைகளுக்கும் பொருந்திப்போவதுதான் இந்த மணிமாலையின் சிறப்பு. இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் மைக்ரோ ரகம் என்பதால் ஒரு செட் செய்ய குறைந்தபட்சம் 60 ரூபாய் செலவாகும். மொத்தமாகப் பொருட்களை வாங்கிவைத்து செய்தால் ஐம்பது ரூபாய்க்குள் முடித்துவிடலாம். இந்த செயின் - கம்மல் செட்டை அதிகபட்சம் 120 ரூபாய்க்கு விற்கலாம். டாலர் மற்றும் செயினின் நேர்த்தியைப் பொருத்து விலையைச் சற்றே கூட்டலாம்.
-பிருந்தா கோபாலன்,
படங்கள்: துரை. மாரியப்பன்.
  

கம்மல்
தேவையான பொருட்கள்
மணிகள், கோல்டன் ஊசி, தங்கநிற மணிகள், கம்மல் ஹூக், ஸ்பிரிங், டைட்டர்.
 
கிராஃப்ட் வொர்க் ஷாப்

மணிமேகலை, அடையாறு:
மண்ணைக்கிளறி விளையாடுகிற குழந்தைப் பருவத்திலேயே அந்த மண்ணை விதவிதமான உருவங்களாகப் பிடித்ததன் மூலம் தனக்குள் இருக்கும் கலையார்வத்தை வெளிப்படுத்தியவர் மணிமேகலை. ஆரம்பத்தில் பூக்கள், பொம்மைகள் என செய்தவர், அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, பல கலைகளை முறைப்படி கற்றுத் தேர்ந்திருக்கிறார். தானறிந்த கலைகளை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றவர்களுக்குக் கற்றுத்தந்து கலைசேவையும் புரிந்து வருகிறார். பூமிக்குக் கேடு விளைவிக்காத ஈகோ ஃப்ரெண்ட்லி கிராஃப்டை செய்வது இவரது இன்னொரு சிறப்பு. பள்ளி, கல்லூரிகளிலும் வொர்க்ஷாப் நடத்தியிருக்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு இலவச கிராஃப்ட் வகுப்பும் எடுத்திருக்கிறார். கலையோடு கருணையும் கலந்த இவரது அணுகுமுறைக்கு, பெண்கள் மத்தியில் ஏக வரவேற்பு!

சுதா செல்வகுமார், போரூர்:
வீடு முழுக்க வியாபித்திருக்கிற அற்புதமான கலைப்படைப்புகளே சுதா செல்வகுமாரின் கலைத்திறமைக்கு சாட்சி. கடந்த 10 ஆண்டுகளாக கிராஃப்ட் வகுப்புகள் எடுத்து வருகிறார். பெயின்டிங், ஃபேன்ஸி பில்லோ, மெகந்தி, ஃபேன்ஸி பைகள், தோரணம், கீ ஹோல்டர், வுட் மியூரல், வாஸ்து மியூரல், கேண்டில் மேக்கிங், சாம்பிராணி தயாரிப்பு, ஃபிளவர் மேக்கிங், சாக்லெட் தயாரிப்பு, கிளே மோல்டிங், டெக்ஸ்டைல் பிரின்ட்டிங், கிரீட்டிங் கார்டு, மணி வேலைப்பாடு என இவருக்குத் தெரிந்த கலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அடிப்படை கலையுடன் தன் கற்பனையையும் சேர்த்து செய்வதால், சுதாவின் கலைப்படைப்புகள் அற்புத அழகோடு இருக்கின்றன. தொலைக்காட்சிகளில் கிராஃப்ட் நிகழ்ச்சி நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு.

மகாலட்சுமி, மேடவாக்கம்:
ஃபேஷன் டிசைனிங் படித்திருப்பதாலோ என்னவோ, தனது கிராஃப்ட் அனைத்திலும் புதுமையைப் புகுத்திவிடுகிறார் மகாலட்சுமி. எளிமையும் நவீனமும் நிறைந்த இவரது கலைப்படைப்புகள் அத்தனையும் அதிசயிக்க வைக்கிற ரகம்!
 

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites